போராட்டமே வாழ்வு தற்கொலை தவிர்! – தோழர் இரா.முல்லைக்கோ.

‘சோம்பிக் கிடப்பவனும், ஓய்வே கதியாயிருப்பவன், தற்கொலைக்குச் சமமானவன்” என்கிறார் அறிவாசான் தந்தை பெரியார்.

சமூக வளர்ச்சியானது, அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பனவற்றில் நிறைய செய்வதாகும். உடல் நல மேலாண்மை அடிப்படை மூலங்களாகக் கொண்டது, பிற வளர்ச்சி நிலைகளும் இவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்படுகின்றன. சமூகம் மக்கள் தொகை பெருக்கத்தை வலைமையாகவும் மூலதனமாகவும் மாற்றுவதென்பது ‘உடல் நல மேலாண்மை” செயல்பாடுகளைப் பொறுத்தே அமைகிறது.

உடல் நல மேலாண்மை

உடல் நல மேலாண்மை என்பது உடல் நலம், மனநலம் என்ற இரு கூறுகளையும் உள்ளடக்கியது, உடல் மனம் உயிர் என்ற மூன்றின் ஒருங்கிணைப்பில் மனிதம், இவற்றுள் உடலும்மனமும் ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்துகின்றன, ஒன்றின் நிலைப்பாடு மற்றதைப் பாதிக்கிறது. இவ் உண்மையை ஆராய்ந்த மேலை நாடுகள் இதனை ‘‘உளப் பகுப்பாய்வு” அணுகுமுறை என்றார், இவ்விதமான அணுகுமுறைகளை சங்க இலக்கியத்தில் தெளிவுற விளக்கப்பட்டுள்ளது.

மனநிலை பிரச்சனை

உளவியல் ஆலோசனையும் உளநல மருத்துவமும் தொடர்ந்து வளர்ச்சி நிலையில் செல்கின்றன, மக்களுக்கு மனநிலையில் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே செல்வதே இதற்குக் காரணம் கல்வி, வேலை குடும்பம், நிறுவனம், சமுதாய, பொருளாதாரம், போன்ற பிரச்சனைகள் பலவற்றிற்கு மனநல ஆலோசனை தேவைப்படுகிறது.

தொல்காப்பியம் கூறும் மனம்

‘அறறிவதுவே அவற்றொடு மனனே” (தொல்.152)

இதில் ஓர் அறிவு, ஈர் அறிவு கண்களுக்குப் புலப்படும் உறுப்புகளைக் காட்டிய தொல்காப்பியர் ஆறு அறிவு என்பதை கண்களுக்குப் புலப்படாத மனத்தைச் சுட்டுகிறார், மனம் இங்கே முதன்மை பெறுகிறது, மற்ற உறுப்புகளுக்குத் தலைமை ஏற்று மனிதனை மனிதனாக ஆக்குகிறது.

‘மனநல மண்ணுக்கு ஆக்கம்” என்கிறார் திருவள்ளுவர் பெருந்தகை (குறள் 457)

மன அழுத்தம்

மன அழுத்தம், மனசிதைவு, உளவியல் வேலைகள், சமூகக் கலாச்சார அழுத்தங்கள், காதல் தோல்வி, வறுமை, கடன், அளவு கடந்த அச்சம், ஈடு செய்திட இயலாத இழப்பு, தாங்கிக் கொள்ள இயலாத வலி, பெருந்துயரம், கடுமையான சித்திரவதைகள், மது மற்றும் போதைக்கு அடிமையாதல், தேர்வில் தோல்வி, நம்பிக்கையற்ற நிச்சயமற்ற தன்மையை உணர்தல், வாழத் தகுதியற்றவர் என்ற நிலையை உருவாக்குதல், உணர்ச்சி வசப்படுத்தி தன்னுடலுக்கே தீ வைத்தல், வகுப்பறையின் முறை, ஒதுக்கி வைத்தல் மற்றும் குற்ற வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களினால் ஏதாவது ஒரு நிகழ்வின் தாக்கத்தின் அதிகரிப்பே தற்கொலைகள் நிகழ்கின்றன.

வரலாற்றில் தற்கொலைகள்

உலக கொடுங்கோல்களில் முதன்மையான ஜெர்மானிய அதிபர் ஹிட்லர் தற்கொலைக்கு தப்பவில்லை, விபரீதமான முடிவாளர், மரணிக்கும் முன் நீண்ட நாள் காதலியை பதிவு முறையில் திருமணம் செய்து கொண்டு தன்னைத் தானே துப்பாக்கி ரவைகளுக்கு இரையாக்கினார். மனைவியான ஈவா பிரவுனும் சைனைடை உண்டு தற்கொலைக்குச் செல்கிறாள். ஹிட்லரின் நம்பிக்கையாளர் கோயபல்ஸ்சும் அவரது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் எண்வரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கின்றனர்,

மணியாச்சி தொடர்வண்டியில் பயணித்த ஆஷ் துரையை சுட்ட பின், வாஞ்சிநாதன், கடைசியில் தானும் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். சிவகங்கையில் ஆங்கிலேயருக்கு சமர்புரிந்த வீரவேங்கை வேலுநாச்சியாரும் அவருடன் பணிப்பெண் குயிலியும் தற்கொலையில் மாண்டு போயினர். வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி வீரன் சுந்தரலிங்கமும் தற்கொலைக்கு ஆட்பட்டார். இராமநாதபுரம் மன்னன் சேதுபதி இறந்தபோது அவரது மனைவியர்கள் நெருப்பில் குதித்து தற்கொலை புரிந்ததாக வரலாறு கூறுகின்றன. ஈழ மக்களின் தன்னுரிமை தனிநாடு கோரிய புலிப்படையை நிறுவிய வேலுபிள்ளை பிரபாகரன் என்னும் மாவீரன், தனது படையினருக்கு கழுத்தில் சைனைடு குப்பியை வழங்கி முன்னெடுத்துஙச சென்றார் என்கிறது ஈழ விடுதலைப் போரின் வரலாறு.

தற்கொலை… அண்மை நிகழ்வுகள்

காவலர்கள் மத்தியில் சென்னை கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை தலைமையகத்தில் பணியிலிருந்த மணிகண்டன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலையானார். சென்னை மெரினா கடற்கரை, ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப் படைக்காவலர் மதுரை அருண்ராஜ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலையானார். சென்னை அய்னாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதிஷ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நீலாங்கரை காவலர் பாலமுருகன் சிவகங்கை மாவட்ட ஆய்வாளர் அமுதவல்லி, திருச்செங்கோடு மாவட்ட கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா என காவல்துறையில் தற்கொலை பட்டியல் இன்றுவரை நீண்டுகொண்டு தான் இருக்கின்றன.

மாநில வாரியான காவல்துறை தற்கொலைகள்

தமிழ்நாடு 2016 ஆண்டு 168 காவலர்களும் மகாராஷ்டிரா 161 காவலர்களும், கேரளாவில் 61 காவலர்களும் தற்கொலை புரிந்து உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 27 காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றப் பிரிவுத் துறை ஆவணத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

காவலர்களின் பணிச் சுமை

இரவு நேர ரோந்து பணி, நீதி மன்றப் பணி, முக்கிய நபர்களின் பாதுகாப்பு, சுழற்சி முறையில் தொடர் பணியாற்றும் காவலர்களுக்கு விடுமுறை மறுப்பு, பணி நேரம், ஓய்வின்மை, குடும்ப சூழல் இவற்றால் ஏற்படும் மன அழுத்தம், மேலதிகாரிகளின் பணி நெருக்கடி, பெண் காவலர்களின் நிலை மிக மிக மோசம், இதில் உயரதிகாரிகளின் பாலியல் தொல்லை, விடுப்பின்றி பணியாற்றும் போது நிகழும் மன அழுத்தம் தான் அவர்களை தற்கொலையின் விளிம்பிற்குத் தள்ளுகிறது. கடந்த பத்து ஆண்டுகளுகளில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட காவலர்கள் பணியிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாற்று முயற்சி

தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் காவலர்களின் பணிச்சுமையிலிருந்து காத்து தற்கொலை ஓர் அளவு தடுக்க இயலும். காவலர்களுக்கு ஆயுதப் பயிற்சி மட்டுமின்றி மனம் சார்ந்த இன்றியாமையாத பயிற்சியும் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். சிறப்பு கால விடுப்புகள், ஊதிய முரண்பாடு களைதல், பணி உயர்வு, படி உயர்வு, காவலர் நலத்திட்டங்களை உருவாக்குதல் மூலமும் காவலர்களின் தற்கொலை முயற்சியைத் தடுத்திட இயலும்.

இந்திய அளவில் ஓர் கண்ணோட்டம்

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விஷம் அருந்துதல், உடலுக்குத் தீ வைத்தல், தூக்கிட்டுக் கொள்ளுதல், உயரமான இடத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். 1980 இருந்த தற்கொலை விகிதத்தை விட 2006-ல் 67 சதவிகிதம் அதிகம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.  2006இல் சுயதொழில் செய்பவர்கள் 41 சதவிகிதம் இல்லத்தரசிகள் 21.2 சதவிகிதம் என்றும், பணியில் இருப்பவர்கள் 11.5 சதவிகிதம் எனவும், வேலையற்றோர் 7.5 சதவிகிதம், மாணவர்கள் 5 சதவிகிதம், பணி ஓய்வு பெற்றோர் 0.4 சதவிகிதம் எனவும், இதர பிரிவினர் பதிவின் தற்கொலைகளில் 2.5 சதவிகிதம் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்துள்ளது. மேலும், ஆண்களும் இளைஞர்களும் அதிக அளவில் தற்கொலையில் ஈடுபடுகின்றனர் என ‘‘தேசியக் குற்றப் பதிவுகள் கழகம்” தனது அறிக்கையில் கூறுகிறது.

இராமன் தற்கொலை

இந்துக்களின் மிகப் பெரிய கடவுளாக சித்தரிக்கப் படுகின்ற இராமன் இறுதியில் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறதாக இராம கதைகள் கூறுகின்றன.

இந்திய குற்ற தண்டனை சட்டம்

இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 305, பிரிவு 306, பிரிவு 309களில் பத்து ஆண்டு சிறை தண்டனை விதித்திடவும், அபராதம் விதித்து தண்டனை வழங்கிட கூறுகிறது.

அரசியல் சாசனம்

இந்திய அரசியல் சாசனம் 1950, சரத்து 21, சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி வேறெந்த விதமாகவும், ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக் கூடாது என தெளிவுபடுத்துகிறது.

இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கை 1971ஆம் ஆண்டில் சமர்பிக்கப்பட்டது, ‘‘தன்னளவில் மன ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர் தான் தற்கொலைக்கு முயற்சிக்கிறார், அவருக்கு அளிக்கப்பட வேண்டியது ஆறுதல் தானே தவிர தண்டனை அல்ல, அப்படியான தண்டனை அளிப்பதென்பது ஒருவருக்கு இருமுறை தண்டனை அளிப்பது போன்றதாகும். எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 309 நீக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது.

தற்கொலையைத் தவிர்க்க வழிகள்

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கொண்டோர் தனிமை தவிர்க்க வேண்டும். நண்பர்கள், அதிகம் படித்த மாணவர்களுடன் அதிகமாகப் பகிர்வு கொள்ளுதல், சிக்கல் எழும்போது கண்ணாடி முன்பாக நின்று கொண்டு பேசிக் கொள்வது போன்ற வழிகளில் கவனத்தைத் தனக்குத் தானே மாற்றிக் கொள்ளுதல், தற்கொலை முயலுவபவர்களிடம் ஒப்பீடு செய்தல், அறிவுரை கூறல் தவிர்க்க வேண்டும். அண்மை காலங்களில் விவசாய இழப்புகளால் பெருமளவில் விவசாயிகள் உயிர் இழப்பை மாநில, மைய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், கடன் பல நிலைகளில் பெற்றதை நீக்கிட வேண்டும்.

உயிரை மாய்த்துக் கொள்வது மட்டுமே எந்த ஒரு பிரச்சனைக்கும் நிரந்தரத் தீர்வு அல்ல என திடமான கருத்தைக் கல்வி, பாடத் திட்டங்களில், விளம்பரங்கள், குறும் படங்கள், பயிற்சி, விழிப்புணர்வு மூலம் சிறு வயது முதலே கற்பித்து மனத்திடம் உருவாக்க வேண்டும். ‘‘போராட்டமே வாழ்க்கை” என்பதைப் புரிய வைத்திட வேண்டும்.

ஆங்கிலப் பெரும் படையும் உடனிருந்தோர் துரோகமும் சூழ்ச்சியும் செய்திட்டப் போது, தப்பியோடாமலும், தற்கொலை செய்துகொள்ளாமல் படை வீரனாய்ப் பாய்ந்தான் திப்பு சுல்தான்.

உற்றார் உறவினர், நண்பர்கள் புடை சூழ்ந்து கோடான கோடி மக்கள் வாழும் போது தனிமைப் பட்டு தாறுமாறாய் மனம் போக்கில் தற்கொலைக்கு எத்தனிப்பது எந்த வகை நியாயம், ஒவ்வொருக்கும் வாழ்வின் மீது பிடிப்பும் நம்பிக்கையும், சிக்கலை எதிர்  கொள்ளும் போராட்ட குணம் வேண்டும். ‘‘ஊக்கமது கைவிடேல்”

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: