மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பைப் பறித்த தமிழக அரசு – தோழர் இரா.முல்லைக்கோ, பெங்களூரு.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டில்அரசு பொறுப்பேற்றது, இரு பெரும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஒன்று சுயமரியாதைத் திருமணம்: முன்னர் நிகழ்ந்தவையும் இனி நிகழ்விப்பதும் செல்லுபடியாகும் என்றும் இரண்டாவதாக மதராஸ் ஸ்டேட் என்ற பெயரினைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றினார். இது ஒரு வரலாற்றுப் பதிவாகும். இதற்கு பின்னர் தான் தங்களின் மாநிலத்தின் பெயர்களை மாற்றியுள்ளனர் என்பது அறிந்தத் தகவலாகும். மண்ணின் மைந்தர்கள் என்ற எழுச்சி முழக்கம் தலையோங்கி ஒலிக்கத் தலைப்பட்டது ஒரு நாட்டின் மக்களுக்குக் கல்வி மிகவும் இன்றியமையாதத் தேவையாகும். அதுவும் தாய் மொழிக் கல்வியாக இருப்பதே சிறப்பாகும். அக்கல்வியின் வழி அவரவர் திறமைக்கேற்ற வேலை அந்நாட்டிலேயே இருக்க வேண்டும். இது அந்நாட்டு அரசின் கடமையாகும். அப்போது தான் அந்நாட்டு அனைத்துத் தரப்பு மக்களின் மகிழ்ச்சியும் பொருளியல் வளர்ச்சியும் மேம்பட முடியும். சான்றாக இரண்டாம் உலகப் போரில் சின்னாபின்னமுற்ற சப்பானை நாம் காண்கிறோம்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாயப்புகளில் முன்னுரிமை என இந்திய மாநிலங்கள் பலவும் சட்டங்கள் இயற்றியுள்ளன. 1968இல் மகாராட்டிரமும், 1986இல் கருநாடகமும், 1995இல் குசராத்தும் 1999இல் மேற்கு வங்கமும், 2003இல் இமாச்சலப் பிரதேசமும், 2007இல் உத்திரகாண்டும், 2008இல் ஒடிசாவும், 2010இல் மத்திய பிரதேசமும், 2014இல் கேரளாவும், 2015இல் சதீசுகரும், 2017இல் சார்கன்டும், 2017இல் ஆந்திராவும், 2017இல் தெலுங்கானாவும், 2017இல் கோவாவும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை என்ற சட்டத்தினை நிறைவேற்றி செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் 362 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 24 மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இம் மருத்துவக் கல்வி வாய்ப்பை தமிழர்களுக்குக் கிடைக்காமல் பறித்திடும் வகையில் கொண்டு வரப்பட்டதே ‘நீட்” தேர்வு முறை. இதனால் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவை கானல் நீராக்கிவிட்டது. மய்ய மாநில அரசுகள் – ஒரு கிராமத்தில் பிறந்து பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1169 மதிப்பெண்ணை வாங்கி விட்டு ‘‘நீட்’’ தேர்விலும் நெகட்டிவ் மார்காலும் உயிரை விட்ட அனிதா போன்ற ஏழைகளைப் பற்றி அவர்கள் நினைப்பதற்கே நேரமில்லை. இது ஒரு போராட்டத்தின் துவக்கம் தான். இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் நீட்டை ஒழிப்பது முதன்மை பெற்றுள்ளது. மய்ய அரசின் தேர்வுகளில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும் தேர்வு மொழியாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தேர்வு பெற்று மய்ய அரசுப் பணிகளைத் தமிழ்நாட்டில் பெற முடியாத நிலையுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள், அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தேர்வு எழுதி ‘‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” (ஜிழிறிசி) மூலமாக வேலை பெறுவதே ஒரே வழியாக இருந்தது. இத்தேர்வாணையத்திலும் ஏராளமான முறைகேடுகளை ஆணைய உறுப்பினர்களே செய்தனர். இது கேவலத்தின் முதல் கேவலம். இந்த முறையிலும் மண்ணை அள்ளிப் போட்டு இப்போது தமிழக அரசு கேடாய் ஒரு ஆணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் திருத்தி, அயல்நாடுகளில் இருந்தும் வடமாநிலங்களில் இருந்தும் தமிழக அரசின் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற ஆணையை வெளியிட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய வஞ்சம் நிறைந்த கொடும் செயலாகும். தமிழர்களை வஞ்சிக்கும் பெருங்கேடு. தமிழகத்தில் இயங்கும் மய்ய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித்துறை, அஞ்சலகத் துறை, வருமான வரித்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் வடநாட்டவர்களின் பணி அமர்வே நிகழ்கின்றது. இதில் ஏதாவது ஒரு துறையில் ஒரு தமிழர் தலைகாட்ட இயலுமா? கனவுதான் காண இயலுமா?

பொறியியல் பட்டதாரிகள் பெரும் அளவில் அய்.அய்.எம்., அய்.டி-களில் கடுமையாக மிகக் கடுமையாகத் திறமை அடிப்படையில் பணியில் சேர்ந்ததால் தமிழகம் சற்று சரிவாய் உள்ளது. வேலை வாய்ப்புகளில் ஒரு சார்பாளர்கள் மத்தியில்.

வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வாழ்வோர்க்கு வேலை வாய்ப்பில் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டில் வாழும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்புகளில் கல்லறைக்கு அனுப்ப வேண்டிய தேவை என்ன வந்தது? யாருக்காக இப்படியொரு கேடான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது? யாரை நிறைவு செய்ய? எவற்றைப் பெற இப்படியொரு இழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேடான செயலை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உடனடி ஆணை வெளியிட திருச்சியில் எழுந்த எழுச்சி பேரணியை நடத்திய தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட்ட எச்சரிக்கை எழுப்பப்பட வேண்டும்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும் (448 குறள்)

வள்ளுவரின் வாய்மொழி வெல்லும், உறுதி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s