வயதானவர்களை வாட்டும் தோள்பட்டை வலி – மரு.சிவராஜ் M.S.Ortho

தோள்பட்டை மூட்டு வலி என்பது பலருக்கு அன்றாட பிரச்சினையாக உள்ளது. அதுவும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி மற்றும் அசைவின்மை பெரும் தொந்தரவாகவே உள்ளது. தோள் பட்டை வலி என்பது பொதுவாக 50-60வயதினருக்கு வருகிறது. பெரும்பாலும் பெண்களுக்கே வருகிறது.

ஏன் வலி வருகிறது

நமது தோள்பட்டை மூட்டு இரண்டுக்கும் மேற்பட்ட எலும்புகள் இணையும் இடம். இந்த வடிவமைப்பை தாங்கி இயக்க அந்த மூட்டினை சுற்றி காப்சியூல் (Capsule) என்னும் மூட்டு பாதுகாப்பு திசு உள்ளது. அதற்கு மேல் உள்ளும் புறமும் தாண்டி செல்லும் தசைகள் நிறையவே உள்ளது. இந்த தசைகளிலோ அல்லது காப்சியூல் என்னும் மூட்டு பாதுகாப்பு பையிலோ ஏற்படும் இறுக்கமே முதலில் அசைவு குறைவையும், பின்னாளில் வலியையும் உண்டாக்குகிறது.

பொதுவாக சர்க்கரை நோயாளிகள்(டயாபடீஸ்) மற்றும் தைராய்டு குறைபாடு வியாதி உள்ளவர்களுக்கு இந்த தசைகளை சுற்றி நீர் கோர்த்துக்கொண்டு அதன் இலகுவான விரிந்து கொடுக்கும் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மாறி பின்னாளில் இறுக்கமாகவும் வலி உண்டாகவும் காரணமாக உள்ளது. மருத்துவர்கள் பொதுவாக இதனை PeriArthritis Shoulder அல்லது Frozen Shoulder என்று பெயரிட்டு அழைப்பார்கள். சில சமயம் இந்த பிரச்சினை தோளில் ஏற்பட்ட அடி அல்லது பளுவான பொருளை தூக்கும்போது ஏற்பட்ட சுளுக்கினாலும் வரலாம். அதற்கு தோள் சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் கிழிதல் (Rotator Cuff Tear) கூட காரணமாக இருக்கலாம்.

கண்டறியும் முறைகள்

இந்த தோள்பட்டை வலி மற்றும் இறுக்கத்திற்கான காரணம் அறிவது முக்கியம். பொதுவாக தோளில் உள்ள தசைகளில் உள்ள நீர் கோர்ப்பது மற்றும் இறுக்கமே என்றாலும் சில சமயம் தோளில் உள்ள தசைகளில் கிழிதல் (Rotator Cuff Tear) ,மூட்டு தேய்மானம் (Arthritis), வாதம் என்று சொல்லப்படும் முடக்கு வாத பாதிப்பு (Rheumatoid Arthitis) என்று பல காரணங்களையும் வேறுபடுத்தி அறியவேண்டியது உள்ளது. இதற்காக மருத்துவர் X-ray, MRI & இரத்த பரிசோதனைகள் செய்ய சொல்லலாம் .

சிகிச்சை முறைகள்

சர்க்கரை மற்றும் தைராய்டு வியாதிகளை கட்டுக்குள் கொண்டுவருதல் மிகவும் முக்கியம். பிஸியோதெரபி என்னும் உடற்கல்வி பயிற்சி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் அடைந்த தசைகளை இலகுவாக மாற்றுவதுடன் மூட்டின் இயக்கத்தையும் படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் மூட்டின் முழு இயக்கத்தை அடையலாம்.

சிகிச்சையின் ஆரம்பத்தில் மருத்துவர் உங்களுக்கு வலி நிவாரணி மருந்துகள் பரிந்துரைக்கலாம். ஆனால் அதிக நாட்கள் எடுத்துக்கொள்வது சரியல்ல. பொதுவாக மூட்டின் இயக்கம் அதிகரித்த பின்னர் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும் . சில பேருக்கு இயக்கம் சரிவர வரவில்லை எனில் எலும்பு மூட்டு மருத்துவர் மூட்டில் ஸ்டெராய்டு ஊசி குடுக்கலாம் அல்லது முழு மயக்கம் குடுத்து மூட்டின் அசைவை (Manipulation)வரவைக்கலாம்.

தசைகளில் உள்ள கிழிதலுக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணலாம் . தற்போது நுண்ணிய துளையில் செய்யும் தோள்பட்டை அறுவை சிகிச்சை (Shoulder Arthrocopy) பெரிய மாற்றத்தை உண்டாக்கி உள்ளது.

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: