அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி

தந்தை பெரியார் , தனக்குப் பிறகு தன் கொள்கைகளையும் இயக்கத்தையும் காப்பாற்றவும் பரப்பவும் வழி நடத்தவும் தகுதியும் நம்பிக்கையும் உள்ள தொண்டர்களாக நம்பித்தேர்வு செய்தார் இரண்டு மணிகளை- ஒருவர் அரசியல்மணி என்று முதலில் அழைக்கப்பட்ட மணியம்மை; இரண்டாமவர் கி.வீரமணி! தந்தை பெரியார் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்தக் கருத்துகளைப் பரப்பும் கடமையையும் தம் தலையில் தூக்கிச் சுமந்தார். அதைச் செயல்படுத்தும் களங்களையும் அமைத்து, முதல் தொண்டனாகத் தன்னையே முன்னிறுத்தினார். சிறைவாசம் என்று வந்த போது சிரித்தContinue reading “அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி”

தாலி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்!

பெண்கள் தங்களின் மரியாதையாக மதிக்கும் தாலி புனிதம் அல்ல அது வெறும் கயிறு பெண்களின் அடிமைச்சின்னம் என்பதை உணர்ந்த நாங்கள் 14 ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் காமலாபுரத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் சிலை திறப்புவிழாவில் தாலி மறுத்து சடங்குகள் மறுத்து ஒரு பொதுகூட்டத்தில் எங்களின் வாழ்க்கையைத் தொடங்கினோம் இன்று 15ஆம் ஆண்டில் பயணிக்கின்றோம். ஊரே நினைத்து இருந்தது தாலி இல்லாமல் திருமணம் செய்கிறானே இவன் என்ன உருப்படப் போகிறானா என்று அந்த ஊர்Continue reading “தாலி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்!”

அக்கிராசனரவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது, மேல் சாதிக்காரன் கீழ் சாதிக்காரனை நடத்துவதைவிட, பணக்காரன் ஏழையை நடத்துவதைவிட, எசமான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரந்தான் தாழ்மையாய் நடத்துகின்றார்கள், ஆனால் ஆண்களோ பெண்களை பிறவி முதல் சாவு வரை அடிமையாயும் கொடுமையாயும் நடத்துகின்றார்கள், நாம் எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து அடிமைகளாய் வளர்க்கப்பட்டோம் என்பதை மறுக்கின்றீர்களா? ‘நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளுவேன்: நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும்Continue reading “அக்கிராசனரவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!”

பெண்ணுக்கு வீடில்லை, ஊரில்லை, நாடில்லை! – அ.அருள்மொழி

17.3.2019 அன்று அரியலூரில் மருத்துவர் வசந்தா அவர்கள் தலைமையேற்று நடத்திய உலக உழைக்கும் மகளிர் தினக் கருத்தரங்கில் அ.அருள்மொழி ஆற்றிய உரை… சில முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்று நினைக்கும்போது, அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல்கூட போய்விடும். ஆனால் மனதில் அந்த நினைவு இருந்துகொண்டே இருக்கும். இருந்துகொண்டே இருக்குமென்றால் ஏன்? எங்கயோ இருக்கோம். திடீரென்று மழை பெய்கிறது. மழை பெய்வதற்கு முன், நமக்கு எப்படித் தெரியுமென்றால் மண் வாசனை வரும். மழைத்துளி சத்தம் கேட்பதற்கு முன்Continue reading “பெண்ணுக்கு வீடில்லை, ஊரில்லை, நாடில்லை! – அ.அருள்மொழி”

“கருஞ்சட்டைப் பெண்கள்” நூல் விமர்சனம் – தோழர் மான்விழி, ஆத்தூர்

இன்றைய இளைஞர் சமுதாயம் திராவிடத்தின் தேவையையும் அதன் தேடலையும் கையிலெடுத்துள்ள சூழலில் வெளிவந்திருக்கும் நூல்தான் தோழர் ஓவியா அவர்கள் எழுதி, கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘‘கருஞ்சட்டைப் பெண்கள்” நூல். பெரியாரின் கொள்கை வழிக் குடும்பத்தில் பிறந்து, பெரியாரியலில் வளர்ந்து, மார்க்சியத்தையும், அம்பேத்கரியம் கூறும் பெண்ணுரிமையையும் கற்றுணர்ந்து, பெண்ணிய விடுதலையின் திறவுகோல் பெரியார் வழியே என்று தன்னுடைய புதிய குரல் மூலம் பல தளங்களிலும் முழங்கி வருபவர் தோழர் ஓவியா அவர்கள். நூல் முழுவதும் கடந்த நூற்றாண்டில் நிலவியContinue reading ““கருஞ்சட்டைப் பெண்கள்” நூல் விமர்சனம் – தோழர் மான்விழி, ஆத்தூர்”

திருமணம் ஏன்? – தந்தை பெரியார், (இராஜபாளையத்தில், 6-12-1944-இல் சொற்பொழிவு- விடுதலை 16-12-1944)

தாய்மார்களே! தோழர்களே! இந்த உலகத்தில் சொத்தைப்பற்றியும், மேல் உலகம் என்பதில் மோட்சம் என்பதைப் பற்றியும் இலட்சியம் இல்லாவிட்டால் திருமணம் என்பதாக வாழ்க்கை ஒப்பந்தம் என்பதாகக் கூட எதுவும் தேவையில்லை. நாம் தேடிய சொத்துக்கு நாம் பெற்ற பிள்ளை வாரிசாக இருக்க வேண்டும் என்பதே திருமணத்தின்  முக்கிய நோக்கமாகும். அதற்கும் அந்தந்த சமுதாயப்படி சொத்தை அனுபவிக்கச் சிலருக்கு ஆண் பிள்ளை வேண்டும். சிலருக்கு பெண் பிள்ளை வேண்டும். தேவதாசிகளும், மருமக்கள் தாயம் உள்ளவர்களும் தங்கள் சொத்துக்கு பின் சந்ததியாகContinue reading “திருமணம் ஏன்? – தந்தை பெரியார், (இராஜபாளையத்தில், 6-12-1944-இல் சொற்பொழிவு- விடுதலை 16-12-1944)”