என்ன செய்தார் ஈ.வெ.ரா?

ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச் சாகடித்தப் பெருமை அவர் கை தடிக்கே உண்டு, என்று தந்தை பெரியாரைப் பற்றி எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.  ஆம், தான் வாழ்ந்த காலமெல்லாம் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அடக்கப்பட்ட பெண் சமூகத்திற்கு பாடுபட்டு, உழைத்து உரிமைகளை பெற்றுத் தந்த தலைவர் பெரியார். என்ன செய்தார் ஈ.வெ.ரா.? என்ன செய்தார் நாயக்கர்? என்று கேள்வி கேட்டு அகமகிழும் ஜாதி, மத வெறியர்களுக்கும், இன்றைய இளைய சமூகத்திற்கும் இந்த கட்டுரை. பெரியார் ஒருContinue reading “என்ன செய்தார் ஈ.வெ.ரா?”

கீழடியால் மேலெழுந்த திராவிடம்!

“இந்தியாவில் காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது அரசியல் போராட்டம் அல்ல, ஆரியர் திராவிடர் போராட்டம்தான்“ இது தந்தை பெரியாரின் கூற்று. அந்தக் கூற்றை கீழடியும்  உண்மையாக்கியிருக்கிறது. இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடைபெற்றபோதே மாறுதல் செய்யப்படுவதற்கு அத்துறையின் சட்டதிட்டத்திலேயே இடம் இல்லாத நிலையில், அமர்நாத் இராகிருஷ்ணன் அவர்கள் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு மாறுதல் செய்யப்பட்டார். கீழடி வைதீகத்திற்கு ஏக கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்? கீழடி ஆரியர் திராவிடர் போராட்டத்தில், திராவிடர்களுக்கு ஒரு அரிய போர்க்கருவியை அகழாய்வின் மூலம் கொடுத்திருக்கிருக்கிறது. சும்மாContinue reading “கீழடியால் மேலெழுந்த திராவிடம்!”

நூல் விமர்சனம் – சிந்திக்க மறுப்பது ஏன்!

பெரியார், அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோரின் தத்துவங்களைக் கற்ற ஒரு மனிதன் இந்த சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை, சமூக ஏற்றத்தாழ்வுகளை, சம மனிதனை மனிதன் சுரண்டும் சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராடாமலோ, கருத்து சொல்லாமலோ இருக்க முடியாது, அதுவும் இந்தியா போன்ற ஜாதியமும் முதலாளித்துவமும் கைகோர்த்துக் கொண்ட ஒரு நாட்டில் சமூக அமைப்பு மீது கோபம் இருந்தே தீரும், அப்படி கோபப்பட்ட ஒரு எழுத்தாளரின் கருத்து தொகுப்பே ‘சிந்திக்க மறுப்பது ஏன்?” இந்த நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க தூண்டுகிறது,Continue reading “நூல் விமர்சனம் – சிந்திக்க மறுப்பது ஏன்!”

தமிழரின் பேரியக்கம் – முல்லைக்கோ

செந்தமிழர் ஆண்ட நாடு: பன்னிராயிரத்து எண்ணூறு கிலோ மீட்டர் விட்டமுடைய இந்தவுலகம், ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர் நாடாகவும் தமிழர் உலகமாகவே இருந்தது.  ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய ஒன்றியத் துணைக் கண்டம் முழுவதும் செந்தமிழராண்ட கண்டமாகவே இருந்தது, இது வரலாற்று உண்மையாகும். புலம்பெயர்தல்: தென்குமரி இலெமூரியாக் கண்டத்தில் மாந்த இனமும், பெருந்தமிழ் பிறப்பெடுத்து வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் தடைகளைத் தாண்டிக் காலவளர்ச்சியின் ஊடாகக் காவுகொள்ளும் கடற்கோள், கட்டுக்குலைக்கும் நில நடுக்கம், உயிருக்கு உலை வைக்கும்Continue reading “தமிழரின் பேரியக்கம் – முல்லைக்கோ”

மானம்போவது வாணவேடிக்கையா? – க.அருள்மொழி

தீபாவளி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல. ஆனால் தீபாவளி பண்டிகை தொடர்பாக தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களைப் பார்ப்போம். 1922 இல்  கல்கத்தாவில் ஜப்பானைச் சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. அப்போது சிவகாசியிலிருந்து பி. ஐயன்,  ஏ.சண்முகம் ஆகியோர் தீப்பெட்டித் தொழிலைக் கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928 இல் தீப்பெட்டித் தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னரேContinue reading “மானம்போவது வாணவேடிக்கையா? – க.அருள்மொழி”

பல்கலைக்கழகங்களில் உலாவரும் பகவத் கீதை – த.பூங்குழலி

தன் வாழ்நாள் முழுவதும், பெரியாரும், அண்ணாவும் போராடி வளர்த்தெடுத்த சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் நேர் எதிரான சனாதன நூலான பகவத் கீதை, அண்ணாவின் பெயரில் இயங்கும் பொறியியல் பல்கலைக்கழகத்தில், தத்துவ பாடப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவலம் இந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, நாடு முழுவதும் அரங்கேற்றப்பட்ட தேச பாதுகாப்பு என்ற மாய நாடகத்தை நம்பி, நம் வடநாட்டு நண்பர்கள் செய்த பிழையால், இன்று பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியை பிடித்தவர்கள், நம்Continue reading “பல்கலைக்கழகங்களில் உலாவரும் பகவத் கீதை – த.பூங்குழலி”

நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றால் மனதில் ஒரு புத்துணர்வு பிறக்கும் . எனக்கும் அப்படியே. அதனால் எவ்வளவு தொலைவாயினும் பயணம் செய்து எத்தனையோ பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ஊர்வலங்களிலும் திருமணங்களிலும் கல்லூரி மாணவர்களின் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறேன். துயரம் மிகுந்த மனநிலையோடு பங்கேற்ற திலீபனின் நினைவேந்தல் கூட்டங்களிலும் ‘மருத்துவர்’அனிதாவின் முடிவு பற்றியும் கண்ணீருடன் அழுதபடி பேசியிருக்கிறேன். ஆனால் அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு மேலையூர் என்ற சிற்றூரில்Continue reading “நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி”

திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு- 2 – தோழர் வெற்றிச்செல்வன்

‘இந்து’ என்ற சொல் தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியங்களிலோ, ஐம்பெருங்காப்பியங்களிலோ எதிலும் இடம்பெறவில்லை. ஏன், வேத, உபநிடதங்களிலேயே கிடையாது. வெள்ளைக்காரன் வைத்த பெயர்தான் ‘இந்து’ என்பது. 1799-இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் தொகுத்த ‘இந்து மதச் சட்டத்தில்’ தான் இந்து என்கிற பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அதுவும் இந்து என்பதற்கு நேர் விளக்கமெல்லாம் கிடையாது. “யாரெல்லாம் கிறித்தவர்கள், இசுலாமியர்கள், பார்சிக்கள் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள்” என்ற எதிர்மறை விளக்கமே உள்ளது. இதனால் சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்களும்Continue reading “திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு- 2 – தோழர் வெற்றிச்செல்வன்”

அவதூறுக் குப்பைகளை சுட்டெரிக்கும் அனல் மேடை! – தோழர் உ.வை.கலையரசன்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர் தந்தை பெரியார். மனிதப் பற்று ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு 95 ஆண்டுகள் தூய தொண்டாற்றியவர். தமது சுய சிந்தனையால் மனித சமத்துவத்திற்கு எதிரான எல்லா கூறுகளையும்  எதிர்த்துப் போராடியவர். அவரது பொது வாழ்க்கை தொடங்கிய காலம் முதல் அவர் மறைந்து 45 ஆண்டுகள் சென்ற பின்னரும் தொடர்ந்து எதிரிகளாலும், குழப்பவாதிகளாலும் விமர்சிக்கப்பட்டே வருகிறார்.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை . ஆனால் தந்தை பெரியார் மீதான விமர்சனங்கள்  அனைத்தும் அவதூறுகளாகவே இருக்கிறது. இத்தகையContinue reading “அவதூறுக் குப்பைகளை சுட்டெரிக்கும் அனல் மேடை! – தோழர் உ.வை.கலையரசன்”

காயலான்கடை பொருளாதாரம்! – தோழர் க.அருள்மொழி

குறளாசான் வள்ளுவர் பொருளாதார ஆசானாக சொன்னது, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இந்தக் குறள், தனி மனிதன் ஈட்டும் ‘பொருளுக்கும்’ பொருந்தும் அரசாங்கம், வரி முதலியவற்றால் ஈட்டும் பொருளுக்கும் பொருந்தும். ஆனால், அண்மைக்காலமாக, அரசாங்கம் ஈட்டும் வரி வருவாய் எல்லாம் எங்கு போகின்றதென்று தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் பொது மக்கள். மக்கள் கொடுக்கும் வரிப்பணமெல்லாம் பெரு முதலாளிகளின் வயிற்றில் இடப்படுகிறது என்று அரசியல் விஷயமறிந்தோர் சொல்கிறார்கள். வருகின்ற வருமானத்தை பகுத்துக் கொடுத்து எல்லோரையும்Continue reading “காயலான்கடை பொருளாதாரம்! – தோழர் க.அருள்மொழி”