முதுகுத் தண்டுவடம் பாதிப்புகள் சிகிச்சை முறைகள் – மரு.சிவராஜ் M.S.Ortho

சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால்அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம்.

 தண்டுவட நரம்பு மண்டலம்

 நம் உடலின் இயக்கம் மற்றும் உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின்தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடலின் இயக்கத்தை மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடம், மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதாலும், விபத்தினால் ஏற்படும் தண்டுவட எலும்புமுறிவு, அதன் ஜவ்வு பகுதி வீக்கம், எலும்பு நகர்வு, வயது முதிர்வு மற்றும் பிறவிக்குறைபாடுபோன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுகிறது. இது தவிர காசநோய் கிருமி மற்றும் பிறநோய்க்கிருமி தாக்குதலாலும் தண்டுவட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

 செயல்பாடுகளில் பாதிப்பு

 பொதுவாக விபத்தினால் தண்டுவட எலும்பு முறிந்தால், உடைந்த எலும்புகளுக்கு இடையில்அல்லது தசை நார்களுக்கு இடையில் நரம்புகள் அழுத்தப்படும் நிலை உருவாகும். அதனால்உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடும். மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குகீழ் உள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டித்து போகும். அதனால்தசைகள் இயக்கமின்மை, மலம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும்.  அதேபோல் தண்டுவடத்தின் எலும்பு, கழுத்து பகுதியில் முறிந்தால், கை-கால் செயல் இழப்பு,மார்பு மற்றும் வயிறு, முதுகு பகுதி முழுவதும் உணர்ச்சி இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.மேல் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டால் மூச்சுத் திணறல், உணவு விழுங்குதலில் பிரச்சினை ஏற்படும். கழுத்து எலும்புக்கு கீழ் என்றால் கால்கள், உடல், இடுப்பு தசைகள் பாதிக்கப்படும்.இதனால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய சூழலில் முதுகில் படுக்கை புண் ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 அறிகுறிகள்

இதுதவிர விபத்தினால் இன்றி, மேற்கூறிய மற்ற காரணங்களால் தண்டுவடத்தின் பாதிப்பு நிலையை அறிய அதன் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின்சக்தி குறைதல் போன்ற அறி குறிகள் தோன்றும்.

இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரி சோதனைகள் மேற் கொள்ள வேண்டும். அத்தகைய பரிசோதனையில் X-ray  எடுத்துப் பார்த்தாலும், சிஜி ஸ்கேனிலும் தண்டுவட பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இதுதவிர MRI ஸ்கேன் எடுப்பதால் பாதிப்பை துல்லியமாகக் கண்டறியலாம். இதுதவிர ரத்த பரிசோதனையிலும் தெரிந்து கொள்ளலாம்.

சிகிச்சை முறைகள்

நரம்பு பாதிக்கப்பட்டு அழுத்தப்பட்டு இருக்கும் போது அதன் அழுத்தத்தை குறைக்கும் வகையில் அறுவைசிகிச்சை மூலம் உடைந்த தண்டுவட எலும்புகளை நேர் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். விபத்தினாலோ அல்லது நோய் கிருமியினாலோ பாதிப்படைந்த நரம்புகள் திரும்பவும் குணமடைய வும் , நரம்புகளில் திரும்ப உணர்வு ஏற்ப டவும்  பொதுவாக அதிக நாள் ஆகும். அதுவரை நோயாளிகளுக்குஉடலளவிலும்,மனதளவிலும் ஊக்கம் தரும் வகையில் நாம் உதவியாக இருக்க வேண்டும்.

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: