EXCLUSIVE argument | அரசமரத்தின்மீது வயிறுபட்டால் கர்ப்பம் தரிக்குமாம் | ROSY Vs OC

குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன என்றும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, 1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும் என்றும். 2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும் என்றும். 3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும் என்றும். 4. குறைந்தபட்சம்Continue reading “EXCLUSIVE argument | அரசமரத்தின்மீது வயிறுபட்டால் கர்ப்பம் தரிக்குமாம் | ROSY Vs OC”

போராட்டமே இனி வாழ்க்கை – தோழர் கா.தமிழரசன்

இந்த உலகில் இனி சாதாரண மக்கள் வாழ முடியுமா? அதற்கான இடம் இந்த பூமியில் இருக்கிறதா? என்ற எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. காரணம், அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்படும் விதம்தான். இனி இந்த பூமி அதன் இயற்கைத் தன்மையோடு இயல்பாக, அமைதியாக, அழகாக இருக்குமா? அவ்வாறு இருக்க இந்த அதிகார வர்க்கம் அனுமதிக்குமா? வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கை வளங்களை எல்லாம் அழிக்கின்ற வேலையைச் செய்யத் தொடங்கி காடு, மலை, ஆற்று  மணல், ஆழ்துளைகள் மூலம் நீர்Continue reading “போராட்டமே இனி வாழ்க்கை – தோழர் கா.தமிழரசன்”

மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பைப் பறித்த தமிழக அரசு – தோழர் இரா.முல்லைக்கோ, பெங்களூரு.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டில்அரசு பொறுப்பேற்றது, இரு பெரும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஒன்று சுயமரியாதைத் திருமணம்: முன்னர் நிகழ்ந்தவையும் இனி நிகழ்விப்பதும் செல்லுபடியாகும் என்றும் இரண்டாவதாக மதராஸ் ஸ்டேட் என்ற பெயரினைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றினார். இது ஒரு வரலாற்றுப் பதிவாகும். இதற்கு பின்னர் தான் தங்களின் மாநிலத்தின் பெயர்களை மாற்றியுள்ளனர் என்பது அறிந்தத் தகவலாகும். மண்ணின் மைந்தர்கள் என்ற எழுச்சி முழக்கம் தலையோங்கி ஒலிக்கத் தலைப்பட்டதுContinue reading “மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பைப் பறித்த தமிழக அரசு – தோழர் இரா.முல்லைக்கோ, பெங்களூரு.”

எம்மண்ணின் குருதி..! – கவிஞர் நா.காமராசன், மண்டகொளத்தூர்.

நாங்களாம் செருப்பு போட்றதுக்கு முன்னாடி கோரைத்திட்டு மேல கால மாத்திமாத்தி வச்சிதான் ஆத்துக்கு அந்தப்பக்கம் போவோம்; அடிக்கிற கத்திரி வெயில்ல மணல்ல காலவச்சா அவ்வளோதான் தீய்ஞ்சி போயிரும்! ஆத்தோரத்துல ஓடையாட்டம் ஒடுற தண்ணி ஆங்காங்கே குட்டையாய்த் தேங்கி நிற்குது பாசிப்புடிச்சி; தாகத்துக்கு முட்டிப்போட்டு அதுலதான் தண்ணி குடிப்போம், பக்கத்துல செவலக்கண்ணுக்குட்டியும் சேர்ந்து குடிக்கும் எங்களோட! ஆத்தோரத்துல இருக்குற புங்கமரம்தான் வெயிலுக்கு ஒதுங்குற எடமா இருந்துச்சு; அப்பப்போ அடிக்குற லேசான காத்துல புங்கம்பூ மேல உதிரும்! மாயாண்டி மாமாதான்Continue reading “எம்மண்ணின் குருதி..! – கவிஞர் நா.காமராசன், மண்டகொளத்தூர்.”

மறைக்கப்படும் பரதக்கலையின் வரலாறு – வழக்கறிஞர் குயில்மொழி (The Undoing Dance by Srividya Natarajan)

“தி அண்டூய்ங் டான்ஸ்” வித்யா நடராஜன் எனும் பரத நாட்டியக் கலைஞரால் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தைக் குறித்து ஒரு இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. அவரின் துணிச்சலான பதில்களும் இந்தப் புத்தகத்தின் கருப் பொருளும் என்னை உடனே ஈர்த்தது. பரதநாட்டியத்தின் வரலாற்றையும், தேவதாசி ஒழிப்பு பற்றியும் அதன் பின் பரதத்தின் இன்றைய நிலையையும் பேசுகிறது ஜகர்னட் பதிப்பம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம். வித்யா அவர்கள் தஞ்சை நால்வர் வழி வந்த சங்கீத கலாநிதி திரு.கே.பி.கிட்டப்பா பிள்ளை அவர்களின் மாணவர்.Continue reading “மறைக்கப்படும் பரதக்கலையின் வரலாறு – வழக்கறிஞர் குயில்மொழி (The Undoing Dance by Srividya Natarajan)”