பெரியாரைக் கண்டதில்லை : ஆசிரியரைக் காண்கிறோம்! – தோழர் சே.மெ.மதிவதனி

‘‘பாராட்டி போற்றி வந்த பழமைலோகம்

ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்,

ஈவேரா என்ற வார்த்தை:

இந்நாட்டுஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாய்”

என்கின்ற முத்தமிழறிஞர் கலைஞரின் வரிகளுக்கேற்ப இறந்து 45 வருடங்கள் ஆகியும் ஆரியத்தின் அடிநாதத்தை ஆட்டிப் பார்க்கும் ஒற்றை தலை இராவனணாகப் பெரியார் மட்டுமே இருக்கிறார், ஒரு தலைவன் வாழ்ந்த காலக் கட்டத்தில், அவருக்கு இன எதிரிகள் இருந்தால் அது எதார்த்தம், ஆனால் ஒரு தலைவனின் சிலையே இன எதிரிகளை இவ்வளவு உலுக்குகிறது என்றால், நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரே செய்தி:

பெரியார் சிலை அல்ல: சித்தாந்தம்

பெரியார் கற்சிலை அல்ல: கொள்கை பெருவெடிப்பு!

தமிழ்நாட்டின் அரசியல் மட்டுமல்ல தேசிய அரசியலையும் பெரியார் என்ற ஒற்றை தலைவனின் பின்னாள் சுழல்கிறது என்பது நடந்துவரும் சம்பவங்களின் மூலம் கண்கூடு, கடந்த 2018-ல் பி.ஜே.பி. என்ற மதவாத கட்சியைச் சேர்ந்த ஒரு சிவகங்கை மாவட்ட மனநோயாளி திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போல் தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா. சிலைகள் உடைக்கப்படும் என்று உளறியபோது, அந்த உளறலுக்கே தமிழகம் குலுங்கியது. ஓட்டுமொத்த தமிழக இளைஞர்களும் கட்சி, இயக்க வேறுபாடின்றி ஒன்றிணைந்து ஆரிய அடிவருடிகளையும், ஆரிய வந்தேரிகளையும் கதிகலங்கச் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் 2018 அய்யாவின் சிலை உடைக்கப்பட்டது, திட்டமிட்டே மத்தியில் ஆளும் மதவாத ஆட்சியின் தாய்க் கழகம் ஆர்.எஸ்.எஸ்.-ன் கைக்கூலிகள் ஆளும் மாநில கட்சியின் துணையோடு இந்த வருடமும், ஏப்ரல் 8, 2019 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அய்யா பெரியாரின் சிலையில் தலை உடைக்கப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் திராணியற்ற அயோக்கியக் கயவர்கள் செய்த வேலை என்று நாம் கடக்க முடியாது, காரணம் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டதையும் அதற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிரச்சாரமும் அடித்தளமாக இருப்பதை எண்ணி அஞ்சி தேர்தல் ஜுரத்தின் விளைவுதான் இந்த சிலை உடைப்பு, பெரியார் என்ற தலைவனின் சிலை இவர்களை உறுத்தக் காரணம்,

தமிழகம் மதச்சார்பற்ற அமைதி பூங்காவாக இருக்கிறது

காரணம் பெரியாராகவே இருக்கிறார்.

இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் கலவரம் தூண்ட, ஒரே வழி பெரியார் சிலையைத் தாக்குவது, ஆசிரியர் வீரமணியாரின் பிரச்சாரப் பயணங்களில் கலவரம் தூண்டுவது என்ற நிலைப்பாட்டை ஆயுதமாக இந்துத்துவா கயவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். எந்த கிழவன் மூத்திரச் சட்டி ஏந்தவில்லையென்றால் நம் சூத்திரப் பட்டம் நீங்கி இருக்காதோ, அவர் சிலையை உடைக்கும் கயவர்கள் ஆரியத்திற்கு விலைபோனவர்கள், அப்படி விலைபோன மடையர்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது, அவர்கள் காவி சட்டை போட்டாலும், காவி துண்டு அணிந்தாலும், ஜெய்காளி சொன்னாலும், பாரத மாதா கி ஜே என்று முழங்கினாலும் அவர்கள் ஏற்றுக்கொண்ட இந்து மதப்படியும், ஆர்யப் பார்வையிலும் நீங்கள் சூத்திரர்களே (வேசி மகன்களே), இதையெல்லாம் மறந்து கேவலம் பணமும், பலமும் உங்கள் பிரப்பையே விலை பேசியிருக்கிறது, அப்படி விலைபோனவர்கள் தான் ஏப்ரல் 9, 2019 அன்று திருப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலவரம் தூண்ட வேண்டும், ஆசிரியர் வீரமணி அவர்களை தாக்க வேண்டும் என்ற குறுக்கு புத்தியுடன் அவரின் வாகனத்தை வழிமறித்து தாக்க முயற்சித்தனர், திராவிடர் இயக்க சிந்தனையாளர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தாய்க் கழகத் தலைவருக்கு பிரச்சனை என்றால், இன உணர்வோடு முன்னே நிற்பார்கள் என்பதை திருப்பூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் அய்யா செல்வராஜ் அவர்கள் நிரூபித்துள்ளார்.

அவர் வாகனம் தாக்கப்பட்டபோது கீழே இறங்கி அவர் பேசிய தோரணை சொல்லும், நாங்கள் தந்தை பெரியாரின் பாசறையில் கொள்கை பாடம் பயின்றவர்களின் வழித்தோன்றல்கள் என்று, திருப்பூர் இந்துத்துவாவின் கோட்டை என்று கனவு கண்டவர்கள் நிஜத்தில் ஆட்டம் கண்டனர், கருப்புச் சட்டை பட்டாளத்தின் முன் 86 வயது தலைவனின் பேச்சும், நடையும், கொள்கை வேட்கையும், அவர் பெரியாரின் மீது கொண்ட தீராக் காதலும் ஆரிய அடிமைகளையும், பார்ப்பனிய பனியா கூட்டத்தையும் கதிகலங்கச் செய்கிறது. தேர்தல் நேரம் என்பதால் இவரின் தேர்தல் பரப்புரைகள் கலக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. அவ்வளவு இடைமறிப்பையும் தாண்டி அவர் திருப்பூரில் ஆற்றிய உரை என்பது, ‘‘பெரியாரின் வாழ்நாள் மாணவர் அவர்தாம்” என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது. அய்யா வீரமணி கொள்கை முழக்கமிட்டார்.

‘‘76 ஆண்டுகள் பொதுவாழ்க்கை அனுபவம் உண்டு, எந்தக் காலித்தனமும் எங்களை அடக்கிவிட முடியாது, கொள்கைக்காக உயிர்த்தியாகமும் செய்யத் தயார்” என்ற வீரக் கொள்கை முழக்கம் கேட்கும் போதெல்லாம் நம்மை உணர்வு பெறச் செய்கிறது, பெரியார் மறைந்துவிட்டார் ஆட்டம் கட்டலாம் என்று எண்ணியவர்களின் எண்ண ஓட்டமெல்லாம் இவரின் கர்ஜனை கேட்டு ஒரு நிமிடம் ஆட்டம் தான் கண்டிருக்கும்.

‘‘பெரியார் சிலையும்

86 வயது வீரமணியாரின் நடையும்

இன எதிரிகளை உலுக்குகிறது என்றால்

அதுவே அவர்களின் கொள்கை வெற்றி”

இன எதிரி யாரைக் கண்டு அஞ்சுகிறானோ அவரே எம் தலைவர் என்ற கூற்றின்படி சிந்தித்தால் என்றும் தந்தை பெரியாரும் அவரின் கொள்கை வாரிசு ஆசிரியர் வீரமணி அவர்களும் தான் இன உணர்வு கொண்டவர்களின் தலைவர்களாக இருக்க முடியும், தேர்தல் வரும்: போகும்: ஆனால் இனப்போர் – ஆரியத்திற்கும்-திராவிடத்திற்குமான இனப்போர் நடந்து கொண்டே இருக்கும். இறுதி வெற்றி திராவிடத்திற்கே: இறுதி வெற்றி பெரியாருக்கே: இறுதி வெற்றி கருப்புச்சட்டைக்கே.

இக்கால இளைஞர்கள் தந்தை பெரியாரைக் கண்டதில்லை, அவர் இருந்தால் என்ன நிலைப்பாடு எடுத்திருப்பார் என்பதைத் தமிழர் தலைவர் வீரமணியின் வழியாகக் காண்கிறோம்

‘‘பெரியாரைக் கண்டதில்லை: அவரின்

தொடர்ச்சியை இவரை மட்டுமே காண்கிறோம்”

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: