அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி

தந்தை பெரியார் , தனக்குப் பிறகு தன் கொள்கைகளையும் இயக்கத்தையும் காப்பாற்றவும் பரப்பவும் வழி நடத்தவும் தகுதியும் நம்பிக்கையும் உள்ள தொண்டர்களாக நம்பித்தேர்வு செய்தார் இரண்டு மணிகளை- ஒருவர் அரசியல்மணி என்று முதலில் அழைக்கப்பட்ட மணியம்மை; இரண்டாமவர் கி.வீரமணி! தந்தை பெரியார் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்தக் கருத்துகளைப் பரப்பும் கடமையையும் தம் தலையில் தூக்கிச் சுமந்தார். அதைச் செயல்படுத்தும் களங்களையும் அமைத்து, முதல் தொண்டனாகத் தன்னையே முன்னிறுத்தினார். சிறைவாசம் என்று வந்த போது சிரித்தContinue reading “அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி”

நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றால் மனதில் ஒரு புத்துணர்வு பிறக்கும் . எனக்கும் அப்படியே. அதனால் எவ்வளவு தொலைவாயினும் பயணம் செய்து எத்தனையோ பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ஊர்வலங்களிலும் திருமணங்களிலும் கல்லூரி மாணவர்களின் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறேன். துயரம் மிகுந்த மனநிலையோடு பங்கேற்ற திலீபனின் நினைவேந்தல் கூட்டங்களிலும் ‘மருத்துவர்’அனிதாவின் முடிவு பற்றியும் கண்ணீருடன் அழுதபடி பேசியிருக்கிறேன். ஆனால் அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு மேலையூர் என்ற சிற்றூரில்Continue reading “நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி”

திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு- 2 – தோழர் வெற்றிச்செல்வன்

‘இந்து’ என்ற சொல் தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியங்களிலோ, ஐம்பெருங்காப்பியங்களிலோ எதிலும் இடம்பெறவில்லை. ஏன், வேத, உபநிடதங்களிலேயே கிடையாது. வெள்ளைக்காரன் வைத்த பெயர்தான் ‘இந்து’ என்பது. 1799-இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் தொகுத்த ‘இந்து மதச் சட்டத்தில்’ தான் இந்து என்கிற பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அதுவும் இந்து என்பதற்கு நேர் விளக்கமெல்லாம் கிடையாது. “யாரெல்லாம் கிறித்தவர்கள், இசுலாமியர்கள், பார்சிக்கள் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள்” என்ற எதிர்மறை விளக்கமே உள்ளது. இதனால் சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்களும்Continue reading “திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு- 2 – தோழர் வெற்றிச்செல்வன்”

அசுரன் நமக்கானவன் – பூ.கொ.சரவணன்

‘வெக்கை எதார்த்தமாகப் பிறந்ததுதான். பெரிய பின்னணி எதுவும் கிடையாது. நானறிய நடந்த கதை. பசுமையான இலையைப் பூச்சி கொறித்தது போல் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களைக் கோர்த்து அவனது மனவெக்கையுடன் சொல்லனுமென்று ரெம்ப நாளாக எனக்குள் ஒரு துடிப்பு. மலங்காடு, மயானம், கண்மாய், அய்யனார் கோயில் என்று நான் சுற்றித் திரிந்த எனது இளமைக்கால அனுபவங்களைக் கொலைச் சம்பவத்துடன் பொருத்திப் பார்த்தேன். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எழுத முடிந்தது. கொலை செய்தது சிதம்பரம். காட்டுக்குள் திரிந்தது நான்Continue reading “அசுரன் நமக்கானவன் – பூ.கொ.சரவணன்”

‘‘என்னைய படிக்க விடுவாங்களாம்மா?’’ – தோழர் ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து லண்டன்

திணை: நிலம் – தமிழ் நாடு. பொழுது – மார்கழி. துறை: கல்வி, அறிவு, சமூக நீதி, பகுத்தறிவு அது ஓர் அழகிய கிராமம். காட்டை ஒட்டிய கிராமம். காட்டு எல்லையில் ஓர் அழகிய அருவி பால் நிறத்தில் நளினமாய் நடனமாடி நிலம் நோக்கி விழுகிறது. அருவியை சுற்றிலும் பச்சை பசேலென கொத்து கொத்தாய் மரங்கள். குருவிகள் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கின்றன. அருவியில் இருந்து கீழே ஓடும் ஓடையில், நான்கு கால்கள் நடந்து செல்கின்றன. ‘செல்கின்றன’Continue reading “‘‘என்னைய படிக்க விடுவாங்களாம்மா?’’ – தோழர் ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து லண்டன்”

“திராவிடர் கழகத்திற்கான தேவை முன்னெப்போதையும்விட இப்போதுதான் அதிகம்”

திராவிடர் கழகம் தனது பவள விழாவை (27 ஆகஸ்ட் 2019) கொண்டாடும் நிலையில், அந்த இயக்கத்தின் தற்போதைய தேவை, சாதனைகள், எதிர்கால லட்சியங்கள், அக்கட்சி மீதான விமர்சனங்கள் குறித்து விரிவாகப் பேசினார், அந்த அமைப்பின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வ நாதனிடம் பேசியதிலிருந்து: இந்த இயக்கம் துவங்கப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. திராவிடர் கழகம் என்ற இந்த அமைப்புக்கு இனிமேலும் தேவைContinue reading ““திராவிடர் கழகத்திற்கான தேவை முன்னெப்போதையும்விட இப்போதுதான் அதிகம்””

காயலான்கடை பொருளாதாரம்! – தோழர் க.அருள்மொழி

குறளாசான் வள்ளுவர் பொருளாதார ஆசானாக சொன்னது, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இந்தக் குறள், தனி மனிதன் ஈட்டும் ‘பொருளுக்கும்’ பொருந்தும் அரசாங்கம், வரி முதலியவற்றால் ஈட்டும் பொருளுக்கும் பொருந்தும். ஆனால், அண்மைக்காலமாக, அரசாங்கம் ஈட்டும் வரி வருவாய் எல்லாம் எங்கு போகின்றதென்று தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் பொது மக்கள். மக்கள் கொடுக்கும் வரிப்பணமெல்லாம் பெரு முதலாளிகளின் வயிற்றில் இடப்படுகிறது என்று அரசியல் விஷயமறிந்தோர் சொல்கிறார்கள். வருகின்ற வருமானத்தை பகுத்துக் கொடுத்து எல்லோரையும்Continue reading “காயலான்கடை பொருளாதாரம்! – தோழர் க.அருள்மொழி”

அறம் என்றால் ‘திருக்குறள்’ மருந்தென்றால் ‘சித்தர்கள்’ ஆன்மீகம் என்றால் ‘வள்ளலார்’ – தோழர் அ.அருள்மொழி

(12.08.2019 சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் பெரியாரியல் உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் வழக்கறிஞர் அ.அருள்மொழி ஆற்றிய உரை…) திருக்குறள் மாநாடு “அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்” பகையோ, எதிர்ப்போ எதுவும் எஞ்சாதபடி இடம் பார்த்து செயல் செய்ய வேண்டுமென்றால் அஞ்சாமை என்பதைத் தவிர வேறு துணை இல்லை.  அதனால் பகையை மிச்சமில்லாமல் முடிக்க வேண்டும் என்றால்  அதற்கு நீங்கள் எதைத் துணை கொள்ளவேண்டும்? என்றால் , அஞ்சாமை என்பதைத் தவிரContinue reading “அறம் என்றால் ‘திருக்குறள்’ மருந்தென்றால் ‘சித்தர்கள்’ ஆன்மீகம் என்றால் ‘வள்ளலார்’ – தோழர் அ.அருள்மொழி”

பெரியாரின் கொள்கை காத(ல்)லி – தோழர் பா.மணியம்மை

நம்முடைய நாட்டில் விழாக்களுக்கு குறைவேயில்லை, அதற்கு அரசு கொடுக்கும் விடுமுறைக்கும் பஞ்சமில்லை, ஒவ்வொரு மாதமும் கடவுள்களின் பெயரால், மதத்தின் பெயரால் சடங்குகளின் பெயரால் எதற்காகக் கொண்டாடுகிறோம் என்றே தெரியாமல் பக்தி போதையில் மூழ்கிக் கிடக்கிறோம், கொண்டாடுகிறோம். பிறக்காத கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தியும், பிறந்து, தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் ராமனுக்காக ராம நவமி என்று கொண்டாடுகிறோம். சிவன், பெருமாள், கிருஷ்ணன், ராமன், அய்யப்பன் பக்தர்களாக இருந்திட என்னைப் போன்ற ஆத்திகவாதிகளையும் சிந்திக்க வைத்து பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத் துவம்,Continue reading “பெரியாரின் கொள்கை காத(ல்)லி – தோழர் பா.மணியம்மை”

திருக்குறளைப் பழித்தாரா பெரியார்? – தோழர் வெற்றிச்செல்வன்

கடந்த 24.05.2019 அன்று இந்து-தமிழ் நாளிதழுக்கு, துக்ளக் ஆசிரியர் திரு. எஸ். குருமூர்த்தி அளித்துள்ள பேட்டியில், ‘பெரியார் திருக்குறளை மலம் என்றார்’ என்று கூறியுள்ளார். தந்தை பெரியார் குறித்த இவ்விதமான அவதூறுகள் பல, காவிகளாலும், போலித் தமிழ்த்தேசியவாதிகளாலும் சமூக ஊடகங்களில் தொடந்து பரப்பப்பட்டு வருகின்றன. உண்மையில் திருக்குறள் குறித்துத் தந்தை பெரியார் கொண்டிருந்த பார்வை என்ன என்பதை நாம் சிறிது ஆராயலாம். பெரியாருக்குத் திருக்குறள் அறிமுகமானது எவ்வாறு? திருக்குறளைத் தமக்கு அறிமுகம் செய்து வைத்ததாகத் தந்தை பெரியார்Continue reading “திருக்குறளைப் பழித்தாரா பெரியார்? – தோழர் வெற்றிச்செல்வன்”