குழந்தைகளின் எலும்புகளைப் பாதிக்கும் ரிக்கெட்ஸ் என்னும் எலும்பு மெலிவு நோய் – மரு.சிவராஜ், M.S.Ortho.,

ரிக்கெட்ஸ் என்னும் எலும்பு மெலிவு நோயானது ஆறு மாதத்தில் இருந்து மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கக் கூடியது. இந்த நோயால் வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி தடைபட்டு அதனால் எலும்பு அமைப்பில்மாறுதல்கள் உண்டாகிறது.

எதனால் வருகிறது     

எலும்புகள் வளர்ச்சிக்கு முக்கியமான  வைட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படும் ரிக்கெட்ஸ் நோயே பெரும்பான்மையாகஉள்ளது. இது மட்டும் அல்லாமல் உணவில்  கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்றாக் குறையாலும் வர வாய்ப்புண்டு. இந்தவைட்டமின்  டி ஆனது சூரிய ஒளி நம் தோலின் மேல் படுவதால் நம் உடலிலேயே போதுமான அளவு உற்பத்தி ஆகிறது. 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அதிகப்படியான எலும்பு  வளர்ச்சிக்கு  அவர்கள் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி அளவும் அதிகமாகத் தேவைப்படுகிறது. சைவ உணவுப்பழக்க முறையால் மீன், ஈரல், முட்டை மற்றும் பால் , பால் பொருட்களில் காணப்படும் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும். வளரும் நாடுகளின் ஏழைக்குழந்தைகளில் இந்த நோய் பரவலாகக் காணப்படுவதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் காரணமாக உள்ளது.

நோய்க்கான அறிகுறிகள்

பொதுவாக ரிக்கெட்ஸ் நோயுடைய குழந்தைகளுக்கு  எலும்புகளில் வலி, அடிக்கடி அழுது கொண்டே இருத்தல், வயதைஒத்த குழந்தைகளை விட வளர்ச்சி குறைவாக இருத்தல், வயிறு உப்பி இருத்தல், எளிதில் நோய் வாய்ப்படுதல், தசைகள் வலுவின்றி இருத்தல்  போன்ற பொதுவான அறிகுறிகளும்,

பிறந்த குழந்தைகளுக்கு உச்சி மூடுவது பொதுவாக 3 மாதங்களுக்குள் நிகழும். இந்நோயுள்ள குழந்தைகளுக்கு உச்சிமூடுவது தாமதமாக இருக்கும். தலைப்பகுதி புடைத்தல், மண்டை ஓடு மிருதுவாக இருத்தல், நடக்கும் வயதுடையகுழந்தைகள் கால்முட்டி எலும்புகள் வில் போல உள்நோக்கியோ அல்லது வெளிநோக்கியோ வளைதல், முதுகுத் தண்டு வளைதல்  போன்ற எலும்பு சார்ந்த அறிகுறிகளும் காணப்படும்.

நோயைக் கண்டறிவது

நோயின் அறிகுறிகளும், ஊடுகதிர் பரிசோதனை (ஙீ-க்ஷீணீஹ்), எலும்பு அடர்த்தி பரிசோதனை (ஙிவிஞி-ஙிஷீஸீமீ விவீஸீமீக்ஷீணீறீ ஞிமீஸீsவீtஹ்) மற்றும் இரத்த பரிசோதனைகள்(க்ஷிவீt ஞி, சிணீறீநீவீuனீ,றிலீஷீsஜீலீஷீக்ஷீus) நோயைக் கண்டறியவும், உறுதிப்படுத்தவும் பயன்படுகின்றன.

மருத்துவம்

வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ள மீன், ஈரல், பால், முட்டை ஆகியன அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சூரிய ஒளிஅதிகம் உடலில் பட வகை செய்யும்போது விட்டமின் டி குழந்தையின் உடலிலேயே உற்பத்தி ஆகும் வாய்ப்பு அதிகம்உள்ளது.

பொதுவாக வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து மருந்துகளாக கொடுக்கப்படும்போது  நோயின் அறிகுறிகள் ஒரேவாரத்தில் குறைய ஆரம்பிக்கிறது. சிறுவயது குழந்தைகளின் எலும்பில் ஏற்படும் மாற்றம் கூட காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும்.

அதிகமாக வளைவுற்ற எலும்புகளோ அல்லது வயதில் பெரிய குழந்தைகளுக்கோ அறுவை சிகிச்சை மூலம்சரிசெய்ய வேண்டிய நிலையும் வரலாம்.

வருமுன் காப்பதே மேல்

– அடிக்கடி சூரிய ஒளி உடலில் படுமாறு செய்வது

– மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கால்சியம், வைட்டமின் டி சத்து மிக்க உணவுப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது

-நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து  மருத்துவரிடம் காட்டும்போது எலும்புகளில் ஏற்படும் மாற்றத்தையும் தடுக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s