குதிகால்வலி – மரு.சிவராஜ் M.S.Ortho

குதிகால் வலி என்பது பலருக்கு அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்ட பிரச்சினையாகவே உள்ளது. அதிகாலை எழுந்தவுடன் கால்களை தரையில் வைக்கவே ஐந்து நிமிடம் யோசிக்கும் அளவுக்கு குதிகால் வலி இருக்கும். ஆனால் சில மணி நேரம் வலியைப் பொறுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கிவிட்டால் வலி குறைந்துவிடும். நாள் முடிந்த பின் திரும்பப் படுக்கைக்குத் திரும்பும்போது மீண்டும் குதிகால் வலி வரும்.  இந்த பிரச்சனைக்கு பிளாண்டார் பேசியையைட்டிஸ் (Plantar Fasciitis)  என்று பெயர். குதிகால் எலும்பிலிருந்து பாதத்தின் விரல்களுக்கு மீண்டும் நீளும் சதை கொத்தின் பெயர்தான் பிளான்றார் பேசியா(Plantar Fascia). நாம் கால் ஊன்றி நடக்கும் போது நமது பாதத்திற்கும் தரைக்கும் இடையே இந்த சதை கொத்து தான் சதை விரிந்தும் சுருங்கியும் கொடுத்து நம் நாம் நன்றாக கால்பதித்து நடக்க உதவுகிறது. இந்த சதை கொத்து குதிகால் எலும்பும் சேரும் இடத்தில் அழுத்தம் உண்டாகி நீர் கோர்த்துக்கொண்டு விடுவதே (Inflammation) வலி ஏற்படக் காரணம்.

யாருக்கு வரலாம்

* பொதுவாக அதிக உடல் பருமன் உள்ளவர்கள்

* அதிக நேரம் கரடுமுரடான தரையில் நடப்பவர்கள்

* சர்க்கரை நோயாளிகள்

* தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்

* யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள்

* முடக்குவாதம் உள்ளவர்கள்

* தட்டை பாதம் உள்ளவர்கள்

பொதுவாக 30-40 வயதிற்குட்பட்ட ஆண் பெண் இருவருக்கும் வரலாம். பெண்களுக்கு இந்தப் பாதிப்பு சற்று அதிகமாகவே வரலாம்.

High Heels  செருப்புகள் கூட சில சமயம் இந்த பிரச்சனைக்கு காரணம் ஆகலாம்.

கண்டுபிடிக்கும் வழிமுறைகள்

நோயாளிகளின் பிரச்சனைகளை (Symptoms) கொண்டே எளிதில் கண்டறியலாம். ஆனாலும் X-RAY, ரத்தப் பரிசோதனைகள், விஸிமி போன்றவைகளும் தேவைப்படலாம்.

சிகிச்சை முறைகள்

1. செருப்பு மாற்றம் கடினமான செருப்புகளை மாற்றி விட்டு மிருதுவான இலகுவான MCR செருப்புகளை வீட்டுக்குள்ளேயும் அலுவலகத்திலும் அணிய வேண்டும். இதனால் காலில் உண்டாகும் அழுத்தம் குறைகிறது.

2. அதிகாலை எழுந்தவுடன் இரண்டு கால்களையும் மித சூடான தண்ணீர் உள்ள பாத்திரத்தில் மூழ்க வைத்துக்கொண்டு விரல்களை உள் பக்கமாக இழுத்து விடுவதன் மூலம் வலி நன்றாக குறைந்து விடும். மேற்சொன்ன வழிமுறையை பதினைந்து இருபது நிமிடம் அன்றாடம் செய்ய வேண்டும்

3. உங்கள் மருத்துவர் சிறிது நாட்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்தும் இந்த குதிகால் வலி மற்றும் வீக்கத்தை குறைப்பார். பிசியோதெரபி வழியில் அல்ட்ராசவுண்ட் வேவ்ஸ் (Ultra Sound Therapy)  கொண்டும் வலியை குறைக்கலாம்.

4. இந்த சிகிச்சை முறைகளிலும் சரியாக குதிகால் வலிக்கு சில சமயம் ஸ்டீராய்டு ஊசி (Local Steroid Injection)  தேவைப்படலாம். அதுவும் ஒரு இரண்டு மூன்று முறைகளுக்கு மட்டுமே உதவும்.

5. அப்போதும் சரியாக நாட்பட்ட குதிகால் வலிக்கு அறுவை சிகிச்சையே  தீர்வாக அமையும். ஆனால் வெகு சிலருக்கே அறுவை சிகிச்சை தேவைப்படும். ஆனால் பொதுவாக அறுவை சிகிச்சை இல்லாமலே சரிசெய்து கொள்ளலாம்.

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: