பகுத்தறிவாளர் கழக பொன்விழாத் தொடக்க மாநாடு

பகுத்தறிவாளர் கழகத்தினை தொடங்கிவைத்து உரையாற்றிய தந்தை பெரியார் ‘இன்றுதான் மனிதர்களின் கழகத்தினை தொடங்கி வைக்கிறேன்’ என்றார். தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்து பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழாத் தொடக்க விழா மாநாடு விருதுநகரில் 16.11.2019 அன்று காலை முதல் இரவுவரை நடைபெற்றது. விருதுநகர் எங்கும் திராவிடர் கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறக்க, அணி அணியாய் காலைமுதலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பகுத்தறிவாளர்கள் வந்து குவிய ஆரம்பித்தனர். காலை 9 மணிக்கு, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களாக இருந்துContinue reading “பகுத்தறிவாளர் கழக பொன்விழாத் தொடக்க மாநாடு”

புதிய விடியல்!

புதிய விடியல்! எனக்கு மழை பிடிக்காது என்றாள் அம்மா! பொத்தல்களின் தூறலைப் பொத்திவைக்க பாத்திரம் இல்லையென்றாள்! ஈசான மூலையின் பரணுக்கடியில் அம்மாவும் நானும் அன்றொருநாள் அடைமழைப்பொழுதில்! கொட்டும் மழைத்தூறலில் வெளிச்சத்திற்கு வந்தது வறுமையின் சுவடுகள்! ஈர விறகின் புகைமூட்டத்தில் வெந்து தணிந்திருந்தது எங்கள் வயிற்றைப்போலவே அந்த அடுப்பும்! உயிர் பிரியும் தருணத்திற்காகக் காத்திருந்தது மண்ணென்ணெய் தீர்ந்த சிம்னி விளக்கு! ஐந்தாறு வரிசையாய் அடுக்கி வைத்திருந்த அடுக்குப்பானையில் விழும் மழைத்துளியின் சத்தம் வறுமையின் ஒப்பாரிச்சத்தமாய் எதிரொலித்தது! ரெட்டைத்திண்ணையில் வெள்ளாடுக்குட்டிகள்Continue reading “புதிய விடியல்!”

பெங்களூரு இரண்டாம் தமிழ்நாடு

இயற்கை வளமும் மணங்குளிரும் எழிழும் நிறைந்த  கருநாடக மாநிலத்தின் தலைநகராக சரித்திரப் புகழ் வாய்ந்ததாக மைசூர¢ சிறந்து விளங்கியுள்ளது. இப்போது பூங்கா நகரம் என்றும் சிலிகான் சிட்டி என்றும் அழைக்கப்படுகின்ற பெங்களூர் தலைநகரம் இயங்கி வருகிறது. கருநாடக மாநிலம் 1,91,791 சதுர கிலோ மீட்டர¢ பரப்பிலும் பெங்களூரு மற்றும் கிராமப் புறப் பகுதிகள் ஒருங்கிணைந்து 7,915 சதுர கிலோ மீட்டர¢ பரப்பில் சமவெளியும் காடுகள் சூழ்ந்த குறிஞ்சி நிலமாய் திகழ்கின்றது. கருநாடக வளர¢ச்சியில் முழு பங்களித்து ஒழுங்குபடுத்திContinue reading “பெங்களூரு இரண்டாம் தமிழ்நாடு”

என்ன செய்தார் ஈ.வெ.ரா?

ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச் சாகடித்தப் பெருமை அவர் கை தடிக்கே உண்டு, என்று தந்தை பெரியாரைப் பற்றி எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.  ஆம், தான் வாழ்ந்த காலமெல்லாம் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அடக்கப்பட்ட பெண் சமூகத்திற்கு பாடுபட்டு, உழைத்து உரிமைகளை பெற்றுத் தந்த தலைவர் பெரியார். என்ன செய்தார் ஈ.வெ.ரா.? என்ன செய்தார் நாயக்கர்? என்று கேள்வி கேட்டு அகமகிழும் ஜாதி, மத வெறியர்களுக்கும், இன்றைய இளைய சமூகத்திற்கும் இந்த கட்டுரை. பெரியார் ஒருContinue reading “என்ன செய்தார் ஈ.வெ.ரா?”

தலைமையை கற்போம் தலைவர்களிடமிருந்து… டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கைத்தடி வாசகர்களை ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி. ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது உடல்வளர்ச்சி, அறிவு வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்று குழந்தைகளின் உடலுக்கு வலிமை சேர்க்கும் விளையாட்டுக்களை அடுத்துஅவர்களின் அறிவையும் மனதை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். இன்றைக்கு தொழில்நுட்பங்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கும் காலகட்டத்தில் நிறைய மாணவர்கள் உயர்கல்வி படிக்க போராடி பெருமுயற்சிக்குப்பின் இடம் கிடைக்காமலும், அவ்வாறு போராடி உயர்கல்வி நிறுவனங்களில்Continue reading “தலைமையை கற்போம் தலைவர்களிடமிருந்து… டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்”

அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி

தந்தை பெரியார் , தனக்குப் பிறகு தன் கொள்கைகளையும் இயக்கத்தையும் காப்பாற்றவும் பரப்பவும் வழி நடத்தவும் தகுதியும் நம்பிக்கையும் உள்ள தொண்டர்களாக நம்பித்தேர்வு செய்தார் இரண்டு மணிகளை- ஒருவர் அரசியல்மணி என்று முதலில் அழைக்கப்பட்ட மணியம்மை; இரண்டாமவர் கி.வீரமணி! தந்தை பெரியார் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்தக் கருத்துகளைப் பரப்பும் கடமையையும் தம் தலையில் தூக்கிச் சுமந்தார். அதைச் செயல்படுத்தும் களங்களையும் அமைத்து, முதல் தொண்டனாகத் தன்னையே முன்னிறுத்தினார். சிறைவாசம் என்று வந்த போது சிரித்தContinue reading “அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி”

கீழடியால் மேலெழுந்த திராவிடம்!

“இந்தியாவில் காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது அரசியல் போராட்டம் அல்ல, ஆரியர் திராவிடர் போராட்டம்தான்“ இது தந்தை பெரியாரின் கூற்று. அந்தக் கூற்றை கீழடியும்  உண்மையாக்கியிருக்கிறது. இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடைபெற்றபோதே மாறுதல் செய்யப்படுவதற்கு அத்துறையின் சட்டதிட்டத்திலேயே இடம் இல்லாத நிலையில், அமர்நாத் இராகிருஷ்ணன் அவர்கள் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு மாறுதல் செய்யப்பட்டார். கீழடி வைதீகத்திற்கு ஏக கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்? கீழடி ஆரியர் திராவிடர் போராட்டத்தில், திராவிடர்களுக்கு ஒரு அரிய போர்க்கருவியை அகழாய்வின் மூலம் கொடுத்திருக்கிருக்கிறது. சும்மாContinue reading “கீழடியால் மேலெழுந்த திராவிடம்!”

நூல் விமர்சனம் – சிந்திக்க மறுப்பது ஏன்!

பெரியார், அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோரின் தத்துவங்களைக் கற்ற ஒரு மனிதன் இந்த சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை, சமூக ஏற்றத்தாழ்வுகளை, சம மனிதனை மனிதன் சுரண்டும் சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராடாமலோ, கருத்து சொல்லாமலோ இருக்க முடியாது, அதுவும் இந்தியா போன்ற ஜாதியமும் முதலாளித்துவமும் கைகோர்த்துக் கொண்ட ஒரு நாட்டில் சமூக அமைப்பு மீது கோபம் இருந்தே தீரும், அப்படி கோபப்பட்ட ஒரு எழுத்தாளரின் கருத்து தொகுப்பே ‘சிந்திக்க மறுப்பது ஏன்?” இந்த நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க தூண்டுகிறது,Continue reading “நூல் விமர்சனம் – சிந்திக்க மறுப்பது ஏன்!”

சனி என்ன செய்யும்? – ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து

திணை நிலம் :     தமிழ் நாடு, அமெரிக்கா. பொழுது   :- ஆடி சிறு பொழுது    :-    மாலை, யாமம் துறை     :     கேள்வி, பகுத்தறிவு சன்னல் வழியே கீழே பார்த்தால் வெண் பஞ்சை போன்று எங்கும் பரந்து சூழ்ந்திருக்கும் மேகம். வெண் மேகத்தின் மேல் பட்டுத் தெறிக்கும் கதிரவனின் மஞ்சள் ஒளி. ‘இன்று போய் நாளை வருகிறேன்’ என கடலுக்குள் மூழ்கப் போவது போல், அந்த மாலை வேளையில்  கதிரவன் சென்று கொண்டிருக்கிறது. கதிரவனும் கடலும் கலக்கும்Continue reading “சனி என்ன செய்யும்? – ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து”

கடிதம் எழு தினால் புதிய இந்தியாவில் தேச துரோகம் – கா.தமிழரசன்

இந்த நாட்டின் பொதுமக்களில் ஒருவராக உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் இந்திய நாட்டின் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள். இன்றைய நிலையில் நாட்டில் நடப்பவைகளை கவனித்து இது ஏன் நடக்கிறது? இதற்கு முன்பு இதுநாள்வரை  இதுபோல் இவ்வளவு மோசமாக நடக்கவில்லை, அதுபோல் தாங்கள் கண்டதில்லை. குறிப்பாக  தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக மாட்டு இறைச்சி வைத்திருந்தார்கள், மாட்டை வண்டியில் கடத்திச்சென்றார்கள், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லி சொல்லாதவர்களை குண்டர்கள் கூட்டம் கும்பல்களாக சேர்ந்து கொண்டுContinue reading “கடிதம் எழு தினால் புதிய இந்தியாவில் தேச துரோகம் – கா.தமிழரசன்”