நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றால் மனதில் ஒரு புத்துணர்வு பிறக்கும் . எனக்கும் அப்படியே. அதனால் எவ்வளவு தொலைவாயினும் பயணம் செய்து எத்தனையோ பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ஊர்வலங்களிலும் திருமணங்களிலும் கல்லூரி மாணவர்களின் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறேன். துயரம் மிகுந்த மனநிலையோடு பங்கேற்ற திலீபனின் நினைவேந்தல் கூட்டங்களிலும் ‘மருத்துவர்’அனிதாவின் முடிவு பற்றியும் கண்ணீருடன் அழுதபடி பேசியிருக்கிறேன். ஆனால் அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு மேலையூர் என்ற சிற்றூரில்Continue reading “நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி”

வயதானவர்களை வாட்டும் தோள்பட்டை வலி – மரு.சிவராஜ் M.S.Ortho

தோள்பட்டை மூட்டு வலி என்பது பலருக்கு அன்றாட பிரச்சினையாக உள்ளது. அதுவும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி மற்றும் அசைவின்மை பெரும் தொந்தரவாகவே உள்ளது. தோள் பட்டை வலி என்பது பொதுவாக 50-60வயதினருக்கு வருகிறது. பெரும்பாலும் பெண்களுக்கே வருகிறது. ஏன் வலி வருகிறது நமது தோள்பட்டை மூட்டு இரண்டுக்கும் மேற்பட்ட எலும்புகள் இணையும் இடம். இந்த வடிவமைப்பை தாங்கி இயக்க அந்த மூட்டினை சுற்றி காப்சியூல் (Capsule) என்னும் மூட்டு பாதுகாப்பு திசு உள்ளது. அதற்குContinue reading “வயதானவர்களை வாட்டும் தோள்பட்டை வலி – மரு.சிவராஜ் M.S.Ortho”

குதிகால்வலி – மரு.சிவராஜ் M.S.Ortho

குதிகால் வலி என்பது பலருக்கு அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்ட பிரச்சினையாகவே உள்ளது. அதிகாலை எழுந்தவுடன் கால்களை தரையில் வைக்கவே ஐந்து நிமிடம் யோசிக்கும் அளவுக்கு குதிகால் வலி இருக்கும். ஆனால் சில மணி நேரம் வலியைப் பொறுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கிவிட்டால் வலி குறைந்துவிடும். நாள் முடிந்த பின் திரும்பப் படுக்கைக்குத் திரும்பும்போது மீண்டும் குதிகால் வலி வரும்.  இந்த பிரச்சனைக்கு பிளாண்டார் பேசியையைட்டிஸ் (Plantar Fasciitis)  என்று பெயர். குதிகால் எலும்பிலிருந்து பாதத்தின் விரல்களுக்கு மீண்டும்Continue reading “குதிகால்வலி – மரு.சிவராஜ் M.S.Ortho”

முதுகுத் தண்டுவடம் பாதிப்புகள் சிகிச்சை முறைகள் – மரு.சிவராஜ் M.S.Ortho

சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால்அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம்.  தண்டுவட நரம்பு மண்டலம்  நம் உடலின் இயக்கம் மற்றும் உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின்தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடலின் இயக்கத்தை மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடம், மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதாலும், விபத்தினால் ஏற்படும் தண்டுவட எலும்புமுறிவு, அதன் ஜவ்வு பகுதி வீக்கம், எலும்பு நகர்வு,Continue reading “முதுகுத் தண்டுவடம் பாதிப்புகள் சிகிச்சை முறைகள் – மரு.சிவராஜ் M.S.Ortho”

நிகழ மறுத்த அற்புதம் டாஸ்மாக் மருத்துவர் யாழினி . M.B.B.S.,

ப்ளட்ஸ்பிட்ஸ் பூங்கா. சுவிற்சர்லாந்தில் உள்ள இந்த பூங்கா (Platspitz Park), 1980 களில் ஆயிரக் கணக்கான ஹெராயின் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாலேயும் போதைப்பொருளை கைமாற்றி விடுபவர்களாலேயும் நிறைந்திருக்குமாம். அன்றைய அப்பூங்காவின் காட்சிகள் தான் சுவிற்சர் லாந்தின் கட்டற்ற போதை கலாச்சாரத்தின் நினைவுகளாக இன்றும் பேசப்படுகின்றது. கட்டற்ற போதை கலாச்சாரத்தின் விளைவாய், அப்பூங்கா, போதை ஊசிப் பூங்கா என்ற செல்லப்பெயரினை தாங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் 1000திற்கும் மேற்பட்டவர்களின் உடம்பில் ஹெராயினும் பற்பல போதை மருந்துகளும் உடம்புக்குள் செலுத்தப்படும் இடமாகContinue reading “நிகழ மறுத்த அற்புதம் டாஸ்மாக் மருத்துவர் யாழினி . M.B.B.S.,”

பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கும் பிறவி வளைபாதமும் அதன் மருத்துவமும் – மரு.சிவராஜ் M.S.Ortho.,

பிறவி வளைபாதம் அல்லது பிறவிக் கோணல் அடிக்கால் (Club foot) என்பது ஒரு பிறவிக் குறை ஆகும். இந்தப் பாதிப்போடு பிறந்தவர்களின் ஒரு பாதமோ அல்லது இருபாதங்களோ கீழே பக்கவாட்டாக அல்லது மேல்நோக்கி அல்லது உள்நோக்கி திரும்பி இருக்கும். பாதிக்கப்பட்ட காலானது, மற்ற சாதாரணக் காலைவிடச் சிறியதாக இருக்கும். இந்தப் பாதிப்பு உள்ளவர்களில் பாதிப் பேருக்கு இரு கால்களும் இந்தப் பாதிப்புக்கு ஆளாகுகிறது. இந்தப் பாதிப்புக்கு ஆளான பெரும்பாலானவர்களுக்கு உடன் பிறசிக்கல்கள் இருப்பது இல்லை. சிகிச்சை அளிக்கப்படாதContinue reading “பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கும் பிறவி வளைபாதமும் அதன் மருத்துவமும் – மரு.சிவராஜ் M.S.Ortho.,”

குழந்தைகளின் எலும்புகளைப் பாதிக்கும் ரிக்கெட்ஸ் என்னும் எலும்பு மெலிவு நோய் – மரு.சிவராஜ், M.S.Ortho.,

ரிக்கெட்ஸ் என்னும் எலும்பு மெலிவு நோயானது ஆறு மாதத்தில் இருந்து மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கக் கூடியது. இந்த நோயால் வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி தடைபட்டு அதனால் எலும்பு அமைப்பில்மாறுதல்கள் உண்டாகிறது. எதனால் வருகிறது      எலும்புகள் வளர்ச்சிக்கு முக்கியமான  வைட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படும் ரிக்கெட்ஸ் நோயே பெரும்பான்மையாகஉள்ளது. இது மட்டும் அல்லாமல் உணவில்  கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்றாக் குறையாலும் வர வாய்ப்புண்டு. இந்தவைட்டமின்  டி ஆனது சூரிய ஒளி நம் தோலின்Continue reading “குழந்தைகளின் எலும்புகளைப் பாதிக்கும் ரிக்கெட்ஸ் என்னும் எலும்பு மெலிவு நோய் – மரு.சிவராஜ், M.S.Ortho.,”

நடுத்தர வயதுப் பெண்களை பாதிக்கும் முடக்குவாதம் – Dr. சிவராஜ் M.S. Ortho எலும்பு மூட்டு மற்றும் முடநீக்குவியல் மருத்துவர், கோவை.

உடலில் உள்ள சிறிய, பெரிய மூட்டுக்களையும், அதை சுற்றியுள்ள திசுக்களையும் பாதித்து வீக்கம்,வலி, அசைவின்மை உண்டாக்கும் நாட்பட்ட வியாதியே முடக்கு வாதம்(Rheumatoid Arthritis) ஆகும். நடுத்தர வயது பெண்களையே (20-40) இந்த நோய் அதிகமாகத் தாக்குகிறது. இது பரம்பரை நோயாக அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவே. அனைத்து மூட்டுகளும் பாதிக்கப்படலாம் என்றாலும் கை விரல் மூட்டுகள், மணிக்கட்டு, முழங்கை, முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டுகள் அதிகமாக முடக்கு வாதத்தால் பாதிக்கப்படுகின்றன. அதிகாலை எழுந்தவுடன்Continue reading “நடுத்தர வயதுப் பெண்களை பாதிக்கும் முடக்குவாதம் – Dr. சிவராஜ் M.S. Ortho எலும்பு மூட்டு மற்றும் முடநீக்குவியல் மருத்துவர், கோவை.”

குடி போதை – மருத்துவர் யாழினி

குடி போதை. இம்மனநிலை ஒருவரின் மொத்த வாழ்வினையே புரட்டிப்போடக்கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம் அனைவருக்கும் ஒரு நண்பர் இருப்பார். குடிக்காமல் இருக்கையில் சாதாரணமாக இருப்பவர், குடித்தப்பின் வேறொரு நபராக மாறியிருப்பார். மருத்துவத் துறையில், என்னுடைய மிகக் குறைந்த அனுபவத்திலேயே, குடியால் பல குடும்பங்கள் சிதைந்ததை, பலரின் தொழில் நசிந்ததை, வேலையினைப் பலர் இழப்பதைப் பார்த்திருக்கிறேன். அதோடு பல பிரபலங்கள் தங்களின் நம்பகத்தன்மையினை இழந்ததையும் முக்கியமாக பற்பல குழந்தைகள் பெற்றோரில் ஒருவருடைய குடிப்பழக்கத்தினால் மோசமான வீட்டுச்சூழலில்Continue reading “குடி போதை – மருத்துவர் யாழினி”