தமிழர் திருநாள்

திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்கு, தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாசாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாசாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக& தமிழ்நாட்டின் தமிழனின் கலாசாரங்களை பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாசார பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு,Continue reading “தமிழர் திருநாள்”

அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி

தந்தை பெரியார் , தனக்குப் பிறகு தன் கொள்கைகளையும் இயக்கத்தையும் காப்பாற்றவும் பரப்பவும் வழி நடத்தவும் தகுதியும் நம்பிக்கையும் உள்ள தொண்டர்களாக நம்பித்தேர்வு செய்தார் இரண்டு மணிகளை- ஒருவர் அரசியல்மணி என்று முதலில் அழைக்கப்பட்ட மணியம்மை; இரண்டாமவர் கி.வீரமணி! தந்தை பெரியார் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்தக் கருத்துகளைப் பரப்பும் கடமையையும் தம் தலையில் தூக்கிச் சுமந்தார். அதைச் செயல்படுத்தும் களங்களையும் அமைத்து, முதல் தொண்டனாகத் தன்னையே முன்னிறுத்தினார். சிறைவாசம் என்று வந்த போது சிரித்தContinue reading “அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி”

சனி என்ன செய்யும்? – ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து

திணை நிலம் :     தமிழ் நாடு, அமெரிக்கா. பொழுது   :- ஆடி சிறு பொழுது    :-    மாலை, யாமம் துறை     :     கேள்வி, பகுத்தறிவு சன்னல் வழியே கீழே பார்த்தால் வெண் பஞ்சை போன்று எங்கும் பரந்து சூழ்ந்திருக்கும் மேகம். வெண் மேகத்தின் மேல் பட்டுத் தெறிக்கும் கதிரவனின் மஞ்சள் ஒளி. ‘இன்று போய் நாளை வருகிறேன்’ என கடலுக்குள் மூழ்கப் போவது போல், அந்த மாலை வேளையில்  கதிரவன் சென்று கொண்டிருக்கிறது. கதிரவனும் கடலும் கலக்கும்Continue reading “சனி என்ன செய்யும்? – ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து”

கடிதம் எழு தினால் புதிய இந்தியாவில் தேச துரோகம் – கா.தமிழரசன்

இந்த நாட்டின் பொதுமக்களில் ஒருவராக உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் இந்திய நாட்டின் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள். இன்றைய நிலையில் நாட்டில் நடப்பவைகளை கவனித்து இது ஏன் நடக்கிறது? இதற்கு முன்பு இதுநாள்வரை  இதுபோல் இவ்வளவு மோசமாக நடக்கவில்லை, அதுபோல் தாங்கள் கண்டதில்லை. குறிப்பாக  தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக மாட்டு இறைச்சி வைத்திருந்தார்கள், மாட்டை வண்டியில் கடத்திச்சென்றார்கள், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லி சொல்லாதவர்களை குண்டர்கள் கூட்டம் கும்பல்களாக சேர்ந்து கொண்டுContinue reading “கடிதம் எழு தினால் புதிய இந்தியாவில் தேச துரோகம் – கா.தமிழரசன்”

மானம்போவது வாணவேடிக்கையா? – க.அருள்மொழி

தீபாவளி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல. ஆனால் தீபாவளி பண்டிகை தொடர்பாக தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களைப் பார்ப்போம். 1922 இல்  கல்கத்தாவில் ஜப்பானைச் சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. அப்போது சிவகாசியிலிருந்து பி. ஐயன்,  ஏ.சண்முகம் ஆகியோர் தீப்பெட்டித் தொழிலைக் கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928 இல் தீப்பெட்டித் தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னரேContinue reading “மானம்போவது வாணவேடிக்கையா? – க.அருள்மொழி”

நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றால் மனதில் ஒரு புத்துணர்வு பிறக்கும் . எனக்கும் அப்படியே. அதனால் எவ்வளவு தொலைவாயினும் பயணம் செய்து எத்தனையோ பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ஊர்வலங்களிலும் திருமணங்களிலும் கல்லூரி மாணவர்களின் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறேன். துயரம் மிகுந்த மனநிலையோடு பங்கேற்ற திலீபனின் நினைவேந்தல் கூட்டங்களிலும் ‘மருத்துவர்’அனிதாவின் முடிவு பற்றியும் கண்ணீருடன் அழுதபடி பேசியிருக்கிறேன். ஆனால் அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு மேலையூர் என்ற சிற்றூரில்Continue reading “நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி”

அசுரன் நமக்கானவன் – பூ.கொ.சரவணன்

‘வெக்கை எதார்த்தமாகப் பிறந்ததுதான். பெரிய பின்னணி எதுவும் கிடையாது. நானறிய நடந்த கதை. பசுமையான இலையைப் பூச்சி கொறித்தது போல் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களைக் கோர்த்து அவனது மனவெக்கையுடன் சொல்லனுமென்று ரெம்ப நாளாக எனக்குள் ஒரு துடிப்பு. மலங்காடு, மயானம், கண்மாய், அய்யனார் கோயில் என்று நான் சுற்றித் திரிந்த எனது இளமைக்கால அனுபவங்களைக் கொலைச் சம்பவத்துடன் பொருத்திப் பார்த்தேன். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எழுத முடிந்தது. கொலை செய்தது சிதம்பரம். காட்டுக்குள் திரிந்தது நான்Continue reading “அசுரன் நமக்கானவன் – பூ.கொ.சரவணன்”

இல்லறம் இனிய நல்லறம் – தோழர் அ.இரா.முல்லைக்கோ பெங்களூரு.

சமுதாயம் என்பது ஒரு கூட்டமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பில் பல சிக்கல்கள் வாய்ந்த தனித்தனி அமைப்புகள் கலந்து உறவாடும் நிலை ஏற்படும், சிக்கல் வாய்ந்த சமுதாய அமைப்பினை ஆராய அறிந்து கொள்ள பல அறிவியல் சார்ந்த அனுபவ அறிவியல், அறிவியல் அனுபவ முறைகள் தேவைப்படும். ‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தூழா துஞற்று பவர்” (திருக்குறள் 620) என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை. இந்தக் குறளுக்கு மூதறிஞர் கலைஞர் – ‘‘ஊழ் என்பது வெல்லமுடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சிContinue reading “இல்லறம் இனிய நல்லறம் – தோழர் அ.இரா.முல்லைக்கோ பெங்களூரு.”

370 ஐ நீக்கியது 786 ஐ குழிதோண்டி புதைக்கவே – தோழர் கா.தமிழரசன்

இந்திய மன்னர் காஷ்மீர் மீது போர் தொடுத் துள்ளார். அங்கே இவருக்கு வெற்றியா? தோல்வியா? என்கின்ற கேள்வியே இல்லை. பல வருடங்களாக காத்திருந்து அதிகாரம் கைக்கு வந்தவுடன் தங்களது நீண்ட நாள் கனவை, வெறியை நினைவாக்க, நடைமுறைப்படுத்த களத்தில் இறங்கிவிட்டார்கள். திட்டமிட்டு அனைத்தையும் முடக்கிவிட்டு அசுர பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார்கள். ஆகவே, இதுவே இவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி. அங்கே என்ன நடக்கிறது என்கின்ற உண்மை செய்தி நிச்சயம் வெளி உலகுக்கு தெரியாது. ஆனால் அங்கே என்ன நடக்கும்Continue reading “370 ஐ நீக்கியது 786 ஐ குழிதோண்டி புதைக்கவே – தோழர் கா.தமிழரசன்”

கல்விநிலையமா? கொலைக்களமா? – தோழர் திராவிடராசன்

ஆதிவாசிகள் இனி நடனமாட மாட்டார்கள் என்ற புத்தகத்தை எழுதிய ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் அந்தப் புத்தகத்தில், ஜார்க்கண்ட் மாநில சாந்தால் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பற்றி எழுதியிருப்பார். அதிலே ஒரு கட்டுரையில், தங்களின் வாழ்வாதாரமான காடுகள், வீடு, நிலம் உள்ளிட்ட இருப்பிடங்கள் அனைத்தையும் காலி செய்து, ஊரையே அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களிலே இருக்கும் நிலக்கரியை சுரண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு பழங்குடிகளின் நிலங்களை தாரைவார்க்க நடத்தப்படும் கோலாகல நிகழ்ச்சிக்கு வருகைதரும், குடியரசுத்தலைவருக்கு வரவேற்பளிக்க,Continue reading “கல்விநிலையமா? கொலைக்களமா? – தோழர் திராவிடராசன்”