‘‘ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ்..! கப் ஐஸ்..!

ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ் கப் ஐஸ் வெயிலுக்கு இதமான குளிர்ச்சியான சேமியா ஐஸ்..! ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ்..!  கப் ஐஸ்..! ’’ ஐஸ்..!  வாங்கலையோ ஐஸ்..!’’ என்றபடி ஐஸ் வண்டிக்காரர் சத்தம் போட்டுக்கொண்டே ஊருக்குள் நுழைந்தார்; ஐஸ் வண்டியின் சத்தம் கேட்டதும் ஊரில் உள்ள வாண்டுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ் வாங்க தயார் நிலையில் இருந்தனர். பாட்டியைத் தொல்லை செய்து பாட்டியின் பையில் இருந்த அஞ்சு, பத்து  ரூபாய்களை பிடிங்கிக்கொண்டு பெயரன்மார்கள்Continue reading “‘‘ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ்..! கப் ஐஸ்..!”

பசி

அந்தப்பூனை வழக்கம்போல் அதிகாலை ஐந்தரை மணிக்கே வாசலில் வந்து நின்று கரைந்தது. ஒரு சின்ன குழந்தையின் கெஞ்சுதல் அந்தக்குரலில். ஸ்டெஃபி நேற்றே அவள் பாட்டி வீட்டிற்குச் சென்றது அதற்குத் தெரியாது. கதவைத் திறந்து வெளியே தலைநீட்டிய பாட்டியின் முகம் நோக்கி அதே கெஞ்சுதல்; பாலுக்குக் கேவும் சின்னஞ்சிறு குழந்தைகயின் உடைந்த குரலில். பூனையைப் பார்க்காமல், தொலைவிலிருந்து அந்த குரலைக் கேட்டால் நிச்சயமாக அது ஒரு குழந்தையின் கெஞ்சும் குரல்தான். ‘ம்யாவ்…ம்யாவ்… மியா…வ்…வ்…” ஒரே மொழி! ஓவ்வொரு முறையும்Continue reading “பசி”

பகுத்தறிவாளர் கழக பொன்விழாத் தொடக்க மாநாடு

பகுத்தறிவாளர் கழகத்தினை தொடங்கிவைத்து உரையாற்றிய தந்தை பெரியார் ‘இன்றுதான் மனிதர்களின் கழகத்தினை தொடங்கி வைக்கிறேன்’ என்றார். தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்து பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழாத் தொடக்க விழா மாநாடு விருதுநகரில் 16.11.2019 அன்று காலை முதல் இரவுவரை நடைபெற்றது. விருதுநகர் எங்கும் திராவிடர் கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறக்க, அணி அணியாய் காலைமுதலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பகுத்தறிவாளர்கள் வந்து குவிய ஆரம்பித்தனர். காலை 9 மணிக்கு, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களாக இருந்துContinue reading “பகுத்தறிவாளர் கழக பொன்விழாத் தொடக்க மாநாடு”

புதிய விடியல்!

புதிய விடியல்! எனக்கு மழை பிடிக்காது என்றாள் அம்மா! பொத்தல்களின் தூறலைப் பொத்திவைக்க பாத்திரம் இல்லையென்றாள்! ஈசான மூலையின் பரணுக்கடியில் அம்மாவும் நானும் அன்றொருநாள் அடைமழைப்பொழுதில்! கொட்டும் மழைத்தூறலில் வெளிச்சத்திற்கு வந்தது வறுமையின் சுவடுகள்! ஈர விறகின் புகைமூட்டத்தில் வெந்து தணிந்திருந்தது எங்கள் வயிற்றைப்போலவே அந்த அடுப்பும்! உயிர் பிரியும் தருணத்திற்காகக் காத்திருந்தது மண்ணென்ணெய் தீர்ந்த சிம்னி விளக்கு! ஐந்தாறு வரிசையாய் அடுக்கி வைத்திருந்த அடுக்குப்பானையில் விழும் மழைத்துளியின் சத்தம் வறுமையின் ஒப்பாரிச்சத்தமாய் எதிரொலித்தது! ரெட்டைத்திண்ணையில் வெள்ளாடுக்குட்டிகள்Continue reading “புதிய விடியல்!”

பெங்களூரு இரண்டாம் தமிழ்நாடு

இயற்கை வளமும் மணங்குளிரும் எழிழும் நிறைந்த  கருநாடக மாநிலத்தின் தலைநகராக சரித்திரப் புகழ் வாய்ந்ததாக மைசூர¢ சிறந்து விளங்கியுள்ளது. இப்போது பூங்கா நகரம் என்றும் சிலிகான் சிட்டி என்றும் அழைக்கப்படுகின்ற பெங்களூர் தலைநகரம் இயங்கி வருகிறது. கருநாடக மாநிலம் 1,91,791 சதுர கிலோ மீட்டர¢ பரப்பிலும் பெங்களூரு மற்றும் கிராமப் புறப் பகுதிகள் ஒருங்கிணைந்து 7,915 சதுர கிலோ மீட்டர¢ பரப்பில் சமவெளியும் காடுகள் சூழ்ந்த குறிஞ்சி நிலமாய் திகழ்கின்றது. கருநாடக வளர¢ச்சியில் முழு பங்களித்து ஒழுங்குபடுத்திContinue reading “பெங்களூரு இரண்டாம் தமிழ்நாடு”

என்ன செய்தார் ஈ.வெ.ரா?

ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச் சாகடித்தப் பெருமை அவர் கை தடிக்கே உண்டு, என்று தந்தை பெரியாரைப் பற்றி எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.  ஆம், தான் வாழ்ந்த காலமெல்லாம் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அடக்கப்பட்ட பெண் சமூகத்திற்கு பாடுபட்டு, உழைத்து உரிமைகளை பெற்றுத் தந்த தலைவர் பெரியார். என்ன செய்தார் ஈ.வெ.ரா.? என்ன செய்தார் நாயக்கர்? என்று கேள்வி கேட்டு அகமகிழும் ஜாதி, மத வெறியர்களுக்கும், இன்றைய இளைய சமூகத்திற்கும் இந்த கட்டுரை. பெரியார் ஒருContinue reading “என்ன செய்தார் ஈ.வெ.ரா?”

தலைமையை கற்போம் தலைவர்களிடமிருந்து… டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கைத்தடி வாசகர்களை ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி. ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது உடல்வளர்ச்சி, அறிவு வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்று குழந்தைகளின் உடலுக்கு வலிமை சேர்க்கும் விளையாட்டுக்களை அடுத்துஅவர்களின் அறிவையும் மனதை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். இன்றைக்கு தொழில்நுட்பங்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கும் காலகட்டத்தில் நிறைய மாணவர்கள் உயர்கல்வி படிக்க போராடி பெருமுயற்சிக்குப்பின் இடம் கிடைக்காமலும், அவ்வாறு போராடி உயர்கல்வி நிறுவனங்களில்Continue reading “தலைமையை கற்போம் தலைவர்களிடமிருந்து… டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்”

தமிழர் திருநாள்

திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்கு, தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாசாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாசாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக& தமிழ்நாட்டின் தமிழனின் கலாசாரங்களை பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாசார பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு,Continue reading “தமிழர் திருநாள்”

அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி

தந்தை பெரியார் , தனக்குப் பிறகு தன் கொள்கைகளையும் இயக்கத்தையும் காப்பாற்றவும் பரப்பவும் வழி நடத்தவும் தகுதியும் நம்பிக்கையும் உள்ள தொண்டர்களாக நம்பித்தேர்வு செய்தார் இரண்டு மணிகளை- ஒருவர் அரசியல்மணி என்று முதலில் அழைக்கப்பட்ட மணியம்மை; இரண்டாமவர் கி.வீரமணி! தந்தை பெரியார் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்தக் கருத்துகளைப் பரப்பும் கடமையையும் தம் தலையில் தூக்கிச் சுமந்தார். அதைச் செயல்படுத்தும் களங்களையும் அமைத்து, முதல் தொண்டனாகத் தன்னையே முன்னிறுத்தினார். சிறைவாசம் என்று வந்த போது சிரித்தContinue reading “அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி”

திருவிழா

ஆத்திருநாவுக்கு இன்னும் ஒருமாசம்தான் இருக்கு! அதுக்குள்ள சொந்தக்காரங்களுக்கு கடுதாசி எழுதி வரவைக்கனும்! ஊர்லேயே பெரிய திருநானா அதுதான்! எல்லா வீட்லயும் சொந்தம் பந்தங்க நெறஞ்சி இருப்பாங்க திருநாவுக்கு மூணுநாள் நாலுநாள் முன்னாடியே வந்துருவாங்க! ஊரே அமர்க்களமாய் இருக்கும்! குப்பாத்தா பாட்டி ஒண்டிக்கட்டையா ஒத்தை குடிசையில காலத்த ஓட்டிட்டு இருந்தது! இருந்த ஒரேஒரு பொண்ணையும் ரொம்ப தொலைவுல செங்கத்துக்கு அப்பால தானிப்பாடில கட்டி குடுத்துருச்சு! அப்பப்போ வரபோக முடியாது ஒட்டுத்திண்ணைல ஒக்காந்துட்டு ஏதாச்சும் ஒண்ண பொலம்பிட்டே இருக்கும்! மகக்காரியோContinue reading “திருவிழா”