உப்புமூட்டை தூக்கி – பேராசிரியர் கு.முருகேசன்

விளையாட்டு என்பது விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடியதல்ல. விளையாட்டு என்பதை தமிழ் அறிஞர்களோ புலவர்களோ சரியாக வரையறுத்ததாகத் தெரியவில்லை. மனிதனுக்கு உவகையை கொடுப்பதில் விளையாட்டும் ஒன்று என்பதுதான் தொல்காப்பியர் விளையாட்டுக்கு கொடுக்கும் வரையறை. மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயலே விளையாட்டு எனலாம். இன்று விளையாட்டு என்பது பலரால் பொழுதுபோக்காக பார்க்கப்படுகிறது. இது வெறும் பொழுதுபோக்குவதற்கான செயல் அல்ல, மாறாக குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என விளையாடுவோரின் உடல் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியுள்ளது. குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால் தான்Continue reading “உப்புமூட்டை தூக்கி – பேராசிரியர் கு.முருகேசன்”

தமிழர் விளையாட்டுகள் “உப்புக்கல்” பேராசிரியர் – கு.முருகேசன்

கோடை விடுமுறைகளை முடித்துவிட்டு குழந்தைகள் எல்லாம் பள்ளியை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். படையெடுக்கிறார்கள் என்று சொல்வதற்கு காரணம், அங்கு அவர்கள் வீட்டுப்பாடம், வகுப்புப் பாடம், தேர்வுக்குத் தயாராவது, போட்டித் தேர்வுக்குத் தயாராவது, நுழைவுத்தேர்வுக்கு தயாராவது என இன்று அவர்கள் கல்வியோடு ஒரு பெரிய போரையே நடத்த வேண்டியுள்ளது. ஆனால் அதே விளையாட்டு என்று வரும் பொழுது நமது பிள்ளைகள் பட்டாம்பூச்சி என சிறகடித்துப் பறக்கிறார்கள். ஏனெனில் அது மனதையும் உடலையும் ஒருங்கிணைத்து மனதிற்கு மகிழ்ச்சியையும் உடல்Continue reading “தமிழர் விளையாட்டுகள் “உப்புக்கல்” பேராசிரியர் – கு.முருகேசன்”

கொக்கு பற பற… பேராசிரியர்-கு.முருகேசன் “தமிழர் விளையாட்டுக்கள் “

கோடை காலம் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தாலும் குடும்பத்தை நடத்த வேண்டுமே, பிள்ளைகளைப் படிக்கவைக்கப் பணம்கட்ட வேண்டுமே என்பதற்காக விவசாயிகளும், கட்டடம் கட்டும் கூலித் தொழிலாளர்களும், அலுவலகத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியரில் இருந்து மேலதிகாரி வரை அனைவரும் தொடர்ந்து வேலைக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். இதில் உடல் வருத்தி வேலை செய்யும் விவசாயிகளும் கூலித்தொழிலாளர்களும் நாம்தான் போதுமான படிப்பறிவு இல்லாமல் வெய்யிலில் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிறோம், நம்ம பிள்ளைகளாவது நன்றாகப் படித்துவிட்டு அலுவலகத்தில் மின்விசிறிக்கு அல்லது குளிர்சாதனப் பெட்டிக்கு அடியிலிருந்துContinue reading “கொக்கு பற பற… பேராசிரியர்-கு.முருகேசன் “தமிழர் விளையாட்டுக்கள் “”

கோ கோ குச்சிக்கோ – பேராசிரியர் கு.முருகேசன்

சித்திரை மாதத்தில் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும், ஆடுமாடுகள் மேய்ச்சல் இன்றியும் தண்ணீர் இன்றியும் தவிக்கும், ஏன் காட்டில் உள்ள பறவைகளும் விலங்குகளும் கூட தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் படையெடுக்கும். இப்படி ஊரே தவித்தாலும் ஊரில் உள்ள குழந்தைகளும் பள்ளிச் செல்லும் பிள்ளைகளும் தெருக்களில் எதையும் பொருட்படுத்தாமல் விளையாடி மகிழ்வதைக் காணலாம். அதுவும் இந்த மாதத்தில் பள்ளிகளுக்கெல்லாம் விடுமுறை என்பதால் அவர்கள் விளையாட்டில் பள்ளிப்பாடங்களும் வீட்டுப்பாடங்களும் தொல்லை செய்யவே செய்யாது.Continue reading “கோ கோ குச்சிக்கோ – பேராசிரியர் கு.முருகேசன்”

ஒரு குடம் தண்ணி ஊத்தி – தமிழர் விளையாட்டுகள் – பேராசிரியர் கு.முருகேசன்

கோடை காலத்தில் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். அந்தக் கொடுமைகளை விட பெரிய கொடுமை என்னவென்றால் ஊரெங்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தொலை தூரத்திலிருந்து தண்ணீர் சுமந்துவருவதுதான் அதைவிடவும் கொடுமையாக இருக்கும். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் இன்னும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தாவரங்களுக்கும் என்ன கதி?  மனிதன், தண்ணீர் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிவிடும் குளிர்பானத்தைப் போல ஆழ்துளை (போர்) போட்டு உறிஞ்சிவிடத் தயாராக இருக்கிறான், ஆனால் பூமியில் தண்ணீர்தான் இருப்பதில்லை. காரணம் மழைContinue reading “ஒரு குடம் தண்ணி ஊத்தி – தமிழர் விளையாட்டுகள் – பேராசிரியர் கு.முருகேசன்”