‘‘ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ்..! கப் ஐஸ்..!

ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ் கப் ஐஸ் வெயிலுக்கு இதமான குளிர்ச்சியான சேமியா ஐஸ்..! ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ்..!  கப் ஐஸ்..! ’’ ஐஸ்..!  வாங்கலையோ ஐஸ்..!’’ என்றபடி ஐஸ் வண்டிக்காரர் சத்தம் போட்டுக்கொண்டே ஊருக்குள் நுழைந்தார்; ஐஸ் வண்டியின் சத்தம் கேட்டதும் ஊரில் உள்ள வாண்டுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ் வாங்க தயார் நிலையில் இருந்தனர். பாட்டியைத் தொல்லை செய்து பாட்டியின் பையில் இருந்த அஞ்சு, பத்து  ரூபாய்களை பிடிங்கிக்கொண்டு பெயரன்மார்கள்Continue reading “‘‘ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ்..! கப் ஐஸ்..!”

பசி

அந்தப்பூனை வழக்கம்போல் அதிகாலை ஐந்தரை மணிக்கே வாசலில் வந்து நின்று கரைந்தது. ஒரு சின்ன குழந்தையின் கெஞ்சுதல் அந்தக்குரலில். ஸ்டெஃபி நேற்றே அவள் பாட்டி வீட்டிற்குச் சென்றது அதற்குத் தெரியாது. கதவைத் திறந்து வெளியே தலைநீட்டிய பாட்டியின் முகம் நோக்கி அதே கெஞ்சுதல்; பாலுக்குக் கேவும் சின்னஞ்சிறு குழந்தைகயின் உடைந்த குரலில். பூனையைப் பார்க்காமல், தொலைவிலிருந்து அந்த குரலைக் கேட்டால் நிச்சயமாக அது ஒரு குழந்தையின் கெஞ்சும் குரல்தான். ‘ம்யாவ்…ம்யாவ்… மியா…வ்…வ்…” ஒரே மொழி! ஓவ்வொரு முறையும்Continue reading “பசி”

ராவுத்தர் குதிரை – புலவர் நாகை பாலு

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இன்றும் அந்த நிகழ்வு என் நினைவைக் குடைகிறது. வெள்ளைக் குல்லாய். காலர்இல்லாத சிங்கப்பூர்ஜிப்பா. கணுக்காலுக்கு மேலோடு நின்று விடும் கட்டம் போட்ட லுங்கி, ஐம்பது வயதைக் காட்டி நிற்கும் நரைத்த தாடி. மீசை இல்லை. தனது வண்டிக்குதிரை ‘சுல்தானை’ போலவே சலனமற்ற முகம். காதர்பாய் சொந்த கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போதுதான் புழக்கத்துக்கு வந்திருக்கும் பை-பாஸ் சாலையிலிருந்து நெசவாளர் காலனிக்குத் திரும்பும் அறுபது அடி சாலையின் வலது புறத்தில்Continue reading “ராவுத்தர் குதிரை – புலவர் நாகை பாலு”

நடந்த கதை! – கி.தளபதிராஜ்

தென்னை, மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா, எலுமிச்சை, என இடைவெளியின்றி தழைத்துக் கிடந்தது கொல்லை. மோடி குப்பைப் பொறுக்குவதுபோல் நடித்ததைத் தொலைக்காட்சியில் பார்த்ததன் தாக்கமோ என்னவோ, மண்டிக்கிடந்த கிளை, தழைகளை கழித்துவிட எண்ணி தெருவில் சென்று கொண்டிருந்த வேலையாட்களை அழைத்திருந்தார் அம்மா. ஒரு வழியாக கூலி பேசி முடித்து வேலையைத் தொடங்கியவர்களிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். வந்ததில் ஒருவர் இளைஞர். மற்றவர் அவருக்கு சித்தப்பா முறை. சித்தப்பா சொன்னார். “ சார் போனமாதம் உங்க நகர்லContinue reading “நடந்த கதை! – கி.தளபதிராஜ்”

இலட்சுமி வெடி – மு.சி.அறிவழகன்

‘‘ஜோதி..! ஜோதி..! இந்தாடா பையா கத்துறது காதுல விழுதா இல்லையா..! போட்ட சாப்பாடு அப்படியே இருக்கு மணி ஒன்பது ஆக போது வந்து சாப்பிட்டு தூங்குடா..! சொல்ல சொல்ல காதுல வாங்காம அங்க உட்காந்துனு என்னடா பையா பண்ணுற..!’’ ‘‘நா சாப்டுக்கிற நீ உன் வேலைய பாரும்மா..!’’ ‘‘கொழம்பு புடிக்கலனா சொல்லுடா செல்வி அக்கா வீட்டுல வாங்கி தரேன் பட்டினியா படுக்காத டா பெத்த மனசு பதறுது வாடா பையா..!’’ ‘‘நா சாப்பாடு புடிக்கலன்னு சொன்னனா..! என்Continue reading “இலட்சுமி வெடி – மு.சி.அறிவழகன்”

செவ்வா சந்தை – மு.சி.அறிவழகன்

‘‘ஹ லோ..! ராமா நா மஞ்சு பேசுறேன், நாளைக்கு வியாபாரத்துக்கு செவ்வா சந்தைக்கு  போகணும் வாடகைக்கு வரியா..!’’ ‘‘சரி மஞ்சு வரேன் எந்த ஊர் சந்தைக்கு போகணும்..?’’ ‘‘நம்ம ஊரு சந்தைக்கு தா எவ்வளவு வாடகை கேக்குற…’’ ‘‘எப்பவும் வாங்குறது தா.. உனக்கு தெரியாதது ஒண்ணும் இல்ல, டீசல் வில வேற நாளுக்கு நாள் ஏறிட்டே போகுது பாத்துக்குடு…’’ ‘‘சரி ராமா 500ரூபா கொடுக்குறேன் கொண்டு போய் விட்டுட்டு வரும் போது அப்புறம் பாத்துக்கலாம்…’’ ‘‘இல்ல மஞ்சுContinue reading “செவ்வா சந்தை – மு.சி.அறிவழகன்”

தினக்கூலி மு.சி.அறிவழகன்

அழகிய அந்திமாலைப் பொழுதில்  சின்ன பொண்ணும் சின்னசாமியும் ஊரின் எல்லையில் உள்ள தங்களது வயல்களின் இயற்கை அழகை ரசித்தபடி சுற்றி வந்தனர்; சின்னசாமி சின்னபொண்ணுவிடம் ‘‘பாப்பா..! நேத்து தா மழை பேஞ்சி இருக்கு போன வாரம் ஒட்டி புழுதி கொட்ட நட பதமா இருக்கு நாளைக்கு கொட்ட நடலாமா…?’’னு கேட்க… ‘‘சரிங்க மாமா நடலாம் கூலிக்கு ஆள் கூப்பிடவா’’ சொன்னதும் ‘‘சரி பாப்பா..! கூப்பிடு நா போய் கொட்ட வாங்கினு வரேன்’’னு வண்டிய எடுத்துட்டுப் பட்டணத்துக்கு கிளம்ப…Continue reading “தினக்கூலி மு.சி.அறிவழகன்”

மூனுக்கு பத்தா? தோழர் ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன்

திணை: நிலம் – தமிழ் நாடு. பொழுது – முதுவேனில். துறை:சமூக நீதி, பகுத்தறிவு கடும் வறட்சி சூழ்ந்த காலம். எங்கும் நீர் இல்லை. செம்மண்ணே எங்கும் பல் இளித்துக் கொண்டு காட்சி அளிக்கிறது. பச்சைப்புல்லும் இல்லை. பச்சைச் செடியும் இல்லை. நிலமெங்கும் செம்மண். கதிரவனின் மஞ்சள் நிறம். நீல வானம். இம் மூவண்ணம் மட்டுமே தற்போது சூழ்ந்துள்ள அந்த கிராமத்தில், மொட்டை வெயிலில், ஆற்று மணலில் மூன்று சிறுவர்கள் ஊற்று நீரில் குழி வெட்டி, அதில்Continue reading “மூனுக்கு பத்தா? தோழர் ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன்”

உறைபனி – புலவர் நாகை பாலு

கத்தரிக்காலம்,. வெக்கை. குறைந்திருந்த விடிகாலம். அந்தக் குளுமையை அவள் அனுபவித்திருக்க வேண்டும். இல்லை, அவள் முகத்தைச் சுற்றி இடுப்புவரை போர்வை. பஸ் ஸ்டாண்டின் குழல்விளக்கு வெளிச்சத்தில் அவள் முகத்தில் அப்பியிருந்த வேதனை தெளிவாகவே தெரிந்தது. நடையில் முகம் காட்டிய சோர்வு அவள் உடல் நலிவைப் பளிச்சிட்டுக் காட்டியது. சேலத்துக்குப் புறப்பட இருந்த பஸ் பாதி காலி. செம்பங்கி அவள் தோள்பட்டையைத் தாங்கி பஸ்ஸில் ஏற்றினான். ஏறுவதற்குள் படாதபாடு பட்டுவிட்டாள். கையிலிருந்த அந்த பிளாஸ்டிக் கூடையைக் கீழே வைத்துContinue reading “உறைபனி – புலவர் நாகை பாலு”

எதிர்வினை! – புலவர் நாகை பாலு

எஸ்.ஐ..யின் முன்னால் நின்ற மாரியின் முகத்தில் எள்முனையளவும் பயமில்லை. தள்ளுவண்டிமேல் கைவைத்தபடியே நின்றான். ‘ஏய் வண்டியை ஓரமா நிறுத்து…” ‘ஓரமாத்தான் நிறுத்தியிருக்கேன் சார்.., இன்னும் தள்னா சாக்கட தான்…” குரல் கோபத்தில் குளித்து வெளியானது, அடக்கு முறைக்கு எதிரான கோபம் அது.. சப்-இன்ஸ்பெக்டர் திரும்பி தள்ளுவண்டியின் வலப்பக்க சக்கரங்களை முகம் தாழ்த்தியப் பார்த்தார், இன்னும் இரண்டங்குலம் நகர்த்தினால் தள்ளுவண்டி சாக்கடையில் சாய்ந்துவிடும், பார்வையை மேலேற்றி மாரியின் முகத்தைப் பார்த்தார். ‘பஸ் ஸ்டாண்ட்தா வியாபாரம் செய்ற எடமா?” மிரட்டல்Continue reading “எதிர்வினை! – புலவர் நாகை பாலு”