அம்பேத்கர் உங்களுக்கு வழி தவறிய ஆடு! அவர் எங்களுக்கு நல்ல மேய்ப்பன்!! – தோழர் மகிழ்நன்

அம்பேத்கரையேப் படிக்காத Self Proclaimed  அம்பேத்ட்கரிஸ்டுகளுக்கும் ….

அம்பேத்கரை இடது வெறுப்பாளராக நிறுவ துடிக்கும் நடுத்தர, உயர்நடுத்தர வர்க்க என்.ஜி.ஓ கும்பலுக்கும்…

வணக்கம்,

உங்களைப் போன்றோருக்கு  மார்க்சிய அரிச்சுவடி மட்டுமில்லை, அம்பேத்கரைக் குறித்தும் அடிப்படை தெரியவில்லை. இருப்பதெல்லாம் நடுத்தர வர்க்கப் பார்வை.

உழைக்கும் வர்க்க எஸ்.சி மக்களின் விரோதமான போக்குதான் இந்த மார்க்சிய வெறுப்புக்குக் காரணம்…

இந்தச் சண்டைக்கு நீண்ட நெடும் வரலாறு இருக்கிறது….

அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய இறுதி காலத்தில் படித்த வர்க்கம் கிராமப்புற, ஏழை மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் என்றும், அவர்களுக்காகப் போராடும் என்ற தன்னுடைய எண்ணம் நிறைவேறவில்லை என்ற ஆற்றாமையில்தான், படித்தவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்றார்.

இதை வெவ்வேறு தருணத்தில் அண்ணல் அம்பேத்கர் வெளிப்படுத்தினார்…

பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின், மராத்வாடா கிளையின் பொறுப்பாளர் பி.எஸ்.வாக்மாரே 1953இல் தில்லியில் அம்பேத்கரைச் சந்தித்தபோது, மக்களை கைவிட்டுவிட்ட, வர்க்கம் ஏற்றம் பெற்ற கும்பலை பற்றி வருந்தியதோடு மட்டுமில்லாமல், தன் மக்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று கூறினார். வாக்மாரேயிடம் கிராமப்புற மக்களின் நில உரிமைக்காக போராட வலியுறுத்தினார். அதன்படி, அம்பேத்கரின் காலத்திலேயே, பி.எஸ்.வாக்மாரே தலைமையில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு 1700 பேர் சிறை சென்றனர்.

27 அக்டோபர் 1954, மும்பை சித்தார்த்த கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இதை வெளிப்படுத்திய அம்பேத்கர், கட்சிக்குள் தன்முனைப்புக் காரணமாகச் சண்டையிட்டு கொண்டிருந்த அற்பர்களிடம், உட்பூசலை நிறுத்திக் கொள்ள கோரினார். கிராமப்புற ஏழை மக்களின் உரிமைகளுக்காகப் போராடும்படி வேண்டிக் கொண்டார்.

ஆனாலும், தன்முனைப்பும், பதவி ஆசையும் இந்திய குடியரசுக் கட்சி தொடங்கிய பின்னரும் தொடர்ந்தது. (அதனுடைய தொடர்ச்சிதான் ராமதாஸ் அதாவ்லே வகையறா எல்லாம்…)

தொடங்கிய ஓராண்டிலேயே துருஸ்து, நாதுருஸ்து என்ற வகையாக அது பிரிந்தது…

பி.சி.காம்ப்ளே தலைமையிலான அணி, கெயிக்வாட் தலைமையிலான தவறு என்று பொருள் தரும்படி துருஸ்து என்று அழைத்தது…

ஆனால், அந்த துருஸ்து பிரிவுதான், அம்பேத்கரின் வழிகாட்டுதலின்படி, நில உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 1959இல் சோச லிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளோடு இணைந்து போராட்டம் நடத்தினர். சிறையும் சென்றனர். 1964-65இல் மாதம் முழுவதும், நூற்றுக்கணக்கில் மக்கள் கைதானார்கள்.

ஆனால், காம்ப்ளே வகையறா கோஷ்டி, கெயிக்வார்டு அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத் திற்கு விரோதமாக, அராஜக வழியிலான போராட்டத்தில் ஈடுபடுகிறார். கம்யூனிஸ்டுகள் போல செயல் படுகிறார் என்று குற்றஞ்சாட்டி விட்டு பிரிந்து சென்றார்.

அம்பேத்கர் அப்படித்தான் கூறினாரா? ஆம். கூறினார். சத்தியாகிரகம், உண்ணா விரதம் போன்ற வகைப் போராட்டங்களில் சட்டவழிமுறை உதவவில்லை யென்றால் ஈடுபடுங்கள் என்று கூறுகிறார். சட்டவழியில் சாத்திய மானால், அதை பயன்படுத்துங்கள் என்றார்…

இன்றும் அம்பேத்கரிய அரசியல் அவ்வாறுதான் பிரிந்திருக்கிறது. காம்பளே வகையறாக்களாக ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்பவர்களாக, உழைக்கும் வர்க்கத்தின் கோரிக்கை களை நிராகரித்து, தலித் உழைக்கும் மக்களை அடகு வைப்பவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள்…

கெயிக்வார்டின் வழியை பின்பற்றும் ஜிக்னேஷ் மேவானி போன்றோர் உங்களுக்கு அதனால்தான் கசக்கிறார்கள்… கசக்கட்டும்…

அம்பேத்கர் அரசின் கீழ் சோசலிசம் வேண்டும் என்ற தனது கனவு நாடாளுமன்றத்தில் பேசினார்… பிபிசி நேர்காணலில் இந்திய நாடாளுமன்ற முறை குறித்த அதிருப்தியை

தெரிவித்துவிட்டு, ஒரு மாற்றாக கம்யூனிசம் கூட வரலாம் என்றார்…

முதலாளித்துவம் மற்றும் பார்ப் பனியம்,  உழைக்கும் மக்களின் எதிரிகள் என்று கண்டுணர்ந்த அம்பேத்கரின் புரிதல் அது… அவருக்கு கம்யூனிஸ்டுகளோடு இருந்தது பங்காளி சண்டை அவ்வளவே….

அவ்வகையில், அம்பேத்கர் உங்களுக்கு வழி தவறிய ஆடு…அவர் எங்களுக்கு நல்ல மேய்ப்பன்…

(தரவுகளுக்கு: அம்பேத்கரும், கம்யுனிசமும் என்ற ஆனந்த் டெல்டும்டேயின் நூல், ஜே.வி பவார் எழுதிய தலித்பேந்தர்ஸ் உள்ளிட்ட நூல்களை காண்க)

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: