நெற்றியில் வியர்வைத் துளி ஏனோ? – தோழர் ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து, லண்டன்

புத்தகக் கண்காட்சி சாலை எங்கும் மனிதத் தலைகள். தலைகள் அலை அலையாய் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாய் இருக்கிறது. பல நூறு கடைகள். கடை என்பதைக் காட்டிலும் நூலகங்கள் என்றே சொல்லலாம். புத்தகம் வாசிக்கும் பழக்கமே குறைந்து விடுமோ என்று ஏங்கிய காலம் போய், அறியாமை இருள் நீங்க அறிவுக்கடலை தேடி அலை அலையாய் தலைகள் வந்திருப்பது மகிழ்ச்சிதானே!

இந்த மகிழ்ச்சியோடு சற்றே திரும்பினால், சிற்றுண்டி கடைகளோ, நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா என்று, அங்கேயும் கூட்டம் மொய்க்கிறது. வடை கடை ஒன்றில் வடகலை நாமம் இட்ட ஸ்ரீராமானுஜம் ‘தன் கடன் வடை உண்டு களிப்பதே’ என்பதாக, வடையை ரசித்து ருசித்து உண்கிறார்.

அதே கடை நோக்கிப் புத்தகப் பைகளுடன் ஓர் இளைஞனும், ஒரு சிறுவனும் வருகின்றனர். சிறுவனுக்கோ களையான முகம். கண்களே பேசுகிறது அந்த சிறுவனுக்கு. அந்த இளைஞனோ அறிவுத்தேடலின் சாட்சியாய் இருக்கிறார். சிறுவன் பெயர் ‘செல்வன்’. இளைஞன் பெயர் ‘அருள்’.

அருள் இரண்டு கைகளிலும் புத்தகப் பையை வைத்துக் கொண்டு இருக்கிறார். செல்வன் தன் சிறு வயதுக்கு ஏற்றார்போல் ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் தூக்கிக் கொண்டு நடந்து வருகிறார்.

யார் இந்த இருவர்? தந்தையும் மகனுமா? அண்ணனும் தம்பியுமா? என்று குழம்பி நோக்கும் போதே, செல்வன் அருளைப் பார்த்து, “மாமா! பசிக்குது மாமா. சாப்பிட ஏதாச்சும் வாங்கித்தரேன்னு சொன்னீங்களே.  வடை வாங்கித் தரீங்களா?” என மாமா அருளை பார்த்துக் கேட்கிறார்.

நூல் கடை எல்லாம் நடை நடையாய் நடந்து களைத்திருந்த அருளுக்கும் சற்று இடைவேளை தேவைப்பட்டது. “சரி வா செல்வா!” என கடைக்கு மிக அருகில் செல்கின்றனர்.

இவற்றையெல்லாம் வடை சாப்பிட்டுக் கொண்டே கவனித்து வந்த ஸ்ரீராமானுஜம், செல்வனையும், அருளையும் ஏற இறங்க பார்க்கிறார். பார்த்துக்கொண்டே, வருகிறவர்கள் எங்கே தன் மேல் தீண்டி விடுவரோ என, தான் உட்கார்ந்திருக்கும் ஸ்டூலை சற்றே பின்னே நகர்த்திக் கொள்கிறார்.

ஸ்ரீராமானுஜம் பக்கத்தில் இருந்த இரண்டு ஸ்டூலில் அருளும் செல்வனும் அமர்கின்றனர். செல்வனுக்கோ அகோர வயிற்றுப்பசி. கடை முழுவதையும் கண்ணாலேயே தின்றுவிடுவார் போல. அருளுக்கோ அறிவுப்பசி அடங்கிய ஆனந்தம். இருக்காதா பின்னே. தான் வாங்க விரும்பிய புத்தகங்களை வாங்கிய மனநிறைவு அருளுக்கு. செல்வனுக்கு வேண்டிய சிற்றுண்டியை வாங்கிக் கொடுக்கிறார் அருள். தனக்கு வேண்டியதையும் வாங்கிக் கொண்டு அமர்கிறார் அருள்.

செல்வன் வடையை வாயில் வைத்து மென்றபடியே, “ஏன் மாமா? இவ்ளோ புக் வாங்கறீங்க?” என்கிறார்.

அருள், “படிக்கத்தான்”.

செல்வன், “அதான் ஸ்கூல்ல படிக்கறோமே. அப்பறம் ஏன் வெளியில் புக் வாங்கி படிக்கனும்?”.

அருள், “பள்ளிக் கூடத்தில் படிக்கறது அடிப்படைக் கல்வி. அதாவது அடிப்படை அறிவு. நாமா தேடித் தேடி படிக்கறது பொது அறிவு, உலக அறிவுக்காக”.

செல்வன், “அடிப்படை அறிவு மட்டும் போதாதா? உலக அறிவு வேற தனியா வேணுமா?”

அருள், “ஆமாம். கண்டிப்பா வேணும். ஒரு காலத்தில அடிப்படை அறிவு கூட கிடைக்க விடாம தடுத்தாங்க”.

செல்வன், “அப்படியா?” என வாய் பிளந்து கேட்கிறார்.

அருள், “ஆமாம். இப்பதான் ஒரு நூற்றாண்டா அடிப்படை அறிவே நமக்கு கிடைச்சிருக்கு”.

செல்வன், “ஓ!”

அருள், “வெறும் அடிப்படை அறிவு மட்டும் இருந்தா போதாது. இந்த பொல்லாத காலத்தில், எப்படியாவது இந்த அடிப்படை அறிவையும் பறிக்கலாம்னு பல கழுகுகள் பார்க்கும். நாமதான் கவனமா இருக்கனும். உலக அறிவு இல்லாட்டி அடிப்படை அறிவும் அசால்ட்டா காலியாயிடும்”.

இவர்கள் பேசுவதையெல்லாம் கழுகு போல் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருந்த ஸ்ரீராமானுஜம் முகம் எட்டுத்திக்கும் கோணலாய் போகிறது.

ஸ்ரீராமானுஜம் மெல்ல செல்வனைப் பார்த்து, “ஏண்டா அம்பி! என்ன புத்தகம் கையில வெச்சிருக்க? இவ்ளோ மொத்தமா இருக்கே!” என சொல்ல, செல்வனோ புத்தகத்தின் மேல் இருந்த கையை சற்றே நகற்ற, ‘பெரியார் இன்றும் என்றும்’ என்று எழுதி இருக்கிறது.

இதைப் பார்த்துக் கொண்டே ஸ்ரீராமானுஜம், “ஓஹோ! இதுதானா” என ஏளனமாய் கூறுகிறார்.

அருளைப் பார்த்து, “ஏண்டா அம்பி! கை நிறைய பை இருக்கே. அப்படி என்ன அதிசயம்டா அம்பி வாங்கின?” என வடையை மெல்ல கிள்ளி வாயில் இட்டபடியே, எள்ளி நகையாடி கேட்கிறார்.

அருள், “ஓ! அதுங்களா. என் முனைவர் பட்ட ஆய்வுக்கு சில ஆங்கில நூல்களும், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில நூல்களும், பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சில நூல்களும், தமிழில் சில நூல்களும் வாங்கி இருக்கிறேன்” என்கிறார்.

ஸ்ரீராமானுஜம், “ஓஹோ! நீயெல்லாம் எதுலடா அம்பி பட்டம் வாங்க போற…” என இளக்காரமாக இழுக்கிறார்.

அருள் பொறுமையாக, “மொழி பெயர்ப்பு பற்றிதான், முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்கிறேன்” என்கிறார்.

சிறுவன் செல்வன் இடை மறித்து, “மொழி பெயர்ப்புன்னா என்ன மாமா?”.

சற்றே யோசித்த அருள், “ம்… நம்ம தாய்மொழி என்ன?”.

செல்வன், “தமிழ்”.

அருள், “தமிழ் இல்லாம, வேற மொழிகள் சில இருக்குதானே”.

செல்வன், “ஆமாம் இருக்கு. நிறைய இருக்கு”.

அருள், “நம்ம தாய்மொழி தமிழ் இல்லாம உனக்கு தெரிஞ்ச சில அயல்நாட்டு மொழிகளைச் சொல்லேன் பார்ப்போம்”.

செல்வன், “ம். இங்க்லீஷ் (ணிஸீரீறீவீsலீ), சேன்ஸ்கிரிட்

(ஷிணீஸீsளீக்ஷீவீt), பிரெஞ்ச் (திக்ஷீமீஸீநீலீ), ஜெர்மன் (நிமீக்ஷீனீணீஸீ)”

அருள், “ம். சுட்டிப் பையன். அயல்நாட்டு மொழிகள்  நிறைய தெரிஞ்சு வச்சு இருக்கியே. அருமை” என்று செல்வனைப் பாராட்டுகிறார்.

ஸ்ரீராமானுஜம், “இங்கிலீஷ் புக்ஸ்ல என்னல்லாம் வாங்குனடா அம்பி?”.

அருள், “ஷிtமீஜீலீமீஸீ பிணீஷ்ளீவீஸீரீs-ன் ‘கி ஙிக்ஷீவீமீயீ லீவீstஷீக்ஷீஹ் ஷீயீ ஜிவீனீமீ’ ”.

ஸ்ரீராமானுஜம், “ம்”.

செல்வன், “ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ல tக்ஷீணீஸீsறீணீtமீ பன்ன புக்ஸ் என்ன வாங்கினீங்க மாமா?”.

அருள், “மூலதனம்”.

சிறிது யோசித்தபடியே இருந்த ஸ்ரீராமானுஜம், “ஏதோ வெளிநாட்டு மொழியில எழுதி தமிழ்ல ஜிக்ஷீணீஸீsறீணீtமீ பன்ன புத்தகம் வாங்கினேன்னு சொன்னியோன்னோ, அது என்ன பொத்தகம்டா அம்பி?” என ஆவலாய் கேட்கிறார்.

அமைதியாய், ஆழமாய், “ராமாயணம். மஹாபாரதம். பகவத் கீதை” என்கிறார் அருள்.

ஸ்ரீராமானுஜம், “என்னது?” என சத்தமாய் கேட்க.

தீர்க்கமாய், “ராமாயணம்… மஹாபாரதம்…. பகவத் கீதை..” என்கிறார் அருள்.

ஏனோ தெரியவில்லை, ஸ்ரீராமானுஜம் முகம் வெளிறிப்போய் இருக்கிறது.

செல்வன், “தமிழ்ல எழுதின புக் ஏதோ வாங்கினேன்னு சொன்னீங்களே, அது என்ன புக் மாமா?”

அருள், “ஓ! அதுவா! வேத இழிவுகளை விளக்கும் ‘ஞான சூரியன்’, அப்பறம் பகவத் கீதையின் இழிவை விளக்கும் ‘பகவத்கீதையின் மறுபக்கம்’ ”

ஏனோ தெரியவில்லை முகம் வெளிறிப்போய் இருந்த ஸ்ரீராமானுஜத்தின் நெற்றியில், இப்போது வியர்வைத் துளிகள் துளிர் விட்டு இருக்கிறது.

செல்வன், ‘‘சரி மாமா. நான் பெரிய பையனான உடன் உங்க லைப்ரரிலேந்து புக்கெல்லாம் படிக்க கொடுங்க. இப்போதைக்கு மொத்தமா இருக்கற இந்த ஒத்த புக்க தலைக்கு தலவாணியா வெச்சுக்கறேன்” என வேடிக்கையாய் சிரிக்கிறார். அருளும் செல்வனுடன் சேர்ந்து சிரிக்கிறார்.

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: