புதிய விடியல்!

புதிய விடியல்! எனக்கு மழை பிடிக்காது என்றாள் அம்மா! பொத்தல்களின் தூறலைப் பொத்திவைக்க பாத்திரம் இல்லையென்றாள்! ஈசான மூலையின் பரணுக்கடியில் அம்மாவும் நானும் அன்றொருநாள் அடைமழைப்பொழுதில்! கொட்டும் மழைத்தூறலில் வெளிச்சத்திற்கு வந்தது வறுமையின் சுவடுகள்! ஈர விறகின் புகைமூட்டத்தில் வெந்து தணிந்திருந்தது எங்கள் வயிற்றைப்போலவே அந்த அடுப்பும்! உயிர் பிரியும் தருணத்திற்காகக் காத்திருந்தது மண்ணென்ணெய் தீர்ந்த சிம்னி விளக்கு! ஐந்தாறு வரிசையாய் அடுக்கி வைத்திருந்த அடுக்குப்பானையில் விழும் மழைத்துளியின் சத்தம் வறுமையின் ஒப்பாரிச்சத்தமாய் எதிரொலித்தது! ரெட்டைத்திண்ணையில் வெள்ளாடுக்குட்டிகள்Continue reading “புதிய விடியல்!”

திருவிழா

ஆத்திருநாவுக்கு இன்னும் ஒருமாசம்தான் இருக்கு! அதுக்குள்ள சொந்தக்காரங்களுக்கு கடுதாசி எழுதி வரவைக்கனும்! ஊர்லேயே பெரிய திருநானா அதுதான்! எல்லா வீட்லயும் சொந்தம் பந்தங்க நெறஞ்சி இருப்பாங்க திருநாவுக்கு மூணுநாள் நாலுநாள் முன்னாடியே வந்துருவாங்க! ஊரே அமர்க்களமாய் இருக்கும்! குப்பாத்தா பாட்டி ஒண்டிக்கட்டையா ஒத்தை குடிசையில காலத்த ஓட்டிட்டு இருந்தது! இருந்த ஒரேஒரு பொண்ணையும் ரொம்ப தொலைவுல செங்கத்துக்கு அப்பால தானிப்பாடில கட்டி குடுத்துருச்சு! அப்பப்போ வரபோக முடியாது ஒட்டுத்திண்ணைல ஒக்காந்துட்டு ஏதாச்சும் ஒண்ண பொலம்பிட்டே இருக்கும்! மகக்காரியோContinue reading “திருவிழா”

கரம்கோர்த்து நடந்த தடங்கள்! – கவிஞர். நா.காமராசன் மண்டகொளத்தூர்

நீ வரும் வழியில்தான் இருந்தது அந்த கள்ளிச்செடி நான் தீட்டிய அழகோடு உன் பெயர்! உன் முகம் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சாங்கூடு வரை வந்த வார்த்தைகள் தொண்டைக்குள்ளே சிக்கிக் கொண்டது! உன் ஒத்த சடைபின்னலை முன்னெடுத்து விட்டு நடக்கும் போதெல்லாம் தேவதைகளுக்கு உன் பெயராலே இலக்கணம் தீட்டிக்கொண்டிருப்பேன்! யாருமற்ற அந்த ஒத்தையடிப்பாதை நம் இருசோடி கால்களுக்காய் காத்திருக்கும் நாம் நடந்துவரும் திசைப்பார்த்து! ஆத்து சரளை மண்ணில் உன் விரல் பிடித்து எழுதிய நம் முதலெழுத்தில் முளைவிட்டு தழைத்திருந்ததுContinue reading “கரம்கோர்த்து நடந்த தடங்கள்! – கவிஞர். நா.காமராசன் மண்டகொளத்தூர்”

மருத்துவமனையிலிருந்து – கவிஞர் இளம்பிறை

பெரிய செம்பூக்களை உதிர்க்கும் இம்மருத்துவமனை வளாகத்திலுள்ள பெயரறியா இம்மரத்தின் நிழலாக அடர்ந்த துயரத்தில் கண்களை வலியமூடி ஆசுவாசங்கொள்கிறேன். கண்ணாடிக் கதவில் வழியும் மழைநீரைப்போல என் உடலிலிருந்து வெளியேற்றப்படும் அசுத்த ரத்தத்தைப் பார்த்திருந்து கழிகிறதென் பொழுதுகள். ‘சர்’ரென இழுத்துத்திறக்கும் நீண்ட திறப்பான்களால் மூடப்பட்ட வெற்றுப்பையாக.. குழந்தைபேறு தொடங்கி இத்துடன் பத்துமுறை கிழிக்கப்பட்ட ரணத்தின் முனகல்களுடன் படுக்கையில் கிடக்கும் எனதுடலை வலியால் துடிக்கும்  எல்லோருக்காகவும் சேர்த்தழுது கழுவிக் கொள்கிறேன். உடலிலிருந்து போராடி அகற்றிய கம்பிகளையும்… தகடுகளையும் திருகுகளையும் புதையலைப்போல காட்டியContinue reading “மருத்துவமனையிலிருந்து – கவிஞர் இளம்பிறை”

தொலைந்த மண்! – கவிஞர் நா.காமராசன் மண்டகொளத்தூர்

ஆகாரத்தா வீட்டு சேவல் கூவிய நேரம் அது ஒரு முழுநிலா இரவு; வெள்ளைக்குட்டை கழனியில ஏர் ஓட்ட கௌம்பிய முனியன்! நிலவொளியில் மீன்களாய் விளையாடிக்கொண்டிருந்தது தெளிந்த சேற்றுமடையில் நட்சத்திரக் கூட்டங்கள்! கரிசல்மேட்டில் ஒற்றை புங்கமரம் தென்றலோடு கலந்து தாலாட்டிக்கொண்டிருந்து அந்த வைகறைப் பொழுதை! தூரத்தில் ஊளையிடும் நரியின் சத்தம் ஒடநகரத்து ஏரியில் மஞ்சி புற்களுக்கிடையில் கொஞ்ச கொஞ்சமாய் ஓய்ந்திருந்தது! வானத்தின் வயிற்றை கிழித்து மெது மெதுவாய் கிழக்கே பிறந்து வந்தாள் பொன்மஞ்சள் பூசிய செங்கதிர் மகள்! கோணக்குட்டைContinue reading “தொலைந்த மண்! – கவிஞர் நா.காமராசன் மண்டகொளத்தூர்”

அப்பா – கவிஞர் இளம்பிறை

நீ மாடுபார்த்துக்கொள்ள ஒரு கோணிப்பையை போட்டுக்கொண்டு நான் பள்ளிக்குச் செல்ல குடை கொடுத்தனுப்பினாய் நான் வயல்வேலைக்குச் சென்றிருந்த ஒரு மழைக்கால ஞாயிறன்று ‘படிக்கிறபுள்ள குளிருதாங்கா’ தென்று டீ வாங்கிவந்து கொடுத்து விட்டு திரும்பும் போது வரப்பிலிருந்து வழுக்கி விழுந்துவிட்டாய் சனங்கள் சிரித்துவிட்டனர் மழைத்துளிகளோடு என் கண்ணீர் துளிகளும் வயலில் விழுந்ததை அறிந்ததுபோல் ‘ஒன்னும் இல்லத்தா சும்மா கால் வழுக்கிறீச்சி’ என நீ விழுந்ததற்கு எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப்போனாய் என் கறுப்புநிறத்தை வீடே சேர்ந்து கிண்டல் செய்யும்போதெல்லாம் ‘என்Continue reading “அப்பா – கவிஞர் இளம்பிறை”

சாரல் நினைவுகள் கவிஞர் நா.காமராசன்

ரங்கநாத வாத்தியார் பாடவேளைனாவே எல்லாருக்கும் பயம்தான்; மூங்கில்கொம்புகூட பிய்ஞ்சி போயிரும்! நாளைக்கு மூணாம் வாய்ப்பாடு எல்லாரும் எழுதி ஒப்பிக்கனும்னு சொல்லிட்டாரு! மறுநாளு பாதிப்பேர்கிட்ட லீவுப் போட்டாங்க நாந்தான் தெரியாம போயி மாட்டிகிட்டேன்; வருகைப்பதிவேட்டில் பாதிக்கும் குறைவாக உள்ளேன் ஐயா குரல் ஒலித்தது! வீட்டுப்பாடம் எழுதாதவங்க கையத் தூக்குங்க வாத்தியாரின் குரலில் அடிவயிறு கலங்கியது என்னைப் போலவே பலருக்கும்! உடைந்த சிலேட்டில் பாதிதான் எழுத முடிந்தது என்னால். பக்கத்தில் வேடியப்பனுக்கு சிலேட்டே இல்லை! முதல் வரிசையில் இருந்த அஸ்லாம்தான்Continue reading “சாரல் நினைவுகள் கவிஞர் நா.காமராசன்”

துள்ளித்திரிந்த காலங்கள் – கவிஞர் நா.காமராசன், மண்டகொளத்தூர்.

ஒத்தையடிப்பாதை தோரணமாய் முள்வேலி வழியெங்கும் கோவப்பழம் கைபிடித்து அழைத்துச்செல்ல தோழியாய் அக்காமார்கள் இதோ எங்கள் பால்வாடி வகுப்பறை! சிதிலமடைந்த செங்கல்சுவர் ஒடுகள் வேய்ந்த சிவந்தகூரை சிலந்திகள் நெய்த வலைக்கூடு குழந்தைகள் கிறுக்கிய ஓவியக்காடு சிட்டுக்குருவியின் வைக்கோல்கூடு எங்கள் புத்தம்புதிய கனவுக்காடு! ரங்கசாமி களத்துமேடு அய்யர்தெரு பெருமாள்கோவில் அரசமர பஜனைக்கோயில் மணியக்கார முள்வேலித்தோட்டம் எங்கள் வகுப்பறைத் தாண்டிய விளையாட்டுத் திடல்! மல்லிப்பூ கொண்டுவந்த நிலா நரியிடம் ஏமாந்து நின்ற காக்கை அம்மாவிடம் வாங்கிய ஆசைமுத்தம் மேகவீதியில் மழையின் சாரல்Continue reading “துள்ளித்திரிந்த காலங்கள் – கவிஞர் நா.காமராசன், மண்டகொளத்தூர்.”

விடியல் வாசம் – கவிஞர் நா.காமராசன்

அதிகாலைப் பறவைகளின் அலாரத்தில் விடியும் எங்கள் கிராமத்து விடியல்! ஏத்தம் இறைக்கும் மாடாசாமியின் வெங்கலக்குரல் செங்காட்டிலிருந்து எதிரொலிக்கும் வடக்குத்தெருத்தாண்டி ஊருக்குள்! தெருக்கிணற்றில் ராட்டினத்திற்கும் சுவற்றில் மோதி நீர் தளும்பும் வாளிக்கும் இடையே மிருதங்க ராகமாகும் தண்ணீர் இறைக்கும் சத்தம்! மாம்பட்டிலிருந்து கல்யாணமாகி வந்திருக்கும் புதுப்பொண்ணுக்கும் மாமியாருக்கும் ஆரம்பித்திருக்கும் அதிகாலை முதல் சண்டை வாசலில் சாணி தெளிப்பதில்! தோளில் கலப்பையும் கையில் உழவு மாடுகளோடும் போராடிக் கொண்டிருப்பார் சின்னக்கண்ணு கழனிக்கு ஏரோட்டிச் செல்ல! மாட்டுக்கொட்டகையிலிருந்து மாடுகளைக் களத்துமேட்டுக்கு விரட்டிக்கொண்டிருப்பார்Continue reading “விடியல் வாசம் – கவிஞர் நா.காமராசன்”

சிட்டுக்குருவியும் சின்ன மழலையும் – கவிஞர். நா.காமராசன் மண்டகொளத்தூர்

அம்மா கூலிவேலைக்கும் அப்பா மரம்வெட்டவும் போனபிறகு தாழ்வாரத்திண்ணையின் கூரையில் வந்து அமரும் சிட்டுக்குருவிதான் என் சின்னஞ்சிறு தோழன்! அவ்வப்போது பக்கத்திலிருக்கும் நுணா மரத்துக்கும் வீட்டு கூரைக்கும் இடையே தன் சின்னஞ்சிறு இறகுகளால் ஊஞ்சலாடும் என்னைப்போலவே! உச்சிவெயிலில் கரைத்து வைத்த கூழில் இருக்கும் ஒன்றிரண்டு சோற்றுப்பருக்கைகளே இரையாகும் என்னோடும் ஊஞ்சலாடும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிக்கு! வேலிக்காத்தான் மரத்தின் சில்லுவண்டு சத்தங்கள் எங்கள் உரையாடலை வழிமறிக்கும்; சிலநேரம் கீச்கீச் குரலால் எசப்பாட்டு பாடும்! சிலநேரம் பூட்டப்பட்ட கதவின் இடுக்கின் வழியே பறந்துசென்றுContinue reading “சிட்டுக்குருவியும் சின்ன மழலையும் – கவிஞர். நா.காமராசன் மண்டகொளத்தூர்”