கீழடியால் மேலெழுந்த திராவிடம்!

“இந்தியாவில் காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது அரசியல் போராட்டம் அல்ல, ஆரியர் திராவிடர் போராட்டம்தான்“ இது தந்தை பெரியாரின் கூற்று. அந்தக் கூற்றை கீழடியும்  உண்மையாக்கியிருக்கிறது. இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடைபெற்றபோதே மாறுதல் செய்யப்படுவதற்கு அத்துறையின் சட்டதிட்டத்திலேயே இடம் இல்லாத நிலையில், அமர்நாத் இராகிருஷ்ணன் அவர்கள் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு மாறுதல் செய்யப்பட்டார். கீழடி வைதீகத்திற்கு ஏக கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்? கீழடி ஆரியர் திராவிடர் போராட்டத்தில், திராவிடர்களுக்கு ஒரு அரிய போர்க்கருவியை அகழாய்வின் மூலம் கொடுத்திருக்கிருக்கிறது. சும்மா இருப்பார்களா அவாள்கள். அவருக்குப் பதிலாக சிறீராம் என்பவர் கீழடியின் மூன்றாம் கட்ட ஆய்வுக்கு நியமிக்கப்பட்டார். அவர் என்ன செய்தார் தெரியுமா? “மூன்றாம் கட்ட ஆய்வில் ஏற்கனவே கண்டறியப்பட்ட கட்டட அமைப்புகளோ, புதிதாக வேறு அமைப்புகளோ கண்டறியப்படவில்லை. ஆகவே கீழடியில் ஆய்வுகள் தொடரவேண்டிய அவசியமில்லை” என்று அறிக்கை கொடுத்து விட்டார்.

சரி, ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? கைபர்போலன் கணவாய் வழியே வாழ்வு தேடி உள்ளே வந்த வந்தேரிகளான ஆரியர்கள், இங்கே வாழ்ந்து கொண்டிருந்த நம் மக்களைக் கண்டு வியந்திருக்கிறார்கள்! அவ்வளவு நாகரிகமாய் நாம் வாழ்ந்திருக்கிறோம். எப்போது? கி.மு. 2,500ஆண்டுகளுக்கு முன்பே! அதாவது 4,500 ஆண்டுகளுக்கு முன்பே! இந்த சந்திப்பு எங்கே நிகழ்ந்தது? சிந்துசமவெளி நாகரிகத்தில்! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்று வாழ்ந்த தமிழினம் ஆரியர்களை இங்கே சேர்த்துக் கொண்டு வாழ எந்தத் தடையும் விதிக்கவில்லை! பிறகு என்னாயிற்று? அவாள்களின் பிறவிகுணம் காரணமாக, தாங்கள் வந்தேறிகளல்லர்? இங்கேயே குடியிருந்தவர்கள் என்பதை எண்பிக்க முயன்று, இன்றுவரை விக்ரமாதித்தன் போல அந்த முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சூழ்ச்சியை விதைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

அடல்பிகாரி வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோசி, சிந்துசமவெளி நாகரிகத்தின் அடையாளச் சின்னமான காளையை, குதிரையாக கணினி வரைகலை மூலம் மாற்றிவிட்டு, “பார்த்தீர்களா, பார்த்தீர்களா நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்தான்’’ என்றார்.  எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டார்! கைவிட்டனர்!  சரஸ்வதி நதிக்கரை நாகரிகத்தை  அகழ்ந்தெடுத்து காட்டுகிறோம் பாருங்கள் என்று கோடி கோடியாக செலவழித்துக் கொண்டேயிருப்பவர்கள். அவர்களின் இலக்கியங்களான புராணங்களிலிருக்கும் கட்டுக்கதைகளை, பிரதமர் உள்பட அறிவியல் மாநாடுகளிலேயே கூச்சநாச்சமின்றி பேசுபவர்கள். அப்படியிருக்கும் போது, ஜாதி, மத, கடவுள் போன்ற சின்னங்கள் அற்ற, அதாவது ஆரிய கலாச்சாரத்திற்கு முந்திய திராவிடக் கலாச்சாரத்தை கண்டுபிடித்துக் காட்டினால் எப்படி இருக்கும்? பேச நா இரண்டுடையாய் போற்றி! போற்றி! என்று அறிஞர் அண்ணா சொல்லிக் காட்டியது போல, ‘நாங்கள் கீழடி ஆய்வுக்கு தடையே விதிக்கவில்லை’ என்று வெளியில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக சங்ககால இலக்கியங்களிலேயே ஜாதிப் பாகுபாடுகளுக்கான கூறுகள் கிடையாது என்பர் வரலாற்று அறிஞர்கள். பாபாசாகேப் அம்பேத்கர் இந்திய முழுவதும் வாழ்ந்த பூர்வகுடிகள் நாகர்கள்தான் என்கிறார். அவரது ஆய்வில் ஆரியர்கள் வந்தேறிகள்தான்! நாகாலாந்து, நாகர்கோயில் என்று இன்று இருக்கும் இடங்களை இன்றும் சுட்டிக்காட்டி அம்பேத்கரின் கருத்தை எடுத்துக் கூறுவர். அதுமட்டுமல்ல, உலக அளவில் புகழ் பெற்ற தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள், மரபணு ஆய்வறிஞர்கள் “இந்தியாவில் வாழ்ந்தது திராவிடர்கள்தான்” என்பதை அறிவியல் பூர்வமாக நிருவிக்கொண்டேயிருக்கின்றனர். இன்னுமொன்று, இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த கல்வெட்டுகளில் 60% தமிழ்பிராமி எழுத்துக்கள்தான் கிடைத்திருக்கின்றன. இதன் பொருள் என்ன? இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதுதான். 1950 வரை இந்திய வரலாற்றில் பவுத்த இந்தியா கிடையாது. காரணம் அசோகர் கால கல்வெட்டுகளை இவர்களால் படிக்க முடியவில்லை. படிக்கமுடியவில்லை என்பதைவிட, அதை வெளிக்கொண்டுவர  ஆரியர்கள் விரும்பவில்லை. ஆனால் பிரிட்டீசார் இங்கே வந்தபிறகு, அசோகர் கால கல்வெட்டுகளை படிக்கவென்றே ஒரு அகரமுதலியை உருவாக்கினர். அதன் மூலம் ஜேம்ஸ் பிரின்சு என்ற தொல்லியலாளர் ‘பிராமி’ எழுத்துக்களைப் படித்தார். அதன்பிறகுதான் பிராகிருத இலக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

இவர்கள் நமது தொன்மங்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு

செய்துகொண்டிருந்த வேளையில் பிரிட்டீசார்தான் பல விசயங்களை வெளிக்கொணர்ந்தனர். அதில் முக்கியமானவர் தொல்லியலாளர் கன்னிங்காம்! அதேபோல் பிரான்சீஸ் வொயிட் எல்லீஸ் மற்றும் கால்டுவெல் போன்றோர் வைதீக நாகரிகத்திற்கு துளியும் தொடர்பில்லாத திராவிட நாகரிகம் ஒன்று தொன்மைக்காலம் தொட்டே இந்நிலப்பரப்பில் இருந்துவந்துள்ளது என்று உலகறியச் செய்தார்கள். இந்த அரிய உண்மைகளை மறைக்கவே, இந்திய சுதந்திரத்திற்கு கொஞ்சமும்

பாடுபடாத, பிரிட்டீசாரிடம் நத்திப்பிழைத்தவர்கள், இன்று வெள்ளையர்களுக்கு வால்பிடிக்கிறவர்கள் என்று, உரிமை பேசுகிற நம்மவர்களை கொச்சைப் படுத்துகிறார்கள்.

சரி, இப்படியெல்லாம் பெருமைப்படும் அளவுக்கு கீழடி என்னதான் சொல்கிறது? இந்திய நாகரிகத்தையே வைதீக நாகரிகம்? வேதநாகரிகம்? என்றெல்லாம் தவறாக சித்தரித்திருக்கும் சூழலில், இந்திய வரலாற்றை கங்கைக் கரையிலிருந்து தொடங்கக்கூடாது. காவிரிக்கரையில் இருந்துதான் தொடங்கவேண்டும் என்று அறிஞர் அண்ணா உட்பட பல வரலாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுச் சொல்லியிருக்கும் சூழலில், காவிரிக் கரையிலிருந்துகூட அல்ல, வைகைக் கரையிலிருந்து மாற்றி எழுதப்படவேண்டும் என்று உரக்கச் சொல்லியிருக்கிறது கீழடி!

மதுரையில் அல்லது சிவகங்கையில் இருப்பவர்களுக்கு பெரிதாக அறிமுகம் இல்லாத கீழடி இன்று உலகம் முழுவதும்

பேசு பொருளாகியிருக்கிறது! வெறுமனே ஒரு பேசுபொருளாக மாறவில்லை.  அது திராவிடர்களின் தொன்மையை பறைசாற்றும்

ஒரு பண்பாட்டுப் பொருளாக மாறிவிட்டது. இலக்கியங்களில்

காணக்கிடக்கும் வரலாற்றுத் தொன்மங்களுக்கு தரவுகளைக் கொட்டிக் கொடுத்துள்ளது கீழடி. இது மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குள் வருகின்றது. நாடாளுமன்றத் தொகுதி சிவகங்கை. கிராம பஞ்சாயத்தான கீழடியில் சுமார் 5,140 மக்கள் வசிக்கின்றனர். இதன் கிழக்கில் திருப்பரங்குன்றமும், மேற்கில் திருப்புவனமும்  அமைந்துள்ளது.  இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் இந்தக் கீழடி அமைந்துள்ளது. இந்த இடைப்பட்ட பகுதியைத்தான் சிலப்பதிகாரம் ‘மதுரை’ என்று குறிப்பிடுகிறது. அதாவது இன்றைய கீழடிதான் மதுரையாக இருக்கவேண்டும். அவசரப்படவேண்டியதில்லை.

தமிழகத் தொல்லியல் துறை 1961 இல் தொடங்கப்பட்டது. இதன் முதல் இயக்குநர் நாகசாமி. இவர் சமீபத்தில்தான் “திருக்குறள் மனுதர்மத்தின் சாரம்” என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். இவர் ஓய்வு பெற்றபிறகு தற்பொழுது நடன காசிநாதன் என்பவர் இயக்குநராக இருக்கிறார். தமிழக நினைவுச்சின்னங்களை பாதுகாத்தல், தேவையான இடங்களில் அகழாய்வு நடத்துதல்,

கலைப்பொருட்களை பாதுகாத்தல், கல்வெட்டுகளை நகலெடுத்தல், அவைகளை அச்சிடுதல், இந்தத் தகவல்களை யெல்லாம் புத்தக வடிவில் வெளியிடுதல் ஆகியவை இத்துறையின்

பணிகள் ஆகும். இதற்கு சென்னை, சிதம்பரம், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயமுத்தூர், நாகர்கோயில், தர்மபுரி என்று எட்டு மண்டலங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்திய அளவில் 5 முக்கிய நகரங்களில் தொல்லியல் அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் 4 வடஇந்தியாவிலும், 1 தென்னகத்தில் பெஙக்ளூருவில் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் 60% கர்நாடகாவிலும், 20% ஆந்திராவிலும், 10% தமிழகத்திலும் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

இப்படி தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சூழலில்தான் தென்னக தொல்லியல் துறையின் தலைவராக அமர்நாத் இராமகிருஷ்ணன் வந்தார். அதன்பிறகு, 2013 ஆண்டில், வைகைக் கரையின் இருபக்கமும் சுமார் 4 கி.மீ தொலைவுக்கு ஆய்வு செய்து 500க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறிந்து, அதில் முதன்மையானதாக கீழடி தெரிவு செய்யப்பட்டு, ஆய்வு செய்ய அனுமதி கோரும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 2014, 2015 ஆம் ஆண்டுகளில் முதல், இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மொத்தம் 5 கட்டங்களாக ஆய்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 1001 பானை ஓடுகளில் தமிழ்பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. யானைத் தந்தத்தில் சதுரங்கக் கட்டைகள் கிடைத்துள்ளன. பெண்கள் அணியும் ஆபரணத் துண்டுகள் 7 கிடைத்துள்ளன. 4000 க்கும் மேற்பட்ட கல்மணிகள், கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. அதைவிட முக்கியமாக ரோம் நாட்டில் பயன்படுத்தப்படும் ‘அரிட்டென்’ பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது. இதில்

கண்டெடுக்கப்பட்ட செங்கற்களில் சுண்ணாம்பு பயன்படுத் தப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதையும்விட முக்கியமானது மொகஞ்சதாரோ நாகரிகக் கூறுகள் கீழடியிலும் கண்டறியப்பட்டுள்ள.

மேலும் மதிப்புறு அணிகலன்கள், விளையாட்டுப் பொருட்கள், அரவைக்கல், கவின் பொருட்கள், சுடுமண் உருவங்கள், நாணயங்கள், நெசவுப்பொருட்கள், சுடுமண் சிற்பங்கள், பல்வேறு வடிவ பானைகள், தமிழ்பிராமிக்கு முந்தைய கீறல்கள் (கிராஃபிட்டி) ஆகியவையும் கண்டறியப் பட்டுள்ளன.

கீழடி ஆய்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியற்குக் காரணங்கள், கீழடியல் கண்டறியப்பட்ட உயிரின் எச்சங்கள் அமெரிக்கா மியாமி நகரிலுள்ள பீட்டா அமைப்பு மூலம் கார்பன் டேட்டிங் ஆய்வு செய்து, இதன் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என்று அறிதியிட்டுச் சொல்லிவிட்டது. முதல், இரண்டாம் கட்ட ஆய்வுகளில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என்றுதான் சொல்லப்பட்டது. மேலும், கீழடியில் கிடைத்த 70 எழும்புத் துண்டுகள் புனேவிலுள்ள ‘டெக்கான்’ கல்லூரிக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், கீழடியில் காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கினங்கள் வாழ்ந்திருக்கின்றன என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது. ஒப்பிட்டுப்பாருங்கள், சிந்துசமவெளி நாகரிகத்தில் உள்ள காளை, கீழடியிலும் இருக்கிறது. இன்னுமொன்று, இமயமலைகளில் வாழ்ந்த கவரிமான் பற்றி சங்க இலக்கியத்தில் வருகிறது. அப்படியென்றால் அங்கு வாழ்ந்த நம் மக்கள் இடம்பெயர்ந்து தென்னகத்திற்கு வந்திருக்க வேண்டும் என்றும் சான்றுகள் இருக்கின்றன. பாலகிருஷ்ணன் (அய்.ஏ.எஸ்) இடப்பெயர்கள் பற்றிய ஆய்வில்  சிந்து, ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் திராவிட இடப்பெயர்கள் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

கீழடியின் இன்னுமொரு முக்கியமான சிறப்பு 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எளிய மக்களும் கல்வி கற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். பானைகளில் அதைப் பயன்படுத்தியவர்களின் பெயர் பொறிப்புக்கள் தூய்மையான தமிழில் இருக்கின்றன. இருண்டுகிடந்த வரலாற்றில் கீழடி ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறது. அந்த வெளிச்சத்தில் ஆரியம் அம்பலப்பட்டுப்போய் கிடக்கிறது.  சிந்துசமவெளி நாகரிகத்தை அகழ்வாய்வு செய்த சர்.ஜான் மார்சல் என்ற தொல்லியல் அறிஞர், ‘ஆரியரல்லாத ஒரு சிறந்த நாகரிகம் இங்கே இருந்திருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார். சிந்துவெளி நாகரிகம் கி.மு.2,500. அதாவது 4,500 ஆண்டுகள்!

சிந்துசமவெளி நாகரிகத்தில் ஜாதிமுறை இருந்திருக்கிறது என்பது அண்மைக்கால திரிபுகளில் ஒன்று. அதற்கு அவர்கள் கூறுகின்ற ஆதாரம், அரண்மனைக்குப் பக்கத்தில் வரிசையாக சின்னச் சின்ன வீடுகள் இருக்கின்றன. அவைகள் சூத்திரர்கள் வாழ்ந்த வீடுகள் என்பதுதான் அந்தத் திரிபு. ‘அடிமை முறைகள் இருந்திருக்கக்கூடும். காரணம் உற்பத்தி முறை என்று இருந்தாலே அதற்கு உழைக்கும் அடிமை மக்கள் தேவைப்படுவர். மதத்சின்னங்கள் மன்னர்கள் மூலம் பின்னர் வந்தது. ஜாதியும் அப்படியே. களப்பிரர்கள் காலம் வரையிலும் ஜாதி இருந்ததற்கான குறிப்புகள் இல்லை என்று வரலாற்று அறிஞர்கள் திரிபுகளுக்கு பதில் கூறியுள்ளனர். கீழடி மகத சாம்ராஜ்யத்திற்கும் முற்பட்டது. அரிக்கமேடு, கொற்கை, அழகன்குளம், பூம்புகார் ஆகியவை துறைமுகப்பகுதிகள்! பொருந்தல், கொடுமணல் வணிகம் நடந்த பகுதிகள். அதாவது கல்மணிகள், கண்ணாடி மணிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட பகுதிகள்! ஆதிச்சநல்லூர் இடுகாட்டுப்பகுதி! கீழடி மட்டும்தான் மக்கள் வாழ்ந்த பகுதி! அதனால்தான் இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா முழுவதும் நடைபெற்ற ஆய்வுகளில் கிடைத்த கல்வெட்டுகளில் 60% தமிழ்பிராமி என்றால், அவை அனைத்தும் அரசன் வழி வரலாறு! கீழடி மக்கள் வழி வரலாறு!

அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 12 லட்சம் மட்டும்தான். இந்தத் தொகையில் 102 குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், சிறீராம் தலைமையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட ஆய்வுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 40 லட்சம். இதில் பாதியை அவர் செலவழிக்கவேயில்லை. அவர் வெட்டிய குழிகள் 16 மட்டுமே! இதற்கு மேல், ஆய்வே தேவைப்படாது என்ற பரிந்துரை வேறு!

சுமார் 100 ஆண்டுகாலமாக பார்ப்பனரல்லாதார் இயக்கமான

திராவிடர் கழகம், அதன் அரசியல் வடிவங்களில் இருந்த கட்சிகள் இனவுணர்வு, மொழியுணர்வு, வரலாற்றுணர்வு என்று இடைவிடாமல் பேசியும், எழுதியும், போராடியும் வந்ததன் விளைவாக கைவரப்பெற்றிருந்த விழிப்புணர்வால், ஆரிய சூழ்ச்சியை தொடக்கம் முதலே தமிழர்கள் புரிந்து கொண்டனர்.

தமிழகத்தை பெரியாரியத் தத்துவ ரீதியாக வழிநடத்திச் செல்லும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதற்கு கொடுத்த

முக்கியத்துவம்! அதேபோல, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை மூலமும், நேரிலும் சென்று கீழடியின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியது! வழக்கறிஞர் கனிமொழி மதி தொடுத்த வழக்கு! அதற்கு நீதிமன்றங்கள் கேட்ட கேள்விகள்! அதற்கு தமிழக அரசு அளித்த பதில்கள்! மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் மற்றும் எண்ணற்ற இணைய எழுத்தாளர்களின் தொடர் முயற்சி! இவைகளின் ஒட்டுமொத்த விடையாக, தமிழக அரசு கீழடிக்கென தனியே ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க இடத்தை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசிடம் 15 கோடியை கோரியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற நான்காம் கட்ட அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை அமெரிக்கா மியாமி நகரில் உள்ள பீட்டா அமைப்பிற்கு கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கி.மு. 6 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் என்று சான்று வழங்கியுள்ளது. அதைவிட முக்கியம் தொல்லியல் துறையில் ஒரு அதிசயம் என்று சொல்லத்தக்க வகையில், நான்காம் கட்ட ஆய்வுக்கான அறிக்கையை தமிழக தொல்லியல் துறை சார்பில் மிக விரைவாக வெளியிடப்பட்டிருப்பதுதான். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறையின் அமைச்சர் பாண்டியராஜன், இது திராவிட நாகரிகம் அல்ல. பாரத நாகரிகம் என்று கூறியிருக்கிறார். திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எப்போதும் விழிப்புணர்வு தேவை என்று அடிக்கடி  சொல்வதுண்டு. அதைத்தான் நாமும் கடைபிடிக்கவேண்டும்.

இந்திய துணைக்கண்டத்தின் பரந்த நிலப்பரப்பில் வாழ்ந்தது தமிழர்களோ! திராவிடர்களோ! நாகர்களோ! அது நமது ஆய்வுக்குட்பட்டது. ஆனால் அவர்கள் ஆரியரல்லர் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். அதுவும் முக்கியமாக எல்லா மொழிகளுமே ஆரிய பண்பாட்டை எதிர்த்து, பின்னர் நாளடைவில் சமஸ்கிருத்தை அந்தந்த பிராந்திய மொழிகளோடு கலக்கவிட்டதன் காரணமாகவே திரிபுகள் ஏற்பட்டது. தொடர்பு பெரிதாக இல்லாத அந்தக்காலத்தில் மூலமொழியாக இருந்த தமிழ், தமிழாகவே தொடரவில்லை. 40 க்கும் மேற்பட்ட கிளை மொழிகளாக திரிந்து பேசப்பட்டு வந்தன. தனித் தனி பெயர்களே வழங்கி வந்தன.

நம்முடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அய்ரோப்பிய நாடுகள்கூட திராவிடம் என்ற சொல்லை திசைச் சொல்லாகத்தான் பயன்படுத்திவந்துள்ளது. காம்போசம், யவனம், சீனம் என்பது போல திராவிடம் இருந்து வந்துள்ளது. ஆனால் நம்மைப்பொறுத்த வரையில் இங்கு திராவிடம் என்ற சொல் பண்பாட்டுச் சொல்லாகவே பயன்படுத்தி வந்திருக்கிறோம். அதாவது ஆரியத்திற்கு எதிர்ப்புச் சொல்லாகவே பயன்படுத்தியிருக்கிறோம். ஆய்வாளரும்,

எழுத்தாளருமான தொ.பரமசிவம் அவர்களும் தமிழும், திராவிடமும் ஒன்றுதான் என்பதை உள்ளூரிலேயே உதாரணங்களைச் சொல்லி நிறுவுகிறார். ஆகவேதான் திராவிடமும் தமிழும் ஒன்றுதான் என்று, திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேய பாவாணர் உள்பட பல்வேறு அறிஞர்கள் ஒன்றுபட்டு தமிழும், திராவிடமும் ஒன்று என்று குறிப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதைத்தான் தந்தை பெரியாரும் மிகப்பொருத்தமாக கையாண்டுள்ளார். அந்தப் பொருத்ததைதான் ஆரியம் உடைக்க படாதபாடுபட்டு வருகிறது. ஆனாலும் இன்றும் அது உடைக்கவியலாத கற்கோட்டையாகவே இருக்கிறது. ஆரிய திராவிடர் போராட்டத்தில் காலவெள்ளத்தில் மாறிமாறி வெற்றி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் தந்தைபெரியாருக்குப் பின், திராவிடர்களின் பக்கமே வெற்றி நிலைபெற்று வந்திருக்கிறது. கீழடியும் அதைத் தொடர்ந்திருக்கிறது.

மொத்தத்தில் கீழடியால் மேலேழுந்திருக்கிறது திராவிடம்!

 • தோழர். கருத்தோவியன்.

நூல் விமர்சனம் – சிந்திக்க மறுப்பது ஏன்!

பெரியார், அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோரின் தத்துவங்களைக் கற்ற ஒரு மனிதன் இந்த சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை, சமூக ஏற்றத்தாழ்வுகளை, சம மனிதனை மனிதன் சுரண்டும் சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராடாமலோ, கருத்து சொல்லாமலோ இருக்க முடியாது, அதுவும் இந்தியா போன்ற ஜாதியமும் முதலாளித்துவமும் கைகோர்த்துக் கொண்ட ஒரு நாட்டில் சமூக அமைப்பு மீது கோபம் இருந்தே தீரும், அப்படி கோபப்பட்ட ஒரு எழுத்தாளரின் கருத்து தொகுப்பே ‘சிந்திக்க மறுப்பது ஏன்?”

இந்த நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க தூண்டுகிறது, ஒரு மனிதனை சிந்திக்க விடாமல் தடுப்பதற்கு இங்கு நிறைய அமைப்புகளும் தத்துவங்களும் இருக்கின்றன, அவற்றை எதிர்ப்பதுதான் ஒரு மனிதன் இந்தச் சமூகத்திற்கு செய்கிற உண்மையான தொண்டு ஆகும். அதனடிப்படையில் நூலாசிரியர்; பார்த்திபன் பொருளாதார கட்டமைப்பை உள்வாங்கியுள்ளார், இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இன்றைய அரசியலை அலசி ஆராய்கிறார், மேலும், அவருடைய கவிதைத் தொகுப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரு சில செய்திகளை நாம் பார்ப்போம்.

சிந்திக்க மறுப்பது ஏன்? என்ற இந்த நூலில் நம் சிந்தனையைத் தூண்டும் விதமாக அணுஉலை ஆபத்து, ஹைட்ரோ கார்பன், இந்திய தேசியம் பற்றிய பெரியாரின் பார்வை, நீட் தேர்வு என பல செய்திகளை புள்ளிவிவரங்களோடு கட்டுரைகளாக பதிவு செய்துள்ளார்.

இந்த நூலின் 30-ஆம் பக்கத்தில் மின்னணு வாக்கு இயந்திரம் பற்றிய கட்டுரையில் “பிணீநீளீவீஸீரீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ்”  என்ற சொல்லக்கூடிய எந்த ஒரு ரகசியத்தையும், மிக துல்லியமாகவும் எளிமையாகவும் திருடிவிட தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த நவீன யுகத்தில், இப்படி எந்த பாதுகாப்புமில்லாத வாக்கு முறையை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பது எதற்காக, சிந்திப்பீர்” எனத் தெளிவாகக் கூறியுள்ளார் நூலின் ஆசிரியர்.

இந்தக் கட்டுரையை 2016-இல் எழுதியுள்ளார். இன்றைக்கு 2019-ல் முன்பை விட அதிகமாக மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு எதிரான கருத்து மக்கலிடையே நிலவி வருகின்ற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு எதிராகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவின் அதிகார வர்க்கமாகிய பார்ப்பன பனியா கும்பலின் வளர்ச்சிக்கே இவை பயன்படும் என்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இலவசம், பற்றியும், ப.ஜ.க. காங்கிரஸ் ஒப்பீடு பற்றியும் நமக்கு முரண்பட்ட கருத்து இருந்தாலும் நூலின் ஆசிரியரின் சமூகக் கோபம் நியாயமானதே.

இந்த நூலின் பிற்பகுதியில் தன்னுடைய கவிதைகளையும் இணைத்துள்ளார், எப்படி கட்டுரைகளின் சமூக அரசியல் அமைப்பின் மீதான கோபம் வெளிப்படுகிறதோ அதே போல் தான் கவிதை களிலும் வெளிப்படுகிறது, தமிழ் இலக்கியச் சூழலின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தான் கவிதைகளில் அறச்சீற்றத்தை கடுமையாக வெளிப்படுத்தினார். அவருடைய பாணியை பின்பற்றி எழுதிய கவிஞர்களை ‘பாரதிதாசன் பரம்பரை” கவிஞர் என இலக்கிய உலகம் அழைத்தது. நமது நூலாசிரியரும் அவருடைய கவிதை வரிகள் நினைவூட்டுகிறது, ‘தமிழ் நாட்டு நலன் சார்ந்த கவிதைகளைப் படைத்துள்ளார்.

‘முதலாளிகள் கூட்டம் ஒன்று

மொத்தத்தையும் எடுப்பது

தொழிலாளர் கேட்டாக்கா

துரத்திப் போய் வெட்டுது”

இந்நூலின் 181ஆம் பக்கத்தில் இடம்பெற்ற ஒரு கவிதை ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள், நூலாசிரியர் பார்த்திபன் அவர்களின் சமூகக் கோபமே கவிதை வரிகளாக வெடித்துள்ளது.  கடந்த காலங்களில் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழிலாளர் உரிமைகள் கேட்டால் தாக்கப்படும் சூழல் இருந்தது. தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டுவதற்காக பலர் தங்களை வருத்திக்கொண்டுள்ளனர். அந்த வலிகள் தொகுப்பாகவே இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது, நூல் முழுக்க பகுத்தறிவு மொழி, இன விடுதலைக் கருத்துக்களும் சுற்றுச் சூழல் இயற்கைச் சுரண்டல் ஆகியன பற்றிய கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அழகிய வடிவமைப்புடன் தரமான முறையில் அச்சிடப்பட்டுள்ளது.  சமூக அக்கறை உள்ள நூல்களைப் பிரசுரிக்கும் மதி ப்பளிகேசன் நிறுவனமும் பாராட்டுக்குரியது. சிந்திக்க மறுப்பது ஏன்? என்று நமது சிந்தனையைத் தூண்டும் இந்த நூலினை கைத்தடி வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியே.

ராவுத்தர் குதிரை – புலவர் நாகை பாலு

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இன்றும் அந்த நிகழ்வு என் நினைவைக் குடைகிறது.

வெள்ளைக் குல்லாய். காலர்இல்லாத சிங்கப்பூர்ஜிப்பா. கணுக்காலுக்கு மேலோடு நின்று விடும் கட்டம் போட்ட லுங்கி, ஐம்பது வயதைக் காட்டி நிற்கும் நரைத்த தாடி. மீசை இல்லை. தனது வண்டிக்குதிரை ‘சுல்தானை’ போலவே சலனமற்ற முகம்.

காதர்பாய் சொந்த கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.

இப்போதுதான் புழக்கத்துக்கு வந்திருக்கும் பை-பாஸ் சாலையிலிருந்து நெசவாளர் காலனிக்குத் திரும்பும் அறுபது அடி சாலையின் வலது புறத்தில் அந்த வேப்பமரத்து நிழலில் தான் அவர், வண்டி, குதிரை மூவரும்.

வீடு தெருக்கோடியில், பனங்கழிகளுக்கு மேலே சீமை ஒரு அடுக்கப்பட்ட சின்ன வீடு. வெயிலுக்கு தாங்கும். மழை வந்தால் அழும், ஓடு மாத்த உடனடி வாய்ப்பு எதுவும் இல்லை.

நூர்ஜான்பீ அங்கிருந்து தான் கணவருக்குப் பொங்கிப் போட்டு காலம் கடத்துகிறாள்.

கஞ்சிச் சோறு என்றாலும் காதர்பாய்க்கு சுட்ட கவாப் ஒரு துண்டாவது வேண்டும். இல்லாவிட்டால் கஞ்சி இறங்காது.

நூர்ஜான் அடுக்களையில் பத்திரப்படுத்தப்பட்ட துண்டுக்கறி மட்டும் பத்தெட்டு துண்டுகளாவது பாதுகாப்பாய் ஒரு அடுக்குப் பானையில் இருக்கும். பூனையோ எலியோ களவாட முடியாதபடி அதை அந்த நடுப்பானையில் மட்டுமே வைத்திருப்பாள்.

சுல்தான், காதர்பாய் போட்ட – புல்லோ கொள்ளோஅசைபோட்டுக் கொண்டிருந்தது. பாய் எதையோ யோசித்தபடி, வண்டியில் அமர்ந்து பீடியை ருசித்துக் கொண்டிருந்தார். அவர்பீடியைக் குடித்து புகையை வெளியே விடமாட்டார். விழுங்கிவிடுவார். புகை பசியை அடக்குமாம். குடலைக் காக்கும் என்பதெல்லாம் அவர்காதில் ஏறாதது.

காலையில் குடித்த கருப்பன் கடை சாயாவோடு சரி, கையில் சல்லிக்காசில்லை. மணி பத்து, வெப்பத்தைப் போலவே அவர்மனசில் கடுப்பேறிக்கொண்டிருந்தது.

“ஹே அல்லா… எம்மாங் காலத்துக்குதா இப்படியே சாவுறது… காலணா இல்ல… இந்த வாயில்லா ஜீவனுக்கு கொள்ளு வாங்கக்கூட சல்லிக்காசு இல்லயே… துட்டுவந்தாதா துண்ண முடியும்… அரிசிவாங்கக்கூட வழி தெரியலியே…”

குதிரை கனைத்தது. அள்ளிப்போட கொள்ளு இல்லை. வண்டிக்கு அடியில் தொங்கிய வலை காலியாகக்கிடந்தது.

“சைத்தான் கீ பச்சா…” குதிரை மேல் சாட்டையைச் சொடுக்கினார் “நா கஞ்சிக்கு வக்கில்லியேண்னு நிக்குறன்… நீ என்னண்ணா?… கொள்ளுக்கு என்ன எங்க போகச் சொல்ற”… ஆற்றாமை அவர் குரல்வழியே பெருக் கெடுத்தது.

குதிரை கனைக்கும் போதெல்லாம் “பச்சா… இருபச்சா… சவாரிவந்ததும் மொதல் வேல ஓனக்குக் கொள்ளு வாங்கறதுதா ‘… அப்பறந்தா உப்பு மொளவா புளியெல்லா… என்னா புரியுதா” என்று எப்போதும் கொஞ்சும் காதர்பாய் இப்போது சமநிலை இழந்து, சாட்டையைச் சொடுக்கியது. தன்னையே சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும் போல் சுயவெறுப்பைச் சுரப்பித்தது.

பக்கத்தில் போய் பிடாரியை நீவி “இரும்மா… சவாரி வந்ததும், ஒனக்குதாபச்சா மொதல்ல…” என்று கொஞ்சினார்.

குதிரை அவர்முகத்தைப் பார்த்து விழியுயர்த்தி நின்றது. எஜமானின் நிலைமை பிடிபட்டிருக்க வேண்டும். அந்தப் பார்வையின் ஆழத்தில் அவர்மேலான பரிதாபத்தின் சாயல். சுல்தான் அவருடைய பச்சா!

வண்டிக்குள் இருந்து வானத்தைப்பார்த்து யோசித்துக் கொண்டிருந்த காதர்பாய், அந்தக் குரல் கேட்டு வண்டியிலிருந்து குதித்தார்.

ஜோசப் சார்! “சலாம் ஆலேகும் சாப்” காதர்பாய் பொங்கும் மகிழ்ச்சியில் குரல் நெகிழ்ந்தார் “சலாம் பாய். சௌக்கியமா”

“க்கீறேன் சார்… ஒங்க புண்ணித்துல நல்லாக் கீறேன் சார்… அம்மா வர்லியா சார்?…”

“மவ, பேரக் கொழந்தையெல்லா வந்திருக்காங்கள்ள… அவங்களுக்கு என்னென்னமோ செஞ்சிட்ருக்காங்கபாய்… மீனு வேணுண்ணாங்க… போலாமா?…”

பஸ் ஸ்டாண்ட் தாண்டி மீன் கடை, அரைமைல், ஜேசப் சார் நாலு ரூபாய்க்குக் கொறையாம குடுப்பார். பாய்க்கு மனசுக்குள் ஏகப்பட்ட சந்தோஷம். சுல்தானை நுகத்தில் திணித்து, லகானைக் கையில் பிடித்து, சட்டத்தை அமுக்கியபடி” ஏறுங்க சார்” என்றார். ஜோசப் சார் வண்டிக்குள் நடுவே அமர்ந்தார். படியில் கால் வைத்துத் தாவி வண்டியின் முன்புறம் இடதுபக்கமாக அமர்ந்து சாட்டையைச் சொடுக்கினார்காதர்பாய்.

சுல்தான் நகர்ந்தது. சாட்டையை சுல்தானின் முதுகில் மீண்டும் மீண்டும் சொடுக்கினார். லேகத்தை அதிகமாக்குவதை எதிர்பார்த்து.

சுல்தான் மந்தகதியிலேயே நடந்தது.

“காலையிலிருந்து ஒரு மண்ணுமில்லை. இப்போதான் ஒரு சவாரி. இந்த சனியன் தூங்கிக்கிணே நடக்குதே…”

சுல்தான் மேல் ஏகத்துக்ரும் கோபம்.

போதாக் குறைக்கு ஜோசப் சார்பேசினார் “பாய்… மீன்வாங்கிட்டு சீக்கிரமா திரும்பணும் பாய்… மாப்ள மதியம் சாப்பிட்டு ரயிலுக்குக் கிளம்பணும்…”     பாய்க்கு புரிந்தது! சுல்தானுக்கு…? சடசடவென சாட்டையைச் சொடுக்கினார். பசியோ, மயக்கமோ, பலமில்லையோ – சுல்தான்நடக்கவில்லை; நகர்ந்தது.

காதர்பாய்க்கு கடும் கோபம். வெயிலின் உக்கிரத்தைப் போலவே கோபம் தலைக்கேறிக் கொண்டிருந்தது.

“சைத்தான் கீ பச்சா”… சாட்டையை ஓங்கிச் சொடுக்கினார். சுல்தான் வேகம் காட்டவில்லை… அந்த பை பாஸ் ரோட்டில் – நட்ட நடுவில் – திடீரென நின்றது. பாய் மீண்டும் சாட்டையால் அடித்தார். “ ஓ!… வண்டி ரிவர்ஸ்ஸில் போகிறதே!…” பாய்க்கு அதிர்ச்சி! ஜோசப் சாருக்கு அடிவயிறு கலங்கியது. வண்டி பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேகம் கணத்துக்கணம் கூடியது. பாய்க்கு பயம் பிடித்துக்கொண்டது. பலங்கொண்ட மட்டும் முன்னுக்கு இழுத்தார். வண்டி சாலையின் ஓரமாக நின்றது. பாயைப்போலவே ஜோசப் சாருக்கும் ஒன்றும் அத்துப்படியாகவில்லை. ஜோசப் சார்நின்ற வண்டியிலிருந்து கீழே இறங்கினார். “என்னபாய் என்ன ஆச்சு குதிரைக்கு…” காதர்பாய் விக்கித்து நின்றார். பதிலேதும் இல்லை. பாய் லகானை இறுக்கிய படியே சுல்தானைத் தடவிக் கொடுத்தார். சுல்தானிடம் எந்தவித எதிர்வினையும் இல்லை.

“நல்ல வேளையா வண்டிக்குப்பின்னே பஸ்ஸோ காரோ வரவில்லை!”…

இருவர்மனசுக்குள்ளும் ஒரே எண்ணம்.

சுல்தான் என்ன நினைத்ததோ தெரியவில்லை.

ஜோசப் சார்; நாலு ரூபாயை காதர்பாயின் கையில் திணித்தபடி பின்னால் வந்த சைக்கிள் ரிக்ஷாவை நிறுத்தினார்.

பாய் ரூபாயை மறுக்கவில்லை.

ரிக்க்ஷா அவர்களைத் தாண்டியதும் பாய் குதிரையின் பிடாரியைத் தடவியபடி சன்னமான குரலில் முணு முணுத்தார்…

“ஏண்டா சுல்தான், நாள்பூரா பட்டினி போட்டதுமில்லாம, அடி அடிண்ணு அடிச்சேனே அந்தக் கோபமா?…” அவர் குரல் கம்மிக் கரகரத்தது.

வண்டியையும் குதிரையையும் அதே இடத்தில், ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, குதிரையைத் தடவிக் கொடுத்தபடி, “இங்கயே இருபச்சா, சீக்கிரமா ஒனக்கு கொள்ளு வாங்கியாந்துடறேன்…”

குதிரையின் முகத்தைப் பார்த்தபடியே நடந்தார். ஜோசப் தந்த நாலு ரூபாயை இறுக்கிப் பிடித்தபடி.

நடந்த கதை! – கி.தளபதிராஜ்

தென்னை, மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா, எலுமிச்சை, என இடைவெளியின்றி தழைத்துக் கிடந்தது கொல்லை. மோடி குப்பைப் பொறுக்குவதுபோல் நடித்ததைத் தொலைக்காட்சியில் பார்த்ததன் தாக்கமோ என்னவோ, மண்டிக்கிடந்த கிளை, தழைகளை கழித்துவிட எண்ணி தெருவில் சென்று கொண்டிருந்த வேலையாட்களை அழைத்திருந்தார் அம்மா.

ஒரு வழியாக கூலி பேசி முடித்து வேலையைத் தொடங்கியவர்களிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். வந்ததில் ஒருவர் இளைஞர். மற்றவர் அவருக்கு சித்தப்பா முறை.

சித்தப்பா சொன்னார். “ சார் போனமாதம் உங்க நகர்ல எங்க ஊர் ஆள் ஒருத்தன் வேலை செய்ய வந்தான். வேலை செய்யும்போது பாம்பு ஒன்னு வந்திருக்கும் போல. அந்த வீட்டுக்காரம்மா பயந்து போய் பாம்பை அடிக்கச் சொல்ல அந்தப் பையன் பாம்பை அடிச்சுப் போட்டுட்டான். பாம்பை அடிக்கிறது தெய்வக்குத்தம் இல்லிங்களா?அடுத்தவாரமே அவனுக்கு ஒடம்பு சரியில்லாம போயிடுச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்து அய்யாயிரம் செலவாச்சுங்க அய்யா!”

பெரியவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அம்மா அவசர அவசரமாக அதை மறுத்தார், “இங்கல்லாம் பாம்பு அடிச்சதா யாரும் சொல்லலியே. அடிச்சிருந்தா எங்களுக்குத் தெரியாதா?  வேற எங்கயாவது இருக்கும்“ என்றார்.

போனவாரம் கூட கொல்லையில் ஒரு பாம்பைப் பார்த்ததாக வீட்டில் பேசிக்கொண்டிருந்தது  அரசல்புரசலாக என் காதில் விழுந்தது. அதனைத் தொடர்ந்துதான் அம்மா கொல்லையைச் சுத்தம் செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கக்கூடும். இது வழக்கமான ஒன்றுதான். கொல்லையில் இப்படி எதையாவது பார்த்துவிட்டால் ஒரு வாரத்திற்கு கிளீன்! கிளீன்! கிளீன்! இது கொஞ்ச நாளைக்கு நீடிக்கும். பின் மீண்டும் பழைய கதைதான்.

அப்பா இருந்தால் கூடவே நிற்பார். அம்மா இடையிடையே ஏதாவது கொசுறு வேலை சொல்வார். செய்ய வந்த வேலை கெட்டுவிடும் என அப்பாவுக்கு கோபம் வரும். வேலை முடியும்வரை இரண்டு பேருக்கும் அது பணிப்போராகவும் சிலநேரங்களில் பெரும் போராகவும் முடியும். எவ்வளவு பெரிய போராக இருந்தாலும் அதுக்கு அல்ப ஆயுசு தான். அரை மணியைத் தாண்டாது.

போனவருடம் அப்பாவும் அம்மாவும் வெளியூர் சென்றிருந்தார்கள். நல்ல கோடை காலம். மின்சார வாரிய ஆட்கள் வந்து தெருவில் மின்கம்பிகளில் உரசும் கிளைகளை கழித்துக் கொண்டிருந்தார்கள். நம்ம வீட்டு வாசலிலும் ஒரு மரம் அடர்த்தியாக லைனை தொட்டுக்கொண்டிருந்தது. கழிக்க வந்தவரிம் தனியாக அய்ம்பது ரூபாய் கொடுத்து அதை ஒட்ட வெட்டச்சொன்னேன். அப்பா அம்மா வந்ததும் பையன் பொறுப்பாக இருக்கிறான் என்று நினைக்க வேண்டுமே! அதற்காகத்தான்.

அப்பா ஊர் போய் திரும்பி ஆட்டோவில் வந்திறங்கினார். மதிய வெயில் சுட்டெரித்தது. வாசல் கேட்டைத் திறந்தபடியே திரும்பிப் பார்த்தார். மொட்டையாக நின்ற மரத்தைப் பார்த்ததும் “எந்த மடையன் வெட்டினான்?” என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தப்பு நடந்து விட்டது என்பது மட்டும் தெரிகிறது. “ணி.ஙி காரர்கள் வெட்டினார்கள். இரண்டு மாசம் ஆனா எல்லாம் துளிர்த்து விடும்!” என சமாளித்தேன்.

எவனாவது கோடை காலத்துல இப்படி மொட்டையா வெட்டுவானா? அது பொழைக்குமா? என்றார்.

அவர் சொன்னபடியே ஒரு மாதத்தில் அது அடியோடு காய்ந்து போனது. இப்படி நம்ம புத்திசாலித்தனம் எப்பவாவது அப்பாவிடம் பல்பு வாங்குவது உண்டு.

சரி. பாம்பு விஷயத்துக்கு வருவோம்.

வேலைக்கு வந்தவர்கள் வந்ததுமே பாம்பைப்பற்றிப் பேசவும், பாம்புக்குப் பயந்து அவர்கள் வேலை செய்யாமல் திரும்பிச் சென்றுவிடுவார்களோ என்று அம்மாவுக்குப் பயம் வந்திருக்கக்கூடுமோ என்னவோ, “அப்படி இங்கே பாம்மை அடித்ததாக நாங்கள் கேள்விப்படவில்லையே?” என அந்தச் செய்தியை அதிரடியாக மறுத்தார்.

“ஏம்பா! செத்துப்போன பாம்பு பழிவாங்கறதாவது? அது எப்படிப்பா பழி வாங்கும், இந்தக்காலத்திலும் இப்படி இருக்கிறீர்களே?” என்றேன்.

அதை அவர்கள் மறுப்பதாகவோ, ஏற்றதாகவோ

காட்டிக்கொள்ளவில்லை. அவர்களிடமிருந்து எந்த பதிலுமில்லை. சற்று நேரம் அமைதியாகப்பொனது. தற்போது பெரியவரின் பார்வை கொல்லையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூவரசு மரத் துண்டுகளின் மேல் விழுந்தது.

“சார்! இதை சைஸ் பண்ணி அடுக்கக் கூடாதா? இப்படி மழையிலும் தண்ணியிலும் கிடந்தால் மக்கிப் போயிடும் சார்” என்றார்.

“அத்திவரதர் நாற்பது வருஷமா தண்ணியில கிடந்ததா சொல்றாங்க. அது மக்கல. இது மக்கிடுமா?” என்றேன்.

கூட வந்த இளைஞர், “இல்லை சார்! அது கல்!” என்றார்.

“கல் இல்லப்பா. அது அத்திமரத்தில் செய்தது. அதனால் தான் அது அத்திவரதர்!” என்றேன் நான்.

பெரியவர் குறுக்கிட்டு “நான் கூட அத்திவரதரை பார்க்க குடும்பத்தோட போனேன் சார்!” என்றார் பெருமித சிரிப்புடன்.

“தம்பி! நீ அது கல்லுங்கிற! நான் மரம்ங்கிறேன். உங்க சித்தப்பா என்னடான்னா அதைப் பார்க்க குடும்பத்தோட அவ்வளவு தூரம் செலவு பண்ணிட்டு போனேன்றாரே?” என்றேன்.

இரண்டு பேருக்குமே சிரிப்பு வந்துவிட்டது. கொல்லென சிரித்துவிட்டார்கள்!

மாமரத்தை கழிக்கும் போது அதில் நிறைய புல்லுருவிகள் இருப்பதாக சொன்னார்கள். மரக்கிளைகளில் அங்கங்கே உப்பியவாறு கடினமாக பார்ப்பதற்கு தேன்கூடு மாதிரி காட்சியளித்தது. அந்தக்கிளைகளில் துளிர்விட்ட இலைகள் மா இலைக்கு தொடர்பே இல்லாமல் வேறு மாதிரி இருந்தது. புல்லுருவி வந்தால் மரம் காய்க்காதாம். வந்தவர் பார்த்து பார்த்து வெட்டினார். எனக்கு இந்தச் செய்தி புதிது. ஆனால் அம்மாவுக்குத் தெரிந்திருந்தது. கீழே இருந்தபடியே பார்த்துப் பார்த்து வெட்டச் சொன்னார்.

தேநீர் இடைவேளையில் புல்லுருவின்னா என்னன்னு கூகுளில் தேடினேன். புல்லுருவியின் பலன்கள்னு முகநூல் செய்தி ஒன்னு வந்துச்சு. ஒவ்வொரு மரத்தில் வரும் புல்லுருவிக்கும் ஒரு பலன் போட்டிருந்தான். மாமரத்தில் புல்லுருவி வந்தால் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பொன் பொருள் வந்து சேரும் என்றிருந்தது. மரம் கழிப்பவரிடம் அதைச்சொல்லி இப்படி அதை வெட்டலாமா என்றேன்?

அட நீங்க வேற சார். எவனாவது லூசுப்பய போட்டிருப்பான் என்றார். புல்லுருவியை வெட்டக்கூடாதுன்னு, நாங்கள் வேலையை அத்தோடு நிறுத்திவிடுவோமோ என்று இப்போது வந்தவருக்குப் பயம் வந்திருக்கக் கூடும். 

ஒருவழியாக சுத்தமாக கழித்து வேலையை முடித்து பணம் வாங்க வந்தார்கள். கூலியை வாங்கிக் கொண்டு, “என்னசார் மரம் அறுக்க ஆசாரி அனுப்பவா?” என்றார்கள்.

“அத்திவரதரை மறுபடியும் நாற்பது வருடம் தண்ணியில போட்டா கூடையிலத்தான் அள்ளனும். அப்படித்தான் இந்த பூவரசு மரமும். தெரிஞ்ச ஆசாரி இருந்தா வரச் சொல்லுப்பா சைஸ் பண்ணி வைப்போம்!” என்றேன்.

வாசலில் மாட்டியிருந்த பெரியார்படத்தையும் என்னையும் மாறி மாறி பார்த்துவிட்டு ஏதோ புரிந்தது போல் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு “வரேன் சார்!” என்று சொல்லி விடைபெற்றார்கள்.

ஞிலீணீறீணீஜீணீtலீவீக்ஷீணீழீ

முகநூல் பதிவிலிருந்து)

சனி என்ன செய்யும்? – ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து

திணை

நிலம் :     தமிழ் நாடு, அமெரிக்கா.

பொழுது   :- ஆடி

சிறு பொழுது    :-    மாலை, யாமம்

துறை     :     கேள்வி, பகுத்தறிவு

சன்னல் வழியே கீழே பார்த்தால் வெண் பஞ்சை போன்று எங்கும் பரந்து சூழ்ந்திருக்கும் மேகம். வெண் மேகத்தின் மேல் பட்டுத் தெறிக்கும் கதிரவனின் மஞ்சள் ஒளி. ‘இன்று போய் நாளை வருகிறேன்’ என கடலுக்குள் மூழ்கப் போவது போல், அந்த மாலை வேளையில்  கதிரவன் சென்று கொண்டிருக்கிறது. கதிரவனும் கடலும் கலக்கும் இடத்தில் இளஞ்சிவப்பாய் அழகாய் ஒளிர்கிறது. இந்தக் காட்சிகளை எல்லாம் பறக்கும் விமானத்தில் இருந்து, சன்னல் ஓரத்தில் அமர்ந்துப் பார்த்துக் கொண்டு இருக்கின்ற ‘பார்வதி’ பாட்டிக்கோ தலை கால் புரியவில்லை. ஒரே வியப்பாய் இருக்கிறது. பார்வதி பாட்டிக்கு அருகில் அமர்ந்திருந்தார் பேத்தி அமிழ்தினி. சிக்காகோவில் இருந்து சென்னை செல்கின்ற விமானத்தில்தான் பார்வதி பாட்டியும் பேத்தி அமிழ்தினியும் இருக்கின்றனர். 

பேத்திக்கும் பாட்டிக்கும், ஒரு வாரத்திற்கு முன்னரே சன்னல் இருக்கை யாருக்கு? என்கிற போட்டி தொடங்கி விட்டது. இறுதியில் பாட்டியே வென்றார். அதுவும் பேத்தி விட்டுக்கொடுத்ததால். எல்லா இல்லத்திலும் பேத்திகளுக்குத்தானே ஸ்மீtஷீ ஜீஷீஷ்மீக்ஷீ (தடுப்பு அதிகாரம்). அமிழ்தினி மட்டும் விதிவிலக்கா என்ன? அமிழ்தினி, தன்னால் அடிக்கடி விமானப் பயணம் செய்ய இயலும், பாட்டியோ எப்போதோ ஒரு முறைதான் அமெரிக்கா வருகிறார். பாட்டிக்கு விமானப் பயணம் வாய்ப்பது மிக மிக அரிது. பாட்டியோ கிராமத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி, சைக்கிள், கார், பேருந்து ஆகியவற்றையே அதிகம் பார்த்திருப்பார். பிரயாணமும் செய்திருப்பார். பாட்டிக்கு விமானப் பயணம் மிக அரிதாகவே இருக்கும். ஆகையாலே, அமிழ்தினி தன் வசம் வைத்திருந்த ஸ்மீtஷீ ஜீஷீஷ்மீக்ஷீ-அய் உபயோகிக்காமல், விட்டுக்கொடுக்கும் ஜீஷீஷ்மீக்ஷீ-அய் பயன்படுத்தினார். தற்போது பேத்தியும் பாட்டியும் மகிழ்வுடன் அளவளாவி பறந்து செல்கின்றனர்.

அமிழ்தினிக்கும் பாட்டிக்கும் உணவு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதால், விமானப் பணியாளர் அவர்களின் இருக்கைக்கு பதிவு செய்திருந்த உணவு தட்டை முறையாக பேத்தியிடமும் பாட்டியிடமும் கொடுக்கிறார். பேத்திக்கும் பாட்டிக்கும் இடையே ஏற்பட்ட நாற்காலிப் போர் பற்றியெல்லாம் அந்த விமானப் பணியாளர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதானே. கோழிக்கறி உணவு தட்டை பாட்டியிடமும், காய்கறி உணவு தட்டை அமிழ்தினியிடமும் கொடுக்கிறார். பார்வதி பாட்டி ஆவலோடு தட்டை வாங்கி வைத்துக்கொண்டு, ‘இது என்ன சாப்பாடு?’ என்று கேட்கிறார்.

அமிழ்தினி, “உங்ககிட்ட இருக்கறது கோழிக்கறி மற்றும் யீக்ஷீவீமீபீ க்ஷீவீநீமீ (வறுவல் சோறு)” என்கிறார்.

இதைக் கேட்டவுடனே, பார்வதி பாட்டிக்கு தூக்கி வாரிப் போட்டது. “அய்யய்யோ! கோழிக்கறியா? இன்னைக்கு சனிக்கிழமை ஆச்சே. நான் கோழிக் கறி சாப்பிட மாட்டேனே” என்கிறார்.

அமிழ்தினி, “ஏன் பாட்டி சனிக்கிழமை கோழிக்கறி சாப்பிட மாட்டீங்க?”

பார்வதி பாட்டி, “எனக்கு ஜாதகத்தில் சனி இருக்கு. அதனால சனிக்கிழமையில அசைவம் சாப்பிட வேணாம்ன்னு ஜோதிட மஹாராஜ் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீரவி ஷர்மா சாஸ்திரி சொல்லி இருக்காங்க.” என நீட்டி முழங்குகிறார் பாட்டி.

அமிழ்தினி, “பாட்டி, சிகாக்கோவில் நாம கௌம்பறப்ப சனிக்கிழமை மாலைதான் கௌம்புனோம். இப்ப பல மணி நேரம் பிரயாணம் செஞ்சிட்டோம். இந்நேரம் ஞாயிற்றுக் கிழமையை தொட்டுட்டோம். இனி, சனி ஒரு வாரம் கழிச்சுதான் வரும். சோ, ஜமாய் பாட்டி” என்கிறார்.

பாட்டி விடுவதாயில்லை, “அதெல்லாம் கணக்கு கெடயாது. சனிக்கிழமை ராத்திரின்னா அடுத்து காலையில வர வரைக்கும் சனி கணக்குதான்”.

அமிழ்தினி எள்ளலுடன் பாட்டியை நக்கல் அடித்துக்கொண்டே, “அது சரி! விடிஞ்சாப்லதான்… எனக்குப் பசிக்குது பாட்டி” என தட்டை மாற்றுகிறார்.

உணவை உண்டு கொண்டே அமிழ்தினி, பாட்டியைப் பார்த்து, “ஏன் பாட்டி அந்த ரவி சாஸ்திரி உங்களை சனிக்கிழமைல விரதம் இருக்க சொன்னாங்க?”

பாட்டி, “அது ரவி சாஸ்திரி இல்லடி. ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷர்மா சாஸ்திரி”

அமிழ்தினி, “ஏதோ ஒரு ‘இஸ்திரி’ பாட்டி. ஏன் சனிக்கிழமை விரதம் இருக்க சொன்னாங்க? அத சொல்லுங்க.”

பாட்டி, “அதுவா! சனிக்கிழமதான் சனிக் கிரகம் உக்கிரமா tமீக்ஷீக்ஷீஷீக்ஷீ-ஆ இருக்குமாம். அது உக்கிரமா இருக்கறப்ப, ஜாதகத்தில் சனி இருக்கிறவங்களுக்கு சனிக்கிரகத்தோட உச்ச உக்கிரம் தாக்க கூடாதுன்னு, தீட்டு சாப்பாடான கோழிக்கறியை சாப்பிடக் கூடாது. சுத்த பத்தமான காய்கறி உணவை சாப்பிட்டா, சனி கிரகத்தோட உக்கிரம் உடம்புல ஏறாதாம்.”

அமிழ்தினி, “ஓ! அது சரி சனிக்கிழமை அன்னைக்கு மாத்திரை, மருந்து, பென்சுலின் வீஸீழீமீநீtவீஷீஸீ (ஊசி) இதெல்லாம் போட்டுக்கலாமா? அதெல்லாம் சுத்த பத்தமானதுதானா? இல்ல அதுவும் தீட்டு லிஸ்டா? என்ன சொல்றாங்க டபுள் ஸ்ரீ?”, எனக் கேட்கிறார்.

பாட்டிக்கு பேத்தியின் எள்ளல் புரிகிறது. மகிழ்ச்சியும் தருகிறது. “வாய மூடிட்டு சாப்பிடுடி” என செல்லமாய் அதட்டுவது போல் கூறுகிறார்.

அமிழ்தினி, “வாயை மூடிட்டா, அப்பறம் எப்படி பாட்டி சாப்பிட முடியும்?” என சமயோசிதமாகக் கேட்க பேத்தியும் பாட்டியும் சிரிப்பலையில் மூழ்குகின்றனர்.

உணவை உண்டு முடிக்கின்றனர் அமிழ்தினியும் பாட்டியும். உணவை உண்டாலும் சனியை சுற்றிய சூறாவளி மட்டும் ஓய்ந்த பாடில்லை.

அமிழ்தினி, பாட்டியை நோக்கி, “ஏன் பாட்டி, ஜாதகத்தில் சனி இருக்குன்னு சொன்னீங்களே”.

பாட்டி, “ஆமாம். இருக்கு” [மனதுக்குள்: ஆமா.. ஆமா ஜாதகத்தில மட்டுமா இருக்கு. இந்த விமானத்தில கூடதான் கூடவே இருக்கு.]

அமிழ்தினி, “உலகம் உருண்டை”.

பாட்டி, “ஆம..மாம். உருண்டை”.

அமிழ்தினி, “உலகம் ஒரு நாளைக்கு ஒரு சுத்து சுத்துது”.

பாட்டி, “ஆம்..மாம். சுத்துது.”

அமிழ்தினி, “உலகம் சூரியன ஒரு முழு சுத்து சுத்தி வர 365 நாள் ஆகுது.”

பாட்டி, “ஆம்.மாம். ஆகுது.”

அமிழ்தினி, “ஒரு வாரத்தில் ஏழு நாள் இருக்கு.”

பாட்டி, “ஆம்..மாம். இருக்கு”

அமிழ்தினி, “7-வது நாள்தான் சனி”

பாட்டி, “சரி. அதுக்கு என்ன இப்போ?”

அமிழ்தினி, “உலகம் தெனமும் சுத்துது. ஆண்டுக்கு ஒரு முறை சூரியனை சுத்துது. எல்லா நாளுமே சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லா கோளும் இயங்கிகிட்டு இருக்கு. இதுல, எப்படி சரியா, ஒவ்வொரு 7-வது நாளா பாத்து, சனி கிரகம் மத்த ஜீறீணீஸீமீts-அய் (கோள்களை) விட்டுட்டு, உலகத்த மட்டும் நீஷீக்ஷீக்ஷீமீநீt-ஆ (சரியா) கண்டு பிடிச்சு, அந்த உலகத்தில் இருக்கிற பல தீவீறீறீவீஷீஸீ (கோடிகள்) மக்களின் ஜாதகத்த sநீணீஸீ (தேடி) செஞ்சு, அதில எந்தெந்த ஜாதகத்தில் சனி இருக்குன்னு யீவீறீtமீக்ஷீ (வடிகட்டி) செஞ்சு, அதில ஒவ்வொருத்தரும் இருக்கிற இடத்த ஜீஷீstநீஷீபீமீ(முகவரி) வெச்சு கண்டு பிடிச்சு, அப்பறமா தன்னோட உக்கிரத்த காட்டுது பாட்டி?” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு பாட்டியை கேட்கிறார்.

பார்வதி பாட்டியிடம் பதில் இல்லை.

அமிழ்தினிக்கோ கேட்பதற்கு இன்னும் கேள்விகள் இருக்கின்றன.

உங்களிடம் பதில் இருக்கா?

கடிதம் எழு தினால் புதிய இந்தியாவில் தேச துரோகம் – கா.தமிழரசன்

இந்த நாட்டின் பொதுமக்களில் ஒருவராக உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் இந்திய நாட்டின் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள். இன்றைய நிலையில் நாட்டில் நடப்பவைகளை கவனித்து இது ஏன் நடக்கிறது? இதற்கு முன்பு இதுநாள்வரை  இதுபோல் இவ்வளவு மோசமாக நடக்கவில்லை, அதுபோல் தாங்கள் கண்டதில்லை. குறிப்பாக  தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக மாட்டு இறைச்சி வைத்திருந்தார்கள், மாட்டை வண்டியில் கடத்திச்சென்றார்கள், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லி சொல்லாதவர்களை குண்டர்கள் கூட்டம் கும்பல்களாக சேர்ந்து கொண்டு கொலை செய்திருக்கிறார்கள். பல எழுத்தாளர்களையும் கொலை செய்திருக்கிறார்கள்.

 அந்தக் கொலைகளைக் கண்டித்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அரசு ஏதாவது ஒரு செயல் செய்தால் அதைப்பற்றின கருத்துச்சொன்னால் அவர்களையும் சகட்டு மேனிக்கு திட்டுவதையும் மிரட்டல் விடும் நிகழ்வுகளும் ஏராளமாக நடந்திருக்கிறது. இதுபோன்றவைகளால் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.

ஆகவே நமக்கு அரசு என்று ஒன்று இருக்கிறது அந்த அரசுக்கு தலைவராக ஒருவர் இருக்கிறார் அவர்தான் இந்த நாட்டின் பிரதமர் என்கின்ற முறையில் பிரதமருக்கு இவைகளைச் சுட்டிக்காட்டி கடிதம் எழுதுகிறார்கள். இதுவே தவறு என்று பீகாரில் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு அதற்கு நீதிமன்றமும் அனுமதியளிக்கிறது பின்பு காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது. ஆனால் இவர்கள் கடிதம் எழுதியது இந்திய நாட்டின் பிரதமருக்கு இது குறித்து இந்திய அரசோ, பிரதமரோ வாய் திறக்காமல் அமைதியாக இருந்துவிடுவது ஏன்? காரணம் உள்ளது.

இவர்களுக்கு பதில் சொல்வதென்றால் என்ன சொல்வது. இதற்கெல்லாம் அரசு பொறுப்பல்ல ஏதோ ஒருசில இடங்களில் நடந்த சம்பவங்கள். அதற்கு அந்தந்த மாநில அரசுகள்தான் பொறுப்பு. அவர்கள் தான் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், சரி அந்த மாநில அரசுகள், பசு பாதுகாவலர்கள் என்கின்ற பெயரில் காலித்தனம் செய்த குண்டர்களை எந்த மாநில அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது? இதுவரை அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை. அது ஏன்? ஆனால் இதுபோன்ற செயல்கள் நாட்டில் நடைபெறாமல் தடுத்து நிறுத்துங்கள் என்று வெளிப்படையாக அதுவும், பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது 124(ஏ) பிரிவின்கீழ் வழக்கு. அது என்னவென்றால் ரகசியமாக தேசத்திற்க்கு எதிராக சதி செய்வது என்கின்ற அடிப்படையில் வழக்கு. இப்போது நமக்கு புரிகிறதா பசு பாதுகாவலர்கள் என்கின்ற பெயரில் உலாவரும் குண்டர்கள் வேறு ஆட்சியாளர்கள் வேறு அல்ல என்பது.

நன்றாக கவனித்துப்பாருங்கள் நாட்டில் அன்றாடும் அப்பாவிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கொலைகள் இவைகளைச் செய்பவர்கள் மீது நடவடிக்கை இல்லாமல் அதைச்சுட்டிக் காட்டுபவர்கள் மீது தேச துரோக வழக்கு என்றால் இவர்கள் யார், எதைச் செய்ய விரும்புகிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு நன்றாக விளங்கும். இன்றைய ஆட்சியாளர்களின் விருப்பம் என்னவென்றால் தங்கள் நினைப்பதை காட்டாற்று வெள்ளம் அனைத்தையும் அடித்துச்செல்கிறதே அதுபோல் தங்களின் செயல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை எதிர்த்து போராடக்கூடாது, அதன்மீது கருத்துசொல்லக்கூடாது, ஏன் அதைச் சுட்டிக்காட்டவே கூடாது என்று நினைக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இவர்கள் ஒட்டுமொத்த இந்தியா மாநிலங்கள் மீதும், மக்கள் மீதும் ராணுவ சிறப்பு சட்டத்தை நடைமுறைபடுத்தி காஷ்மீரில் நடப்பதைபோல் இவர்கள், அங்கு நடத்துவதைபோல் நடத்த நினைக்கிறார்கள். அங்கு யாரும் எதுவும் பேச முடியாது, எழுத முடியாது, போராட முடியாது. அவ்வாறு யாராவது போராடினால் ராணுவமே சுட்டுக்கொள்ளும். போராட்டம் நடத்த வேண்டுமென்பதுக்கூட தேவையில்லை.

ராணுவம் நினைத்தால் எங்கேயும், யார் வீட்டிலும் நுழையலாம், விசாரணைக்கு அழைத்துச் செல்லலாம் அங்கேயே அவர்களைச் சுட்டுத்தள்ளலாம், அல்லது போலியாக கலவரம் செய்தார்கள் என்று சொல்லியும் கொலைசெய்யலாம், கொலை செய்து அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் என்று கூறி புதைக்கலாம் இவர்கள் (ராணுவம்) விரும்பும் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யலாம், அதுவும் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்புணர்ச்சி செய்யலாம், பிறகு கொலையும் செய்யலாம். இதுபோல் இந்தியாவை மாற்ற விரும்புகிறது இன்றைக்கு இந்தியாவை ஆளும் அரசு. இது ஏதோ கற்பனை அல்ல. இவை அன்றாடம் காஷ்மீரில் நடந்தவை, தற்போதும் நடந்துகொண்டிருப்பவை.

தேசத்தைக் காப்பதற்க்குத்தான் ராணுவம், தேச விரோதச்செயலை தடுத்து நிறுத்தவும், தேசவிரோதிகளிடமிருந்து இந்த நாட்டையும் மக்களையும் காப்பதுதான் ராணுவத்தின் வேலை. அதைத்தான் ராணுவம் செய்கிறது என்று நினைத்தால், நம்மை, ஐயோ பாவம் யாரோ பெத்த பிள்ளையோ இப்படி ஒன்றும் தெரியாத பச்ச மண்ணா இருக்கிறாயே என்பது பொருத்தமாகிவிடும். ஏனென்றால் ராணுவம் இதன் பெயரில்தான் இயங்குகிறது. ஆனால் ஆளும் அரசின் விருப்பத்தைத்தான் ராணுவம் செயல்படுத்துகிறது மேலே குறிப்பிட்ட அனைத்துச் சம்பவங்களும் ராணுவம் செய்கிறது.

காஷ்மீர் மக்களின் போராட்டமே பாதுகாக்க வருகிறோம் என்று வீட்டின் வாசலுக்கு வந்தவர்கள், பிறகு படுக்கையறைவரை வந்து பலாத்காரமாக படுக்கவும் செய்கிறீர்களே, யார் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் நீங்கள்தான் ஆகவே இந்த ராணுவத்தின் அத்துமீறல்களை பொறுக்கமுடியாமல் நீங்கள் இந்திய ராணுவமே இந்த மண்ணைவிட்டு வெளியேறுங்கள் என்றுதான் காஷ்மீரின் போராட்டம்  தொடங்கி அது இன்றுவரை தொடர்கிறது.

 இது காஷ்மீரில் மட்டுமல்ல இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதுபோல் நடந்த சம்பவங்கள் உண்டு. பல பெண்கள் நிர்வாணமாக திரண்டுவந்து (வீஸீபீவீணீஸீ ணீக்ஷீனீஹ் க்ஷீணீஜீமீ us) இந்தியா ராணுவமே எங்களை கற்பழியுங்கள் என்று போராட்டம் நடத்திய வரலாறு ஏற்கனவே நமக்கு உண்டு. ஆகவே இன்றைக்கு ஆளும் மத்திய அரசு மக்கள் அனைவரும் வாய்மூடி மௌனியாக இருக்கவேண்டுமென விரும்புகிறது. அல்லது அனைவரின் வாய்களுக்கும்  சொந்த செலவில் பூட்டு போட நினைக்கிறது. ஆகவே இந்த நாட்டையும் மக்களையும் காப்பதற்கு  இந்த அரசின்  அடாவடித்தனத்தை எதிர்த்து போராடப்போகிறோமா இல்லை, அரசு எதற்கு செலவு செய்து பூட்டு வாங்கி வந்து எங்கள் வாய்க்கு போடவேண்டும் நாங்களாகவே அதைச் செய்துகொள்கிறோம் என்று மக்களே தங்கள் வாய்க்கு பூட்டு போட்டுக்கொண்டு, நாட்டில் எது நடந்தாலும் நடக்கட்டும் பரவாயில்லை என்று அமைதியாக இருக்கப்போகிறார்களா என்பதையும் பொறுத்திருந்து  பார்ப்போம்.

தமிழரின் பேரியக்கம் – முல்லைக்கோ

செந்தமிழர் ஆண்ட நாடு:

பன்னிராயிரத்து எண்ணூறு கிலோ மீட்டர் விட்டமுடைய இந்தவுலகம், ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர் நாடாகவும் தமிழர் உலகமாகவே இருந்தது.  ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய ஒன்றியத் துணைக் கண்டம் முழுவதும் செந்தமிழராண்ட கண்டமாகவே இருந்தது, இது வரலாற்று உண்மையாகும்.

புலம்பெயர்தல்:

தென்குமரி இலெமூரியாக் கண்டத்தில் மாந்த இனமும், பெருந்தமிழ் பிறப்பெடுத்து வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் தடைகளைத் தாண்டிக் காலவளர்ச்சியின் ஊடாகக் காவுகொள்ளும் கடற்கோள், கட்டுக்குலைக்கும் நில நடுக்கம், உயிருக்கு உலை வைக்கும் உணவுக் குறைபாடு போன்றவற்றால் புலம்பெயர்ந்து பழந்தமிழர் பல்வேறு புலங்களில் பல்வேறு மொழிகளாக மாறிக் கொண்டது. பல்வேறு மொழி இனத்தவரும் உருவாயினர், இதனால் தமிழர்க்கு தமிழரே அயலாராகவும், ஆகாத சூழலில் பகைவர்களாகவும் உருபெற்றனர், இது ஒரு வரலாற்று ஆகாத இயலாகும்.

ஆரிய பிராமணர் வருகை:

ஆரியர்கள் தென்னாடு வந்து தமிழரோடும், தமிழ் மன்னரோடும் தொடர்பு கொண்ட பின்பே தமிழ் எழுத்தைப் பின்பற்றி கிரந்த எழுத்தையும் தேவநாகரியையும், கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னரே சமஸ்கிருதத்தை அமைத்துக்கொண்டனர்.

சமஸ்கிருதம் குறித்து பெரியார்:

தந்தை பெரியார் அவர்கள் ‘பழங்காலத்தில் சமஸ்கிருதம் என்பதாக ஒரு மொழி இருந்திருக்கவில்லை. சமஸ்கிருதம் பழங்காலத்தில், பலர் பலவிதமாகப் பேசிவந்த பல மொழிகளிலிருந்த சொற்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியாகும்.

சமஸ்த்தம் + கிருதம் ஸ்ரீ சமஸ்கிருதம்

சமஸ்த்தம் = யாவும்

கிருதம் = சேர்த்துச் செய்தது என்பது பொருள் என்று கூறியுள்ளார்.

இதனை பல மேலைநாட்டு மொழியியல் ஆய்வறிஞர்கள் உறுதி கூறுகின்றனர், சான்றுகள் பல உள்ளன.

மொழிகள் நிறைந்த நாடு:

பாப்புவா நியூ கினியா என்பது ஒரு சின்னஞ் சிறிய நாடு.  ஆனால், உலகிலேயே மொழி வேறுபாடுகள் அதிகம் நிறைந்த நாடு இது. 851 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. இதில் எவ்வித சிக்கலுக்கும் இடமில்லை, தலையேதுமில்லாமல் மொழிகள் இயங்குகின்றன, எல்லா மொழிகளும் சம நிலையில் அரசு சட்டமியற்றி மொழிகளுக்கு உரிய பாதுகாப்பளிக்கிறது, இது மிகுந்த சிறப்பல்லவா?

பாண்டிய மன்னராட்சி:

இரு நூறு ஆண்டுகளில் எவ்வித சிறப்பும் இன்றி அரசாண்ட பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு முகமதியர்கள் அலாவுதீன் கில்சி, முகமது பின் துக்ளக்கும் விசயநகர நாயக்கர்கள், தஞ்சை, மதுரை, செஞ்சி நாயக்கர்கள், மராட்டியர், ஆர்க்காடு நவாப்புகள், ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர், டச் நாட்டினர், டேனிசியர், பிரெஞ்சுகளின் ஆளுமையின் போது அவர், அவரது மொழி ஆட்சி ஆளுமையாக தமிழகத்தில் கோலோச்சியதன் விளைவாய் செந்தமிழ் தன் மேனியை இழந்தது, பல கலப்புமொழிகளாய் சிதைந்து காணப்பட்டது, இது 708 ஆண்டு காலம் தமிழ்மொழிக்கு ஏற்பட்ட கொடுமை என்றே கூறப்படுகிறது. தமிழ் மொழி பல சிக்கலை எதிர்கொண்டது, குறிப்பாக பார்ப்பனர்களின் கெடுமதி செயல்கள் அதிகம் என்றே கூறலாம்.

மறுமலர்ச்சிக்காலம்:

இந்நிலையில் ஆங்கிலேய ஆட்சியாளர் எல்லீசு, ஜி.யூ.போப்பு, வீரமாமுனிவர், தமிழறிஞர்களான ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரன், கதிரை வேலனார், விபுலானந்த அடிகள், இராமலிங்க வள்ளலார், பாம்பன் சாமிகள், பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், ஞானப்பிரகாசனார், ஆப்பிரகாம் பண்டிதர், உ.வே.சாமிநாதர், பாண்டித்துரை, மயிலை சீனி வேங்கடசாமி, சதாசிவ பண்டாரத்தார், சி.இலக்குவனார், முது முனைவர் பெருமகனார், இளங்குமரனார், திரு.வி.க, தேவநேயப் பாவாணர், சுப்பிரமணிய பாரதியார், சுரதா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்ற அறிஞர் பெருமக்களால் தமிழ் மொழி உயர்நிலையை அடைந்தது என்றே கூறலாம்.

ஆகுதி செய்தல்:

பல நூல்களை எழுதிய வரகுணப் பாண்டியன் மறைவிற்குப் பிறகு நூல்களை சேகரிக்க பதிப்புச் செம்மல் உ.வே.சாமிநாதர், கோவிலுக்கு சென்று கேட்டபோது, அங்கு பணிபுரிந்த ஆரியப் புரோகிதர்கள் தகவல்களால் வேதனையடைந்தார் உ.வே.சா. அவர்கள், பாண்டிய மன்னனின் சொத்துக்கள் அனைத்தும் கோவிலுக்கு சேர்க்கப்பட்டுவிட்டது, அவரது அரிய நூல்கள் அனைத்தும் நல்ல முறையில் ஆகம விதிகளின்படி ‘ஆகுதி” செய்யப்பட்டுவிட்டன என்றனர். பெரிய அளவில் குழி வெட்டி, நூல்கள் அனைத்திற்கும் நெய் பூசி அக்னிக்கு சமர்பித்துவிட்டோம் என்றனர். இது ஒரு இடத்தில் தமிழ் மன்னனின் நூல் ஆகுதி (தீயிடல்) ஆக்கப்பட்டதை கண்ட உ.வே.சா. அவர்கள் வெகுண்டெழுந்து அந்த ஆகமத்தை அல்லவா முதலில் எரிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

மேற்காணும் நிகழ்வு போலவே எண்ணிக்கையில்லாத் தமிழின் அரிய பெட்டகமாய் பாதுகாக்க வேண்டிய நூல்களை எரித்து ஆரியக் கேடர்களின் செயல்களை நான் என்னவென்று விளிப்பது, இதுவே தமிழுக்கு, தமிழ் மக்களுக்கு ஆரியப் பார்ப்பனர்களின் கேடான செயலாகும். இந்த கேடான செயலில் இருந்து தப்பியது தான் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, திருக்குறள் என்ற காப்பியங்களாகும்.  இன்னும் தமிழர்களின் காப்பியங்களும் காவியங்களும் தப்பியுள்ளன.

உலகத் தமிழ்க் கழகம்:

ஆர்பரித்து எழுச்சி பெற்ற தமிழ் மறவ பெருமக்கள் ஒன்றிணைந்து புலவர் சேந்தமாங்குடி பாவாணரிடம் கருத்து கேட்டு ‘தனித்தமிழ்க் கழகம்” தோற்றுவித்து, படிப்படியாக உயர்நிலைப் பெற்று இன்று காணும் பேரியக்கமாக ‘உலகத் தமிழ்க் கழகம்” என்ற அமைப்பை உருபெறச் செய்து மொழிநூல் வேந்தர் மூதறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களின் தலைமையில் சிறப்பான தமிழர்களின் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் வரலாற்றில் மணிமுடி சூட்டிய நிகழ்வாக ஏற்று, மட்டிலா மகிழ்வும் பெருமிதமும் கொள்வோம்.

இனம் மொழி:

ஓர் இனம் எதை இழந்தாலும் விழியையொத்த மொழியை இழக்கக்கூடாது. மொழி அழிந்தால் இனம் அழியும். கண்கூடாகப் பல மொழிகள் அழிந்தன. இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், வடமொழி எல்லாம் வாழ்வு மொழிகளாக இல்லைவாழ்மொழிகளானச் சீனமும், வளமைமிகு தமிழ் மொழி மட்டுமே உள்ளன. இதிலும் சீன மொழியில் பல கிளை மொழிகள் உள்ளன. ஆனால் தமிழ் மட்டுமே தமிழாக தழைத்தோங்கி உள்ளது. செம்மொழியாய் சிறந்தோங்கி இலக்கண, இலக்கியத்தோடு விளங்குகிறது.

எதிர்கொள்ள வேண்டிய அரியப் பணிகள்:

மொழி ஞாயிறு பாவாணரால் தோற்றுவிக்கப்பட்ட பேரியக்கமாம் உலகத் தமிழ்க் கழகம் செம்மாந்து செம்மொழி யாய் தமிழ் போல் செழித்தோங்க வேண்டும். இதில் அனைவரின் அரியப் பாங்கான பங்களிப்பு மேற்கொள்ளுதல் வேண்டும்.

இந்திய ஒன்றியத்திலுள்ள 32 மாநிலங்களிலுள்ள தாய் மொழிகளையும் நடுவண் “ஆட்சி மொழியாக்கவும், சிங்கப்பூர், மலேசியா நாடு போல ஒவ்வொரு ஒன்றியத்தின் மொழி, இனம், பண்பாடு காக்கப் பட வேண்டும்.

தமிழின் மேன்மை மென்மேலும் செழித்தோங்க சமற்கிருதம், ஆங்கிலம், இந்தித் திணிப்பிலிருந்தும் தடுத்திட வேண்டும்.

தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழ் இனம், தமிழர் தொன்மையின்வரலாறு. தமிழர் வீரம், இலக்கியம், இலக்கணம், திருக்குறள் நெறி உள்ளடக்கிய பாடவகைகள் இடம் பெறச் செய்தல் வேண்டும்.

மானம்போவது வாணவேடிக்கையா? – க.அருள்மொழி

தீபாவளி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல. ஆனால் தீபாவளி பண்டிகை தொடர்பாக தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களைப் பார்ப்போம்.

1922 இல்  கல்கத்தாவில் ஜப்பானைச் சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. அப்போது சிவகாசியிலிருந்து பி. ஐயன்,  ஏ.சண்முகம் ஆகியோர் தீப்பெட்டித் தொழிலைக் கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928 இல் தீப்பெட்டித் தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. இப்போது இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் மேற்கொள்ளப்படுகிறது

ஒவ்வொரு நாளும் வேலைக்கு போய்விட்டு வீடு திரும்புவோமா? என்ற ஏக்கத்துடன் தான் வேலைக்கு செல்கிறார்கள் பட்டாசுத் தொழிலாளர்கள். இந்த தொழிலை விட்டால் வேறு மாற்றுத் தொழில் இல்லை. எவ்வளவு ஆபத்தான வேலையாக இருந்தாலும் சரி, இந்த வேலையைச் செய்தாவது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டுமே என்ற அவலத்தினால் தான் வேலைக்குச் செல்கிறார்கள். பட்டாசு தொழிலாளர்கள் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அவர்களாக விரும்பி இந்த வேலைக்கு செல்வது கிடையாது. யார் தான், எந்நேரமும் தான் சாகக்கூடும் என்று தெரிந்து கொண்டு இவ்வளவு ஆபத்தான வேலைக்குச் செல்வார்கள்? ஆனாலும் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை. தான் இன்று வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் மாலை உயிருடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வோமா என்கிற உத்திரவாதம் இல்லாமலே வேலைக்குச் செல்லும் ஒரே வேலை பட்டாசு தொழில் தான்.

நம்மில் பலருக்கும் ஒரு கேள்வி எழலாம்? ஏன் இவ்வளவு ஆபத்து என்று தெரிந்து இந்த வேலைக்குச் செல்கிறார்கள்? என்பது தான். வேறு மாற்று தொழிலும், அதற்கு முறையான ஏற்பாடு எதுமே கிடையாது என்பது தான் எதார்த்தம்! இதுபோன்று அன்றாடம் விருதுநகர் மாவட்டத்தில் சர்வ சாதாரணமாக நடக்கும் செயல் தான் இந்த பட்டாசு விபத்துக்கள். இவைகள் விருதுநகர் மாவட்டச் செய்திகளில் இடம்பெறும் பெட்டி செய்திகளாக அன்றாடம் இடம்பெறும் செய்திகளில் ஒன்று என்பதை போல ஆகிவிட்டது பட்டாசுத் தொழிலாளர்களின் உயிர் பலிகள்.

தீபாவளி மட்டும் என்றில்லை கோவில் திருவிழாவோ, தேர்தலோ எதுவென்றாலும் வெற்றியைக் கொண்டாட பட்டாசுகளைத்தான் கொளுத்திப் போடுகின்றனர். வெடிச்சத்தம்தான் மக்களுக்குக் கொண்டாட்டமாய் இருக்கிறது.

தீபாவளி தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சில சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை என்பது தீப்புண்ணுக்கு சின்ன ஆறுதல்!  விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீபூஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

‘நரகனைக்கொன்ற  நாள் நல்ல நாள் விழாவா’ என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

கபடி,  உறியடி, சந்தை கூடுதல் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்கள் தீபாவளியின் போது இருப்பதில்லை. மாறாக ‘தீபாவளி ரிலீஸ்’ சினிமாப் படங்கள், தீபாவளி தள்ளுபடிகள், தீபாவளி சுற்றுலா, ‘தலை’ தீபாவளி ( 100 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய கொண்டாட்டத்தில் தலை தீபாவளியே கிடையாது) ஆகியவை பண்டிகையின் முக்கிய அம்சங்களாகும்.

பெரியார் தன் வாழ்நாள்முழுவதும் தீபாவளி பண்டிக்கைக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தார். தீபாவளி கொண்டாடுவது தமிழினின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் பெரும் இழுக்கை தேடிக் கொடுப்பது என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினார். தீபாவளி கொண்டாடும் தமிழர்களை எவ்வளவு தூரம் திட்டி திருத்த முடியுமோ, அவ்வளவு தூரம் திட்டி திருத்த முயன்றார். ‘’நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா? நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்’’.- குடிஅரசு, 07.10.1944 என்று மிகக் காட்டமாகவே குறிப்பிட்டார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பத்திரிக்கைகள் சிறப்பு மலர்கள் போடுவதும் தொலைக்காட்சியில் சினிமா நட்சத்திரங்களை அழைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குவதும், பட்டிமன்றங்களை நடத்துவதும் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகின்றது. இதன் மூலம் தீபாவளிப் பண்டிகை மிக முக்கியமானதாக, கொண்டாடியே ஆகவேண்டிய ஒன்றாக திட்டமிட்டு இனத் துரோகிகளால் பரப்பப்படுகின்றது. ஒவ்வொரு சாமானியனின் மனதையும் பார்ப்பனியத்தால் நச்சாக்கி அதில் பணம் ஈட்டுகின்றது. தமிழன் எப்போதுமே மானமுள்ளவனாக, சுயமரியாதை உள்ளவனாக மாறக்கூடாது என்பதில் இந்த எச்சிலை ஊடகங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன.

தீபாவளி போனஸ்: இதற்கு ஒரு சரித்திர பின்னணி உள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் மாதச் சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது  4 வாரங்களுக்கு ஒரு முறை  சம்பளம்  கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.

அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930-ம் ஆண்டு வாக்கில் மகாராஷ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின. தங்களுக்கு ஒரு மாதச் சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடின. 10 ஆண்டு காலம்

இந்த போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப் படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 1940-ஆம் வருடன் ஜுன் மாதம் 30-ஆம் தேதி இந்தியாவில் முதன் முதலாக இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது. பின்னர் தீபாவளி மாதத்தில் வரும் செலவுகளைச் சமாளிக்கத் தொழிலாளர்கள் ‘தீபாவளி போனஸ்’ என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். இதுதான் ‘தீபாவளி’ போனஸ் பிறந்த கதை.

தீபாவளி போனசுக்காக பல வேலை நிறுத்தங்கள் போராட்டங்கள் நடப்பது ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கை.

செய்தித்தாள்,தொலைகாட்சி ஊடகங்களுக்கு இதுவொரு ‘போனஸ்’ பரபரப்பு (ஙிஸிணிகிரிமிழிநி ழிணிகீஷி) செய்தி! இப்போராட்டங் களை ஒடுக்க,பல தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்வதும், போலிஸ் தடியடியில் சிலர் மரணமடைவதும் சில குடும்பங்களில் அழியாத வடுக்களை ஏற்படுத்தும். ஆனாலும் போராடிப்போராடி பெற்ற போனஸ் தொகையை கரியாக்குவது எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

போக்குவரத்து நெரிசல்: சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை செய்யும் ஐம்பது விழுக்காட்டினர் வெளியூர் மக்கள்தான். அவர்கள், தீபாவளிக்காக ஊருக்குச் செல்வது என்பதே பெரிய போராட்டம்தான். பேருந்து தொடர்வண்டிகளில் முன்பதிவு செய்ய முண்டியடிப்பதும், முன்பதிவு கிடைக்காமல் தொங்கிக் கொண்டு போவதும், தொங்கிக் கொண்டு போகவும் வழியில்லாமல் கலங்கி நிற்பவர்களை பேட்டி எடுப்பதும் தொலைக்காட்சிகளில் பார்ப்பது வேதனையான வேடிக்கை..

இந்தியாவில் இருந்த பூர்வ பழங்குடி மக்களை ஆரியர்கள் வென்று ஆக்கிரமித்த தொல்குடி கதைகளே புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் எழுதப்பட்டன. அவ்வகையில் பார்ப்பன இந்து மதப் பண்டிகைகள் அனைத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான செய்திகளையே கொண்டிருக்கின்றன. வருண, சாதி, பாலின ரீதியாக அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எவரும் இந்து மதப்பண்டிகைகளை கொண்டாட முடியாது. மனித குலம் தான் கடந்து வந்த பாதையின் வெற்றிப்படிகளை நினைவுகூரும் வண்ணம் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகைகள்

இங்கே இந்தியாவில் எதிர்மறையாகவே இருக்கின்றன.

நுகர்வு கலாச்சாரம்: இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டாலும் இன்று தீபாவளி என்பது மக்கள் பண்டிகையாக மாறிவிட்டது என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். தீபாவளிக்கென்று தனி சந்தை உள்ளதைக் கண்டு கொண்ட முதலாளிகள் அதன் வீச்சைக் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரிக்க வைத்திருக்கின்றனர். ஊடகங்கள் வாயிலாக தீபாவளியின் மகத்துவம் நுகர்வு கலாச்சாரச் சந்தையை குறி வைத்து உப்ப வைக்கப்பட்டது. சமீப ஆண்டுகளாக புத்தாண்டு மற்றும் காதலர் தினத்தையே இளைஞர்கள் மத்தியில் மாபெரும் கொண்டாட்டமாக மாற்றிய முதலாளிகள் தீபாவளியை மட்டும் விட்டு விடுவார்களா என்ன?

இனிப்பு, புத்தாடை, பட்டாசு என குழந்தைகள் உலகம் தீபாளியை மையமாக வைத்து சுழல்வதும் உண்மைதான். தீபாவளி அன்று உலகமே கொண்டாடுவதான பிரமையிலிருந்து தன் குழந்தைகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்பதை ஏழைகளே ஏற்றுக் கொள்ளும் வண்ணம் தீபாவளி உருவெடுத்து விட்டது.

பகுத்தறிவு சாயம் போய்விட்டது: மாட்டுப் பொங்கலுக்குக் கூட தனது மாடுகளுக்கு கருப்பு சிவப்பு வர்ணமடித்து, அழகு பார்க்கும் தி.மு.க வின் இலட்சியவாதத் தொண்டன் இன்றில்லை. பார்ப்பன எதிர்ப்பு மரபை கொண்டாடிய அவனது நேற்றைய பெருமையில் சிறு துளி கூட இன்று காணக்கிடைப்பதில்லை. ரஜினி ரசிகர்கள், இந்து முன்னணி தொண்டர்கள், ஆதிக்கசாதி வெறியர்கள் முதலானோருக்கும் ஒரு தி.மு.க தொண்டனுக்கும் இன்று அடிப்படையில் என்ன பெரிய வேறுபாடு உள்ளது?

கலைஞர்  கருணாநிதி இருந்தபோது ‘ஆதிசங்கர்’ பொட்டு வைத்ததையெல்லாம் கண்டித்தாலும்  சன் டி.வியும், கலைஞர் டி.வியும் போட்டி போட்டுக்கொண்டு தீபாவளியைக் கொண்டாடும்போது கலைஞரின் பகுத்தறிவு மரபு  யாரைப்பார்த்து அழும்? ‘தீ பரவட்டும்’  பரப்புவதை மறந்த உடன்பிறப்புகள் இன்று  பட்டாசுத்தீமையைத்தான் பரப்புகிறார்கள். அண்ணா நாமம் வாழ்க! பகுத்தறிவு இயக்கம் என்று நம்பப்படும் கம்யூனிஸ்ட்கள் தீபாவளி கொண்டாட எப்போதுமே கூச்சப்பட்டதில்லை.

தீக்குள் விரலை வைத்தால்…? தீபாவளி என்பது எவ்வளவு ஆபத்தான விழா (?) என்பதை ,பட்டாசு வெடிப்பதற்கான எச்சரிக்கைகளைப் படித்தால் புரியும்!

சேப்டி டிப்ஸ்

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு படை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி அளித்த ‘டிப்ஸ்’ இங்கே…

 • முதலில் முதியோர்கள், குழந்தைகள் மட்டுமல்லாது அண்டை வீட்டாருக்கும் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதை மனதில்கொண்டு, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என்பதையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை எக்காரணம் கொண்டும் வெடிக்கக் கூடாது என்பதையும் கட்டாயம் கடைப்பிடியுங்கள்.
 • பட்டாசு வெடிக்கும்போது அருகில் மணல், தண்ணீர்  பக்கெட்டுகளையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
 • சிறுவர்கள் அதிக ஒலி எழுப்பும்  பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. குடிசைப் பகுதிகள் உள்ள இடத்தில் ராக்கெட், லட்சுமி வெடி, டைம் பாம் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது.
 • மத்தாப்புகளை கொளுத்தி முடித்த  பின்னர் கால்வாயிலோ அல்லது அருகில் வைக்கப்பட்டிருக்கும் பக்கெட் தண்ணீரிலோ போட வேண்டும்.
 • பட்டாசுகளை வெடிக்கும்போது நீண்ட  ஊதுவத்தி உபயோகித்து பக்கவாட்டில் பட்டாசை கொளுத்துவது நல்லது. .
 • எளிமையான கதர் மற்றும் காட்டன் ஆடைகளை  அணிவது நல்லது. ஒரு முறை வெடிக்காமல் போன பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
 • தரமான பட்டாசுகளை பெரியவரின் கண்காணிப்போடு  பயன்படுத்த வேண்டும்.
 • திறந்த வெளிகளில்தான் பட்டாசைக்  கொளுத்த வேண்டும்.
 • வெடிக்காத உதிரி பட்டாசுகளைக் கையில்  எடுக்கக்கூடாது. வெடிகளை கையில் வைத்து வெடிக்கக் கூடாது.
 • நாட்டு வெடிகளை  பயன்படுத்தக்கூடாது. குழந்தைகள் தனியாகப் பட்டாசுகளை கொளுத்தக் கூடாது.
 • குடிசைப் பகுதி, மொட்டை மாடிகளில்  வெடிகளை வெடிக்கவேண்டாம். எளிதாக தீ பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
 • வெடிக்காத பட்டாசுகளையும், வெடிகளையும் ஒன்றாக  சேர்த்து வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை கொளுத்தி மற்றவர்கள் மீதோ, தெருவிலோ வீசி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
 • தீப்பெட்டி  மற்றும் மெழுகுவர்த்தி மூலமாக பட்டாசுகளை வெடிக்க செய்யாதீர்கள்.
 • சாக்குகளை ஈரமாக வைத்துக்கொண்டு வெடிக்காத  வெடிகள் மீது போட்டு செயல் இழக்க செய்யவேண்டும்.
 • பெரியவர்களின் மேற்பார்வையில் தான் குழந்தைகளை  பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.
 • எரிந்து முடித்த பட்டாசு,  கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீருள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணில் முக்க வேண்டும். 

பட்டாசு கடைகள், கேஸ் கிடங்குகள், உணவுப்பொருள் சேமிப்பு கிடங்குகள், வைக்கோல் போர், மருத்துவமனை, பெட்ரோல் பங்கு, மின்சாரம் டிரான்ஸ்பார்மர், மார்க்கெட் பகுதிகளில், பட்டாசு வெடிக்கக்கூடாது.  தீபாவளி பற்றிய மூட நம்பிக்கைக் கதைகளில் நரகாசுரன் கதை மட்டுமே பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும். தீபாவளிக்கான காரணக் கதைகள் பல நூறு உண்டு. அதையெல்லாம் இங்கே விவரிக்க முடியாது. ஆனால் தீபாவளி கொண்டாடாத தமிழர்களை மட்டுமே மானமும் அறிவுமுள்ளவர்கள் என்று சொல்ல முடியும்.

ஜாதிய உணர்வை கிழித்து எரியும் புலவர் நாகை பாலு

ஜாதிய உணர்வை கிழித்து எரியும் புலவர் நாகை பாலு | “இன்னமும்கூட ஜாதி பாக்குறாங்க சார்” | Kaithadi TV

குறளும் கீதையும் ஒன்றா! – பேரா. கருணானந்தன்

கெளரா இலக்கிய மன்றம் (ம) பெரியார் தி.மு.க சார்பில், குற்றாலத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கோவி.லெனின் அவர்கள் திராவிடம் இன்றும்! என்றும்… என்ற தலைப்பில் ஆற்றிய உரை…