பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கும் பிறவி வளைபாதமும் அதன் மருத்துவமும் – மரு.சிவராஜ் M.S.Ortho.,

பிறவி வளைபாதம் அல்லது பிறவிக் கோணல் அடிக்கால் (Club foot) என்பது ஒரு பிறவிக் குறை ஆகும். இந்தப் பாதிப்போடு பிறந்தவர்களின் ஒரு பாதமோ அல்லது இருபாதங்களோ கீழே பக்கவாட்டாக அல்லது மேல்நோக்கி அல்லது உள்நோக்கி திரும்பி இருக்கும். பாதிக்கப்பட்ட காலானது, மற்ற சாதாரணக் காலைவிடச் சிறியதாக இருக்கும். இந்தப் பாதிப்பு உள்ளவர்களில் பாதிப் பேருக்கு இரு கால்களும் இந்தப் பாதிப்புக்கு ஆளாகுகிறது. இந்தப் பாதிப்புக்கு ஆளான பெரும்பாலானவர்களுக்கு உடன் பிறசிக்கல்கள் இருப்பது இல்லை. சிகிச்சை அளிக்கப்படாத பிறவி வளைபாதம் கொண்ட குழந்தைகள் ஒரு வயதுக்கு மேல் நடக்க ஆரம்பிக்கும்போது கால் வளைந்து நடையில் மாற்றமும் வலியும் ஏற்படும்.

நோய்க்கான காரணங்கள்

இது ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரிய வில்லை. சில சமயம் மூட்டு மடக்கம் மற்றும் தண்டுவடக் குறைபாடு ஆகியவற்றின் தொடர்பு இருக்கலாம். புதியதாகப் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வளைபாதம் ஏற்படுகிறது. பிறவி வளைபாதக் குறைபாடு ஏற்பட பெண்களைவிட ஆண்களுக்கு இரண்டு மடங்கு  அதிக வாய்ப்பு உள்ளது.

கண்டறிதல்

பிறவி வளைபாதம் பிறந்த நேரத்தில் கண்டறியப் படுகிறது என்றாலும், பல சந்தர்ப்பங்களில் கருவிலேயே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்னும் மீயொலி பரி சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.

சிகிச்சை விளக்கம்

பிறவி வளைபாதம் உள்ள பெரும்பாலான குழந்தை களுக்கு அறுவைச் சிகிச்சை இல்லாமல் வழக்கமாகப் பிறந்ததில் இருந்தே தசை நீட்சி, மாவுக்கட்டு (பொன் செட்டி முறை) , பிணைச்சட்டம் (brace) போன்றவற்றின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுப் படிப்படியாகச் சரிசெய்யப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் குதிகாலின் தசை நாரானது தொடர்ந்து இறுக்கம் அடைகிறது. இதனை விடுவிக்க ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்தச் சிகிச்சையின் போது மருத்துவரால் மிகமெல்லியக் கருவியால் தசைநார் வெட்டப்படுகிறது. இந்தக் காயமானது தையல் போடத் தேவையில்லாத அளவு மிகச் சிறியதாக இருக்கும். காயம் ஆறும் வரை அந்தத் தசை நாரைப் பாதுகாக்க மாவுக்கட்டுப் போடப்படும். மாவுக் கட்டு நீக்கப்பட்ட நேரத்தில், குதிகால் தசைநார் சரியாக நீண்டு, பிறவி வளைபாதம் முழுமையாகச் சரி செய்யப்படுகிறது. 

குழந்தைக்கு ஒரு சில ஆண்டுகளுக்குப் பிரேஸ் (Brace) என்னும் பிணைச் சட்டம் அணிவிக்கப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் நான்கு ஆண்டுகள் இந்தப் பிணைச் சட்டத்தை அணியவேண்டி இருக்கும். பிணைச் சட்டத்தை  பராமரிக்கும் விதத்தில் சரியான கோணத்தில் கால் இருக்கும்படி அவ்வப்போது திருத்தி அமைக்கப்படும். இந்தப் பிணைச்சட்டத்தை இரவு நேரங்களில் பெரும்பாலும் பயன்படுத்த வேண்டும். சுமார் 20% பேருக்கு, மேலும் அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவதுடன் ஆரம்பத்திலேயே சிகிச்சை தொடங்கும்போது குழந்தைக்கும் ஆறுமாதம் முடிவதற்குள் முற்றிலுமாக கால் நேராகி குழந்தை ஒரு வயதில் நடக்கும்போது எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் இருக்க முடியும்.

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: